நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

பொதுத்தமிழ் - ஒன்பதாம் வகுப்பு (ப) - மாதிரித்தேர்வு - 16


  1. ஒரு நாட்டின் முன்னேற்றம் என்பது, அந்த நாட்டு மக்கள் பெற்றிருக்கும் கல்வி, அறிவாற்றல் ஆகியவற்றை பொறுத்தே அமைகிறது. எத்தகைய கல்வி தன்னம்பிக்கையை தந்து ஒருவனைச் சொந்தக்காலில் நிற்கும்படி செய்கிறதோ அதுதான் உண்மையான கல்வி. எனக் கூறியவர்.
    1. அண்ணல் காந்தியடிகள்
    2. அறிஞர் அண்ணா
    3. மு.வரதராசனார்
    4. விவேகானந்தர்

  2. “வையக மெல்லா மெமதென் றெழுதுமே மொய்யிலைவேல் மாறன் களிறு“ என்ற பாடல இடம்பெற்ற நூல்
    1. மணிமேகலை
    2. முத்தொள்ளாயிரம்
    3. இரட்சணிய்யத்திரிகம்
    4. கலிங்கத்துப்பரணி

  3. கீழ்கண்டவற்றுள் தவறான பொருத்தம்
    1. வன்கண் - கொடை தன்மை
    2. துலை - துலாக்கோல்
    3. மருப்பு - தந்தம்
    4. விசும்பு - வானம்

  4. பொருத்துக

    (1) “பாடு“ எனக் கூறியவுடன் பாடுபவர் (a) சித்திரகவி
    (2) செவிக்கினிய ஓசைநலம் சிறக்கப்பாடுபவர் (b) வித்தாரக்கவி
    (3) சொல்லணி அமைத்து பாடுபவர் (c) மதுரகவி
    (4) தொடர்நிலைச் செய்யுளும், தூயகாப்பியங்களும் இயற்றுபவர் (d) ஆசுகவி
    1. c d a b
    2. d c a b
    3. b c d a
    4. a b c d

  5. “கவிமணி“ எழுதிய நூல்களில சரியற்றதை தேர்ந்து எடு
    1. (d) குழந்தைச் செல்வம்
    2. (a) மலரும் மாலையும்
    3. (b) மருமக்கள் வழி மான்மியம்
    4. (c) குழந்தை இலக்கியம்

  6. மணி மேகலை யாருடைய அறிவுரைப்படி, ஆதிரையிடம், முதன் முதலில் பிச்சையேற்றள்
    1. தீவத்திலகை
    2. அறவணவடிகள்
    3. சுதமதி
    4. கவுந்தியடிகள்

  7. மணிமேகலையில் “ஆபுத்திரன் நாடு அடைந்த காதை“ எத்தனையாவது காதை
    1. 22
    2. 23
    3. 24
    4. 21

  8. இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத் துறந்தார் துறந்தார் துணை என்ற குறளில் பயின்று வரும் பொருள்கோள்
    1. தாப்பிசைப் பொருள்கோள்
    2. விற்பூட்டுப் பொருள்கோள்
    3. கொண்டு கூட்டு பொருள்கோள்
    4. மொழிமாற்றுபொருள்கோள்

  9. கவிஞர், தாம் கருதிய பொருளையும் ஒப்புமைப் பொருளையும் வெவ்வேறு எனக் கூறாமல், இரண்டும் ஒன்றெனக் கூறுவது
    1. உவமை
    2. வேற்றுமை அணி
    3. உருவகம்
    4. உம்மைத் தொகை

  10. கீழ்கண்வற்றுள் சரியான கூற்றை தேர்ந்தெடு
    1. என் புத்தகம் இதுவன்று
    2. என் புத்தகம் இவையல்ல
    3. என் புத்தகங்கள் இதுவன்று
    4. என் புத்தகங்கள் இது அன்றோ!



Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!