நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

பொதுத்தமிழ் - ஒன்பதாம் வகுப்பு (ப) - மாதிரித்தேர்வு - 7


  1. நகைச்சுவை என்பது எள்ளல், இளமை, அறியாமை, மடமை ஆகிய நான்கு காரணங்களால் தோன்றுகிறது எனக் கூறும் நூல்.
    1. கம்பராமாயணம்
    2. திருக்குறள்
    3. தொல்காப்பியம்
    4. கலிங்கத்துபரணி

  2. மருமக்கள் வழிமான்மியம் என்ற நகைச்சுவை நூலை எழுதியவர்
    1. கவிமணி தேசிய விநாயகர்
    2. பேராசிரியர் பெ. சுந்தரனர்
    3. நாமக்கல் கவிஞர்
    4. காளமேகப்புலவர்

  3. ஊருணி நீர் நிறைந் தற்றே உலகவாம் பேரறிவாளன் திரு என்ற குறளில் பயின்று வரும் அணி
    1. எடுத்துகாட்டு உவமையணி
    2. உவமையணி
    3. உருவக அணி
    4. நிரல் நிறை அணி

  4. நிலைமொழியும், வரும் மொழியும் சேரும்போது எவ்வித மாற்றமும் ஏற்படவில்லையென்றால்
    1. இயல்பு புணர்ச்சி
    2. விகாரப்புணர்ச்சி
    3. திசைப்பெயர்ப் புணர்ச்சி
    4. பண்பு புணர்ச்சி

  5. வில்லிபாரதம் பருவம், பாடல்கள் எண்ணிக்கை
    1. 10பருவம்,4380பாடல்கள்
    2. 10பருவம்,4360பாடல்கள்
    3. 10 பருவம், 4300 பாடல்கள்
    4. 10பருவம்,4350பாடல்கள்

  6. முடியரசனின் தமிழக அரசு பரிசு பெற்ற காவியம்
    1. வீரகாவியம்
    2. பூங்கொடி
    3. காவியப்பாவை
    4. முடியரசன் கவிதைகள்

  7. கீழ்கண்டவற்றில் “பாவணர் சிறப்பு” பெயர்களில் தவறானவை
    1. செம்மொழி தேனி
    2. தமிழ்ப்பெருங்காவலர்
    3. செந்தமிழ் ஞாயிறு
    4. செந்தமிழ் செல்வர்

  8. கீழ்கண்டவற்றில் தவறான பொருத்தம்
    1. தமிழை தழைக்க செய்தவர் மறைமலையடிகள்
    2. தமிழன் தொன்மையை உலகறிய செய்தவர் - கால்டுவெல்
    3. தமிழ் மிகவும் பண்பட்ட மொழி - கிரௌல்
    4. தமிழை ஆலென வளர்த்து மாண்புற செய்தவர் - பாவணர்

  9. பொருத்துக
    (1) இடை + அழகு (a) மெய் முன்மெய்
    (2) மண் + அகல் (b) உயிர் முன்மெய்
    (3) களி + மூக்கு (c) மெய் முன் உயிர்
    (4) மரம் + கிளை (d) உயிர்முன் உயிர்
    1. d a c b
    2. a b c d
    3. d b c a
    4. d c b a

  10. இறைவனையோ, நல்லோரையோ பாட்டுடைத் தலைவராக கொண்டு அவரைக் குழந்தையாக கருதி பாடப்பெறுவது.
    1. தூது
    2. பிள்ளைத்தமிழ்
    3. கலம்பகம்
    4. உலா



Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!