நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

பொதுத்தமிழ் - மாதிரித்தேர்வு - 1


  1. உலக வரலாற்றிலேயே மேதையான மாணிக்கவாசகரைவிடப் புலமை, உழைப்பு, துன்பத்தை பொறுத்தல், இடையறா நிலையான பக்தி ஆகியவற்றுடன் நம் மனத்தை கவர்கின்றவர் யாரும் இல்லை எனக் கூறியவர்.
    1. ஜி.யு.போப்
    2. கால்டுவெல்
    3. வீரமாமுனிவர்
    4. இரசூல் கம்சதோவ்

  2. திருக்குறளைப் போற்றிப் பாடும் நூல்
    1. திருவாரூர் நான்மணிமாலை
    2. இரட்டை மணிமாலை
    3. நால்வர் நான்மணிமாலை
    4. திருவள்ளுவமாலை

  3. ”மக்கள் இலக்கியம்” என அழைக்கப்படும் நூல்
    1. நாட்டுப்புறப்பாடல்கள்
    2. சங்க இலக்கியங்கள்
    3. திருக்குறள்
    4. சிலப்பதிகாரம்

  4. தொல்காப்பிய நெறி நின்றவர்
    1. இளங்கோவடிகள்
    2. திருவள்ளுவர்
    3. கம்பர்
    4. சீத்தலை சாத்தனர்

  5. குமரகுருபரரின் நீதிநெறி விளக்கத்தின் ஐம்பத்தொரு பாடல்களுக்கு உரையெழுதியவர்
    1. பரிதிமாற்கலைஞர்
    2. இளம்பூரனர்
    3. அடியார்க்கு நல்லார்
    4. சி.வை. தாமோதரன் பிள்ளை

  6. கலைச்செல்வி கட்டுரை எழுதாமல் இராள் – எவ்வகை தொடர்
    1. எதிர்மறைத் தொடர்
    2. பொருள் மாறா எதிர்மறைத்தொடர்
    3. உடன்பாட்டுத்தொடர்
    4. தன்வினைத்தொடர்

  7. ஒரு நாட்டில் பிறந்த மக்களுக்கு வேண்டப்படும் பற்றுகளுள் தலையாய பற்று மொழிபற்றே. மொழிபற்று இல்லாதாரிடத்துத் தேசப்பற்றும் இராது என்று உறுதி என்றுக் கூறியவர்
    1. திரு.வி.க
    2. காந்தி
    3. பாவாணர்
    4. பெரியார்

  8. தவறான இணை
    1. பாடாண் திணை - ஆண்மகனின் கல்வி, வீரம், செல்வம், புகழ் கருணை முதலியவற்றை போற்றி பாடுவது
    2. காஞ்சித் திணை - மண்ணாசை காரணமாக பகைவர் நாட்டை கைப்பற்ற கருதி போருக்கு செல்வது
    3. நொச்சித் திணை - மதிலை காப்பது
    4. உழிஞைத் திணை - மதிலை சுற்றி வளைத்தல்

  9. ”உயிரிரக்கமே பேரின்ப வீட்டின் திறவுகோல்” என்றவர்
    1. வள்ளலார்
    2. திருமூலர்
    3. திருஞானசம்பந்தர்
    4. திருநாவுக்கரசு

  10. ”இந்திரதேச சரித்திரம்” என்னும் நூலை இயற்றியவர்
    1. சங்கரதாஸ் சுவாமிகள்
    2. பம்மல் சுந்தரனர்
    3. அயோத்திய தாசபண்டிதர்
    4. கந்தசாமி



Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!