நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

பொதுத்தமிழ் - மாதிரித்தேர்வு - 2


  1. தவறான இணை
    1. சேவல் - கூவும்
    2. பூனை - கத்தும்
    3. கூகை - குழறும்
    4. வண்டு - முரலும்

  2. கீழ்கண்டவற்றுள் பொருந்தாதவை
    1. உயர்ந்தாழ்ந்து
    2. குழிந் தாழ்ந்து
    3. மீமிசை ஞாயிறு
    4. நடுமையம்

  3. தவறான இணை
    1. விதிர்ப்புற்றஞ்சி - விதிர்ப்பு+உற்று+அஞ்சி
    2. அங்கை - அகம்+கை
    3. இன்னமுது - இன்மை+அமுது
    4. எம்மருங்கும் - எ+மருங்கும்

  4. தவறான இணை
    1. எம்.ஜி.ஆர் சென்னை மாநில சட்டமன்ற மேலவை உறுப்பினர் ஆன ஆண்டு - 1963
    2. எம்.ஜி.ஆருக்கு பாரதரத்னா விருது வழங்கிய ஆண்டு- 1988
    3. எம்.ஜி.ஆர் காலம் - 1917 ஜனவரி 17 முதல் 1987 டிசம்பர் 24 வரை
    4. எம்.ஜி.ஆர் முதல்வராக பதவியேற்ற ஆண்டு - 1978

  5. தவறான இணை
    1. நாற்பொருள் - முத்து, பவளம், மரகதம், மாணிக்கம்
    2. நெறிநாலு - வைத்தருப்பம், கௌடம், பாஞ்சாலம், மாகதம்
    3. நாற்கரணங்கள் - மனம், புத்தி, சித்தம், அகங்காரம்
    4. பாவினங்கள் - துறை, தாழிசை, விருத்தம்

  6. வல்லினம் மிகுமிடங்கள்
    1. எழுவாய்த் தொடரில் வரும் வல்லினம் மிகும்
    2. இரண்டாம் வேற்றுமைத்தொகையில் வல்லினம் மிகும்
    3. வினைத்தொகையில் வரும் வல்லினம் மிகும்
    4. அந்த, இந்த, எந்த என்னும் சொற்களின்பின் வரும் வல்லினம் மிகும்

  7. திருக்குறள் ஒரு வகுப்பார்தோ ஒரு மதத்தார்கோ ஒரு நிறத்தார்க்கோ ஒரு மொழியார்க்கோ ஒரு நாட்டார்க்கோ உரியதன்று. அது மன்பதைக்கு உலகுக்கு பொது என்று கூறியவர்
    1. கி.ஆ.பெ.விசுவநாதம்
    2. திரு.வி.க
    3. பாவாணர்
    4. மு.வரதராசனார்

  8. தவறான இணை
    1. ஓர் அணுவினை சதகூறிட்ட கோணினும் உனன் - கம்பர்
    2. சரிந்த குடலை புத்தத்துறவியர் சரிசெய்த செய்தியை கூறும் நூல் - மணிமேகலை
    3. அந்தக் கேணியும் எந்திரக் கிணறும் - பரிபாடல்
    4. வறிது நிலை இய காயமும் - புறநானூறு

  9. தவறான இணை
    1. முல்லை - சிவபெருமான்
    2. குறிஞ்சி - முருகன்
    3. மருதம் - இந்திரன்
    4. பாலை - கொற்றவை

  10. சோவியத்து அறிஞர் தால்சுதாய் வழிகாட்டுதலால் திருக்குறள் மூலத்தை நேரடியாக படிக்க விரும்பியே தமிழ் பயிலத் தொடங்கினேன் என்று கூறியவர்
    1. கால்டுவெல்
    2. காந்தி
    3. வீரமாமுனிவர்
    4. எல்லீஸ்துரை



Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!