TNPSC Current Affairs 4th December
2018
☞ Previous Days' Current Affairs Notes |
☞ Today / Previous Days' Current Affairs Quiz |
தமிழ்நாடு
v ”கஜா புயல் மறுகட்டுமானம், மறுசீரமைப்பு
மற்றும் பேரிடரில் இருந்து மீளுதல் பிரிவு”
என்ற பெயரில், கஜா புயல் பாதித்த பகுதிகளை சீரமைத்து கட்டமைக்க தனிப் பிரிவை
தமிழக அரசு அமைத்துள்ளது.
இந்தப் பிரிவுக்கென தனியாக 2 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களின்
விவரம் வருமாறு,
o
கஜா புயல் மறுகட்டுமானம், மறுசீரமைப்பு மற்றும்
பேரிடரில் இருந்து மீளுதல் திட்டத்தின் இயக்குநராக டி.ஜெகந்நாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் தமிழ்நாடு பாடநூல் கழகம் மற்றும் கல்வியியல் சேவைகள் கழகத்தின் நிர்வாக இயக்குநராக
உள்ளார்.
o
மேலும், நாகப்பட்டினத்தை தலைமையிடமாகக் கொண்டு
கஜா புயல் மறுகட்டுமானம், மறுசீரமைப்பு மற்றும் பேரிடரில் இருந்து மீளுதல் திட்டத்தின்
கூடுதல் திட்ட இயக்குநராக எம்.பிரதீப் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் கும்பகோணம்
சார் ஆட்சியராக தற்போது பணியாற்றி வருகிறார்
கூ,தக.
:
கஜா புயல் தமிழகத்தின் கடலோரப் பகுதிகளான நாகப்பட்டினம் மற்றும் வேதாரண்யம் இடையே கடந்த
16-ஆம் தேதி கரையைக் கடந்தது. இதனால், ஆயிரக்கணக்கான குடிசைகளும், வீடுகளும் கடுமையாகச்
சேதம் அடைந்தன. வேளாண்மை மற்றும் தோட்டப் பயிர்களை விவசாயிகள் இழந்துள்ளனர். இந்த புயலின்
தாக்குதலினால், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் தாலுகாக்களில் வசிக்கும் மக்கள் வாழ்வாதாரத்தை
இழந்ததுடன், மீன்பிடி படகுகளும் கடுமையான சேதத்துக்கு ஆளாகி தவிப்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா
v கொல்கத்தா நகராட்சியில், சுதந்திரத்திற்கு
பின் முதல் முஸ்லிம் மேயர் : மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தா மாநகராட்சியின் மேயராக
அந்த மாநில அமைச்சர் ஃபிர்ஹத் ஹக்கிம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
நாடு சுதந்திரம் அடைந்த பின், கொல்கத்தா மாநகராட்சியின் மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ள
முதல் முஸ்லிம் இவர் ஆவார்.
v ”பிரதம மந்திரி சுகாதார காப்பீட்டுத்திட்டம்”
அல்லது "ஆயுஷ்மான் பாரத்” (Ayushman Bharat- Pradhan Mantri Jan Arogya
Abhiyan (AB-PMJAY)) திட்டம் 1 டிசம்பர் 2018 அன்று ஜம்முகாஷ்மீரில் அம்மாநில
ஆளுநர் சத்யபால் மாலிக் தொடங்கிவைத்தார்.
ஆயுஷ்மான்
பாரத் திட்டம் பற்றி ...
o
"ஆயுஷ்மான் பாரத்” (Ayushman Bharat-
Pradhan Mantri Jan Arogya Abhiyan (AB-PMJAY)) எனப்படும் மருத்துவ காப்பீடு திட்டத்தை ஜார்கண்ட் மாநிலம், ராஞ்சியில் பிரதமர் மோடி அவர்கள் 23 செப்டம்பர் 2018 அன்று தொடங்கி வைத்தார்.
o
இந்த மருத்துவ திட்டத்தின்படி, ஒவ்வொரு குடும்பத்தினரின்
5 லட்சம் ரூபாய் வரையிலான மருத்துவ செலவுகளை மத்திய அரசே ஏற்றுக்கொள்ளும். பிரதமர்
மோடியின் கனவு திட்டமான இத்திட்டத்துக்கு 12 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.
50 கோடிக்கும் அதிகமான மக்கள் இந்த திட்டத்தால் பயன்பெறுவர்.
o
"ஆயுஷ்மான் பாரத்” / பிரதமர் ஜன் ஆரோக்கிய
யோஜ்னா எனும் தேசிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக தேசிய சுகாதார
முகமையுடன் (என்எச்ஏ) அகில இந்திய மருத்துவ அறிவியல் மருத்துவமனை (எய்ம்ஸ்)
25-09-2018 அன்று புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதன் மூலம், மத்திய அரசின் சுகாதார காப்பீட்டுத்
திட்டத்தில் சோ்ந்த தில்லியில் உள்ள முதல் மருத்துவமனையாக எய்ம்ஸ் உருவாகியுள்ளது.
o
ஆயுஷ்மான் பாரத் திட்டத்திற்கான உதவி எண்
- 1455
v தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ்
அரசு அலுவலகத்தின் கோப்புகளை பொதுமக்கள் நேரடியாகப் பார்வையிடுவதற்கு மஹாராஷ்டிர அரசு
அனுமதித்துள்ளது. இதன் படி, மாவட்ட மற்றும் உள்ளாட்சி அலுவலகங்களின்
கோப்புகளை, வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் பிற்பகல் 3-5 மணிவரை பொதுமக்கள் பார்வையிடலாம்.
v
நாகாலாந்து
மாநில அரசு மற்றும் “ஈஸ்டோனியா” நாட்டின் மின்னாளுமை
நிறுவனம் ( Estonian academy on e-governance) இடையே 30 நவம்பர் 2018 அன்று புரிந்துணர்வு
ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி, “நாகாலாந்து மின்னாளுமை அகடமி”
(e-Governance Academy of Nagaland (e-GAN)) அமைப்பதற்கு ஈஸ்டோனியா நாடு தொழில்நுட்ப
உதவியினை வழங்கவுள்ளது.
உலகம்
v ”ஷாகீன் - VII” (Shaheen-VII) என்ற பெயரில்
பாகிஸ்தான் மற்றும் சீன விமானப்படைகளின் கூட்டு இராணுவ பயிற்சி
பாகிஸ்தானின் கராச்சியில் நடைபெறுகிறது.
v பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பிலிருந்து
(OPEC - Organization of the Petroleum
Exporting Countries) விலகுவதாக கத்தார் நாடு முடிவு செய்துள்ளது. சவூதி அரேபியாவின் ஆதிக்கம் நிறைந்த அந்த கூட்டமைப்பில்,
சக உறுப்பு நாடுகளால் கத்தார் தனிமைப்படுத்தப்பட்டு வரும் நிலையில் இந்த முடிவை அந்த
நாடு எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஓப்பெக்
(OPEC - Organization of the Petroleum Exporting Countries) அமைப்புப் பற்றி
o
” பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு”
என்பது எண்ணெய் மற்றும் பெட்ரோலியம் ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பாகும்.
o
இவ்வமைப்பு 1960 ஆம் ஆண்டு பாக்தாத்தில் துவங்கப்பட்டது.
o
இதன் தலைமையிடம் ஆஸ்திரியா நாட்டின் வியன்னா
நகரில் அமைந்துள்ளது.
o
இந்தக் கூட்டமைப்பில் தற்போது, அல்ஜீரியா,அங்கோலா,எக்குவடோர்,
எக்குவடார் கியூனியா, காபான், ஈரான், ஈராக், குவைத், லிபியா, நைஜீரியா, காங்கோ, சவுதி
அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட், வெனிசூலியா மற்றும் கத்தார் ஆகிய பதினைந்து
உறுப்பு நாடுகள் உள்ளன.
o
இவ்வமைப்பிலிருந்து இந்தோனேசியா 2008 ஆம் ஆண்டில் முதல் நாடாக வெளியேறியது
குறிப்பிடத்தக்கது. தற்போது, இரண்டாவது நாடாக கத்தார் வெளியேறவுள்ளது.
v
2021
-2025 ஆம் ஆண்டுகளில், பருவநிலை சார்ந்த முதலீடுகளுக்காக, உலக வங்கி 200 பில்லியன்
அமெரிக்க டாலரை ஒதுக்கியுள்ளது.
வெளிநாட்டு உறவுகள்
v ”கர்தார்பூர் சாலை திட்டம்”
(Kartarpur corridor) :
பஞ்சாப் மாநிலத்தின் குருதாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள தேரா பாபா நானக் குருத்வாராவில்
இருந்து, பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் உள்ள சீக்கியர்களின் புனிதத்தலமான கர்தார்பூர்
சாஹிப் குருத்வாராவுக்கு இந்திய பக்தர்கள் விசா இன்றி பயணம் மேற்கொள்வதற்காக இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளினால் சாலை அமைக்கப்படுகிறது.
o
இந்த திட்டத்தின் தொடக்கமாக, சமீபத்தில், இரு
நாடுகளும் அவரவர் பகுதியில் சாலை அமைப்பதற்காக அடிக்கல் நாட்டினர்.
o
பாதுகாப்புக் காரணங்களுக்காக, விசா வைத்திருக்கும்
சீக்கிய பக்தர்கள் மட்டுமே கர்தார்பூர் நகரத்துக்குள் அனுமதிக்கப்படுவர். விசா இன்றி
வெறும் அனுமதியுடன் வரும் பக்தர்கள் சாஹிப் குருத்வாராவுக்கு மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்
என அறிவிக்கப்பட்டுள்ளது.
o
சீக்கியர்களின் முதல் குருவான குரு நானக் தேவ்,
பாகிஸ்தானின் கர்தார்பூர் பகுதியில் தன் வாழ்நாளின் இறுதிப்பகுதியைக் கழித்ததால், அவருக்கு
அங்கு புனிதத்தலம் அமைக்கப்பட்டது. ஒவ்வோர்
ஆண்டும் அவரது பிறந்ததினத்தை கொண்டாட சீக்கிய பக்தர்கள் உலகம் முழுவதும் இருந்து அங்கு
வருவர்.
o
மேலும், விசா இன்றி பாகிஸ்தானுக்குள் நுழையும்
வசதி பயங்கரவாதிகள், போதைப்பொருள் கடத்தல் கும்பல் ஆகியோர் எளிதாக செல்வதற்கும் வழிவகுக்கும்
என்பதால் கர்தார்பூர் எல்லையில் குடியேற்ற அலுவலகத்தை பாகிஸ்தான் திறந்துள்ளது.
o
2019-ஆம் ஆண்டு குரு நானக் தேவின் 550-ஆவது
பிறந்த தினம் கொண்டா்க்கிறது குறிப்பிடத்தக்கது.
v
“எக்ஸ்
சின்யூ மைத்ரி 2018” (EX SHINYUU Maitri-2018) என்ற பெயரில் இந்திய மற்றும் ஜப்பான் நாடுகளின் விமானப்படைகளின்
கூட்டு இராணுவப் பயிற்சி
3-7 டிசம்பர் 2018 தினங்களில் ஆக்ரா விமானப்படைத் தளத்தில் நடைபெறுகிறது. இந்த
பயிற்சியின் மையக்கருத்து “பேரிடர் மீட்பு நடவடிக்கை மற்றும் மனிதாபிமான உதவிகளின்
போதான விமானப் போக்குவரத்தில் இணைந்து செயல்படுவது” (joint Mobility/Humanitarian
Assistance & Disaster Relief (HADR) on Transport aircraft) என்பதாகும்.
பொருளாதாரம்
v ஒடிஷா மாநிலத்தின் திறன் மேம்பாட்டு திட்டங்களுக்காக
இந்தியா மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கியிட்டையே 85 மில்லியன் டாலர் கடனுதவி ஒப்பந்தம்
3-12-2018 அன்று செய்துகொள்ளப்பட்டது. இந்த
நிதியுதவியின் மூலம் ஒடிஷா மாநிலம் புவனேஸ்வர் நகரில் “உலக திறன்
மையம்” (World Skill Center (WSC)) என்ற நிறுவனம் உருவாக்கப்படவுள்ளது.
நியமனங்கள்
v மத்திய அரசின் நிதித்துறையின் புதிய செயலராக
அஜய் நாராயண் ஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார். முன்னதாக, நிதித்துறை
செயலராக இருந்த ஹஸ்முக் ஆதியா, நவம்பர் 30-ஆம் தேதியுடன் ஓய்வுபெற்றதை அடுத்து அந்தப்
பதவிக்கு ஏ.என். ஜா நியமிக்கப்பட்டுள்ளார்.
விருதுகள் / பரிசுகள்
v மத்திய அரசின் “ஸ்வர்ணஜெயந்தி ஆராய்ச்சி
நிதியுதவித் திட்டத்தின்கீழ்” (Swarnajayanti Fellowship)
, 2017-18 ஆம் ஆண்டுக்கான உதவித் திட்டத்துக்கு பொறியியல் அறிவியல் பிரிவில், சென்னை
ஐஐடி இணை பேராசிரியர் ஆஷிஸ் குமார் சென் தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.
o
பேராசிரியர் ஆஷிஸ் குமார் சென்னும் இவருடைய
குழுவும் புற்றுநோய் மற்றும் டெங்கு பாதிப்புகளை முன்கூட்டியே கண்டறிவது மற்றும் சிப்
வடிவிலான ஆய்வுக் கருவி ஒன்றை உருவாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த
முயற்சிக்காகவே, நாட்டின் மதிப்புமிக்க ஆராய்ச்சி உதவித் தொகை திட்டத்தில் இவர் தேர்வாகியுள்ளார்.
o
அறிவியல், தொழில்நுட்பத் துறையில் முன்னணி
ஆராய்ச்சித் திட்டங்களை மேற்கொண்டு வரும் இளம் ஆராய்ச்சியாளர்களை ஊக்குவிக்கும் வகையில்,
ஸ்வர்ணஜெயந்தி ஆராய்ச்சி நிதியுதவித் திட்டம் என்ற மதிப்புமிக்க நிதியுதவித் திட்டம்
மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறையால் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது.
o
ஸ்வர்ணஜெயந்தி ஆராய்ச்சி நிதியுதவித் திட்டத்தின்
கீழ் தேர்வாகும் ஆராய்ச்சியாளர்களுக்கு, அவருடைய ஆராய்ச்சி தொடர்பான அனைத்து உதவிகளும்
மத்திய அரசு சார்பில் வழங்கப்படும் என்பதோடு, மாதம் ரூ. 25000 வீதம் 5 ஆண்டுகளுக்கு
நிதியுதவி அளிக்கப்படும்.
அறிவியல் &
தொழில்நுட்பம்
v இந்தியாவின் ஜிசாட்–11 செயற்கைகோள்
வரும் டிசம்பர் 5 அன்று பிரான்ஸ் நாட்டில் உள்ள கயானாவில் இருந்து ‘ஏரைன்–5’ என்ற ராக்கெட்
மூலம் விண்ணில் செலுத்தப்படவுள்ளது. இந்தியாவில்
அதிவேக இணையதள சேவையை மேம்படுத்த இந்த செயற்கைக் கோள் உதவும்.
விளையாட்டுகள்
v 2032 ஒலிம்பிக் போட்டியை நடத்த வரலாற்றிலேயே
முதன்முறையாக இந்திய ஒலிம்பிக் சங்கம் விண்ணப்பித்துள்ளது.
v 62-ஆவது தேசிய துப்பாக்கி சுடும் போட்டியில்
ஸ்கீட் பிரிவில் மகேஸ்வரி செளஹான் பஞ்சாப்பின் கணமேட் ஷெகானை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். இராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற இந்த
போட்டியில் வெண்கல பதக்கத்தை சிம்ரம் பிரீத்
கவுர் பெற்றுள்ளார்.
v ”சர்வதேச் தீவிர ஓட்டப்போட்டியில்”
(international ultra running) இந்தியாவின்
உல்லாஸ் நாராயணன் மூன்றாவது இடத்தில் வெற்றி பெற்று வெண்கலப்
பதக்கம் வென்றுள்ளார். இதன் மூலம் சர்வதேச தீவிர ஓட்ட்டப்போட்டியில் பதக்கம் வென்ற
முதல் இந்தியர் எனும் பெருமையைப் பெற்றுள்ளார்.
இந்த போட்டிகள் தைவான் நாட்டின் தாய்பே நகரில் நடைபெற்றது.
v டாடா ஓபன் இந்தியா சர்வதேச பேட்மிண்டன்
போட்டிகள் 2018 (Tata Open India International
Challenge 2018 (Badminton)) -ன் வெற்றியாளர்கள் விவரம் வருமாறு,
o
ஆண்கள் ஓற்றையர் - லக்ஷயா சிங்
o
பெண்கள் ஒற்றையர் - அஸ்மிதா சாலிஹா
o
பெண்கள் இரட்டையர் - நிக் விங் யங், யாங் கா சிங் இணை (ஹாங்காங்)
o
ஆண்கள் இரட்டையர் - அர்ஜீன் எம்.ஆர்., சுமீத்
ரெட்டி
o
கலப்பு இரட்டையர் - நிபிட்த்போன் புங்புட்
(Nipitphon Phuangphuapet), சாவித்ரீ அமித்ராபாய் (Savitree Amitrapai) இணை (தாய்லாந்து)
v ஆஸ்திரேலியாவின்
கான்பரா நகரில் நடைபெற்ற “காமன்வெல்த் சீனியர்
ஃபென்சிங் சாம்பியன்ஷிப் போட்டியில்” (Commonwealth Senior Fencing
Championships) இந்தியாவின் பவானி தேவி தங்க பதக்கதையும், கரண்சிங் வெண்கல பதக்கத்தையும் வென்றுள்ளனர்.
v சர்வதேச் துப்பாக்கி சுடுதல் விளையாட்டு
கூட்ட்டமைப்பில் (International Shooting
Sports Federation (ISSF)) நடுவர்கள் குழுவின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள
முதல் இந்தியர் எனும் பெருமையை பவன் சிங் பெற்றுள்ளார். இவர்
, 2-12-2018 அன்று சர்வதேச் துப்பாக்கி சுடுதல்
விளையாட்டு கூட்டமைப்பின் ஏழுபேர்கள் கொண்ட நடுவர்கள் குழுவில் ஒரு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
புத்தகங்கள் / ஆசிரியர்கள்
v ”Architecture of Justice: A
Pictorial Walk-through of the Supreme Courts and High Courts of India” என்ற
பெயரில் வினய் தாக்கூர் மற்றும் அமோக் தாக்கூர் எழுதிய புத்தகத்தினை உச்சநீதிமன்ற தலைமை
நீதிபதி ரஞ்சன் கோகாய் வெளியிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.