Skip to main content
TNPSC Group 4 2019 Self Preparation Test Series குரூப் IV 2019 Test Batch - Join Now !
Tamil & English Medium |35 தேர்வுகள் | Online & PDF
TNPSC General English Book - Buy Now

Current Affairs 5th December 2018 | நடப்பு நிகழ்வுகள் 5 டிசம்பர் 2018

TNPSC Current Affairs 5th December 2018
☞   Previous Days' Current Affairs Notes
☞  Today / Previous Days' Current Affairs Quiz

தமிழ்நாடு

v  டிச. 8-இல் பாரதி திருவிழா:    பாரதியாரின் பிறந்த நாளையொட்டி, தமிழ்நாடு அரசு கலை, பண்பாடு, தமிழ் வளர்ச்சித் துறையுடன் இணைந்து பாரதி திருவிழாவை வானவில் பண்பாட்டு மையம் நடத்துகிறது. 8-11 டிசம்பர் 2018 தினங்களில்  நடைபெறும் இந்த விழா சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் நடைபெறுகிறது.
v  முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின்  2-ஆம் ஆண்டு நினைவு தினம்  டிசம்பர் 5 அன்று அனுசரிக்கப்படுகிறது.

இந்தியா

v  டிராப்பெக்ஸ் (Theatre Level Operational Readiness Exercise (Tropex)) என்ற பெயரில் ஜனவரி - மார்ச்2019 வரையிலான இரண்டு மாத கடற்படைப் பயிற்சியை இந்திய கடற்படை நடத்தவிருக்கிறது.
v  ஒன் கார்ட் (‘One’ card) என்ற பெயரில்  மெட்ரோ, பேருந்து போன்ற அனைத்து பொதுப் போக்குவரத்துகளுக்குமான ஒருங்கிணைந்த ஒரே ‘பயண அட்டையை  தில்லி அரசு 4-12-2018 அன்று அறிவித்துள்ளது.
v  மஹாராஷ்டிரா மாநில அரசு மற்றும் பஹ்ரைன் அரசின் முதலீட்டு மேம்பாட்டு நிறுவனமான  “Economic Development Board (EDB)” அமைப்பும்,  நிதி தொழில்நுட்பங்களில் பரஸ்பர ஒத்துழைப்பு வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை 4 டிசம்பர் 2018 அன்று செய்துள்ளன.
v  புதுச்சேரி பல்கலைக்கழகத்துக்கும், சீனாவில் உள்ள அனியாங் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி என்ற உயர்கல்வி நிறுவனத்துக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வாயிலாக, இரண்டு கல்வி நிறுவனங்களுக்கும் இடையில் மாணவர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் பரிமாற்றம் நடைபெற உள்ளது.இந்த ஒப்பந்தத்தின்படி, புதுச்சேரி பல்கலைக்கழக மாணவர்கள் சீன மொழி, கலாசாரம் ஆகியவற்றை கற்க, சீன மொழி மற்றும் கலாசார நிறுவனத்தை அமைப்பதற்கு அனியாங் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி உதவி செய்யும்.
v  அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஊழல் விவகாரத்தில்   இடைத்தரகராக செயல்பட்ட   இங்கிலாந்தை சேர்ந்த கிறிஸ்டியன் ஜேம்ஸ் மைக்கேலை  இந்தியாவுக்கு நாடு கடத்த  துபாய் நாட்டின் மேல்நிலை நீதிமன்றம் உத்தரவிட்டதன் படி,  அவர் விசாரணைக்காக  4-12-2018 அன்று  துபாயிலிருந்து  இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளார்.
பின்னணி :
o    இந்தியாவில் குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட மிக மிக முக்கியப் பிரமுகர்கள் பயணிப்பதற்காக, இத்தாலியைச் சேர்ந்த ஃபின்மெக்கானிக்கா நிறுவனத்தின் துணை நிறுவனமான அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து ரூ.3,100 கோடி மதிப்பில் 12 ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு மத்திய அரசு கடந்த 2010-இல் ஒப்பந்தம் மேற்கொண்டது. இந்த ஒப்பந்தத்துக்காக, அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனம் சார்பில் இந்திய தரப்புக்கு ரூ.423 கோடி வரை லஞ்சம் அளிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து, கடந்த 2014-இல் இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.  இந்த முறைகேடு புகார் தொடர்பாக சிபிஐ-யும், அமலாக்கத் துறையும் விசாரணை மேற்கொண்டு வருகின்றன.
v  யாஹீ நிறுவனம் வெளியிட்டுள்ள 2018 ஆம் ஆண்டு செய்திகளில் அதிகம் இடம் பிடித்தோர் பட்டியலில்,  பிரதமர் நரேந்திர மோடி முதலிடத்தைப் பிடித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் இரண்டாவது இடத்திலும், 'முத்தலாக்' தீர்ப்பு வழங்கிய, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த தீபக் மிஸ்ரா மூன்றாவது இடத்திலும் உள்ளனர். 

உலகம்

v  பிரான்ஸ் நாட்டு மக்களின்  “மஞ்சள் அங்கி போராட்டம் :   பிரான்ஸில் பெட்ரோல், டீசல் மீதான வரிகளை உயர்த்துவதற்கு எதிராக  மக்களின் தன்னெழுச்சிப் போராட்டம் 17-11-2018 முதல் நடைபெற்று வருகிறது. எதிர்ப்பின் அடையாளமாக, ஒளிரும் மஞ்சள் மேலங்கியை அணிந்து கொண்டு பொதுமக்கள் நடத்தும் இந்தப் போராட்டம், மஞ்சள் அங்கி போராட்டம் என்றழைக்கப்படுகிறது. தீவிர போராட்டங்களையடுத்து, அந்தத் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டு உறவுகள்

v  சின்யூ மைத்ரி - 18” (“SHINYUU Maitri-18”) என்ற பெயரில் இந்தியா மற்றும் ஜப்பான் விமானப்படைகளின் ஐந்து நாள் கூட்டு இராணுவப்பயிற்சி  உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஆக்ரா நகரில் 3 - 7 டிசம்பர் 2018 தினங்களில் நடைபெறுகிறது.
v  இந்தியா-ஐக்கிய அரபு எமிரேட்டுகள் இடையே இரண்டு ஒப்பந்தங்கள் கையெழுத்து : இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ். ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷேக் அப்துல்லா அல் நயானை அபுதாபியில்  சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து,   இருநாடுகளும் இணைந்து ஆப்பிரிக்காவில் மேம்பாட்டுப்பணிகளை மேற்கொள்ளும் வகையிலான ஒப்பந்தமும், அமெரிக்க டாலருக்கு மாற்றாக, வர்த்தகத்தில் இரு நாடுகளின் தத்தம் நாடுகளின் பணத்தைப் பயன்படுத்திக்கொள்ளும் வகையிலான ஒப்பந்தமும் கையெழுத்தாகியுள்ளன.
காந்தி-ஜயீத் டிஜிட்டல் அருங்காட்சியகம் திறப்பு : 
o    மகாத்மா காந்தியின் 150-ஆவது ஆண்டு பிறந்ததினக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாகவும், நவீன ஐக்கிய அரபு அமீரகத்தை உருவாக்கிய ஷேக் ஜயீதின் நூற்றாண்டு பிறந்ததினக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாகவும், காந்தி-ஜயீத் டிஜிட்டல் அருங்காட்சியகத்தை அபுதாபியில் அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சருடன் இணைந்து சுஷ்மா ஸ்வராஜ் திறந்துவைக்க உள்ளார்.
o    கூ.தக. :இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்வதில் அந்நாடு 6-ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. அந்நாட்டில், சுமார் 33 லட்சம் இந்தியர்கள் வசித்து வருகின்றனர்.

விருதுகள் 

v  ”சாயத்திரி மலைத்தொடரை (Sahayadri mountain range) 12 நாட்களில் கடந்துள்ள முதல் இந்தியர் எனும் பெருமையை ‘தூகின் சதார்கார்  (Tuhin Satarkar) பெற்றுள்ளார்.  இவர் 16-28 நவம்பர் 2018 காலக்கட்டத்தில்  சாயத்திரி மலைத்தொடரைக் கடந்துள்ளார்.
கூ.தக. :  ‘சாயத்திரி மலைத்தொடர் , யுனெஸ்கோவின் பாரம்பரிய தலமாக  (UNESCO World Heritage Site) அங்கீகரிக்கப்பட்டுள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது.

மாநாடுகள் / கூடுகைகள்

v  இந்தியா தண்ணீர் தாக்கத்திற்கான கூடுகை 2018” (India Water Impact Summit-2018), 5-7 டிசம்பர் 2018 தினங்களில் புது தில்லியில் நடைபெறுகிறது. இந்த கூடுகையை,  தேசிய கங்கை நதி சுத்திகரிப்பு திட்டம் ( National Mission for Clean Ganga (NMCG) ) மற்றும்  ‘கங்கை படுகை மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி மையம் (Centre for Ganga River Basin Management and Studies (cGanga) ) ஆகியவை இணைந்து நடத்துகின்றன.

நியமனங்கள்

v  யோனோ ( YONO(You only need one)) எனப்படும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (State Bank of India) வங்கியின்  ஒருங்கிணைந்த டிஜிட்டல் வங்கி  தளத்திற்கான  விளம்பர தூதராக ஆசிய விளையாட்டுப் போட்டி 2018-ல் தங்கம் வென்ற ‘ஸ்வப்னா வர்மன்   (Swapna Barman) நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்வப்னா வர்மன், இந்தோனேசியாவின் ஜகார்த்தா நகரில் நடைபெற்ற  ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2018-ல் ‘ஹெப்தத்லான் (Heptathlon)  போட்டியில்இந்தியாவின் முதல் தங்க பதக்கத்தை வென்றவராவர்.

முக்கிய தினங்கள்

v  இந்திய கடற்படை தினம் (Indian Navy Day)  - டிசம்பர் 4
கூ.தக. : 
o    971 ஆம் ஆண்டு டிசம்பர் 4 அன்று இந்தியா - பாகிஸ்தான் போரின் போது,  ”ஆபரேஷன் டிரைடண்ட் (Operation Trident) என்ற அடைமொழியிடப்பட்ட  இராணுவ திட்டத்தின் மூலம்,  1இந்திய கடற்படை வெற்றிகரமாக பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்தைத் தாக்கின. இந்த நிகழ்வை நினைவு கூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் கடற்படை தினம் அனுசரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
o    இந்திய கடற்படையின் தந்தை (Father of the Indian Navy) என மராத்திய மன்னர் சத்ரபதி சிவாஜி மஹாராஜ் அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
v  மஹாபரினிர்வான் திவாஸ் (Mahaparinirvan Diwas) என்று அழைக்கப்படுகின்ற டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாள் நினைவு தினம் (63வது) டிசம்பர் 6 அன்று அனுசரிக்கப்படுகிறது.

விளையாட்டு

v  லுகா மொட்ரிக் க்கிற்கு பேலன் டி ஆர் விருது 2018 :   பிரான்ஸ் கால்பந்து சங்கம் சார்பில் ஆண்டின் சிறந்த கால்பந்து வீரருக்கு வழங்கப்படும் விருதான பேலன் டி ஆர்- விருதை  குரோஷிய கால்பந்து அணி கேப்டன் லுகா மொட்ரிக் வென்றுள்ளார். இதன் மூலம் இவ்விருதைப் பெறுவதில் கடந்த 10 ஆண்டுகளாக நீடித்து வந்த ரொனால்டோ, மெஸ்ஸி ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
v  டேர்டெவில்ஸ் பெயர் தில்லி கேபிடல்ஸ்சாக மாற்றம் :   ஐபிஎல் அணிகளில் ஒன்றான தில்லி டேர்டெவில்ஸ்சின் பெயரை  தில்லி கேபிடல்ஸ் என  அதன் உரிமையாளரான ஜிஎம்ஆர் குழுமம், ஜேஎஸ்டபிள்யு ஸ்போர்ட்ஸ் ஆகியவை இணைந்து  மாற்றி உள்ளன.
v  கெளதம் கம்பீர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவிப்பு :  இந்திய கிரிக்கெட் அணியில் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவராக திகழ்ந்த கெளதம் கம்பீர் அனைத்து வகையான கிரிக்கெட் ஆட்டங்களில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 6-12-2018 அன்று ஆந்திரத்துக்கு எதிராக தொடங்கும் ரஞ்சி கோப்பை ஆட்டமே அவரது கடைசி ஆட்டமாகும். இவர் ஐ.பி.எல் போட்டிகளில் கொல்கத்தா மற்றும் தில்லி டேர் டெவில்ஸ் அணியின் கேப்டனாகவும் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அறிவியல் & தொழில்நுட்பம்

v  எக்‌ஸீட் சாட் (ExseedSAT)  என்ற பெயரிலான இந்தியாவின் முதல் தனியார் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட செயற்கைக் கோள் , அமெரிக்காவின் ‘ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) நிறுவனத்தினால் 3-12-2018 அன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.   இந்த செயற்கைக் கோளை மும்பையைச் சேர்ந்த  தனியார் நிறுவனமான ‘எக்ஸீட் ஸ்பேஸ் (Exseedspace) உருவாக்கியுள்ளது. ஐந்து ஆண்டுகள் செயலாற்றவுள்ள, ரூ.2 கோடி மதிப்பிலான  இந்த  செயற்கைக் கோளின் சிக்னல்களை  145.90 Mhz அலைவரிசையில் , சாதாரண தொலைக்காட்சி ‘டியூணர் மூலம் பொதுமக்கள்  பெற்றுக்கொள்ளலாம்.
v  ரஷியாவின் ‘சோயஸ்  விண்கலம் (Soyuz spacecraft) , மூன்று விண்வெளி வீரர்களை சுமந்துகொண்டு, சர்வதேச விண்வெளி நிலையத்தை நோக்கிய பயணத்தை  3-12-2018 அன்று வெற்றிகரமாகத் துவங்கியுள்ளது.  இந்த விண்கலத்தில், ரஷியாவின் ‘ஒலெக் கொனொனெங்கோ (Oleg Kononenko) , “அமெர்க்காவின் ‘நாசாவின்  அன்னி மேக் கிளைன் (Anne McClain)  மற்றும்  கனடாவின் டேவிட் செயிண்ட் ஜேக்கஸ் ( David Saint Jacques) ஆகியோர் பயணிக்கிறார்கள்.  இவர்கள் சர்வதேச விண்வெளி மையத்தில் 6.5 மாதங்கள் தங்கியிருந்து ஆராய்ச்சியில் ஈடுபடவுள்ளனர்.
v  ஜிசாட்-11 செயற்கைக்கோள்  வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது   :   இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தினால் உருவாக்கப்பட்ட  ஜிசாட்-11 செயற்கைக்கோள்  பிரெஞ்ச் கயானாவில் உள்ள கூரு ஏவுத்தளத்தில் இருந்து  5-12-2018 அன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.
o    இந்திய இணையதள சேவையின் வளர்ச்சிக்கு உதவும் வகையில்  40 நவீன டிரான்ஸ்பாண்டுகள் பொருத்தப்பட்டு ஜிசாட்-11 செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டுள்ளது. 
o    இந்த ஜிசாட் -11 செயற்கைக்கோள்மூலம் இந்தியாவின் கிராமப்புறப் பகுதிகளுக்கும் இணைய சேவை விரைவாகவும் எளிமையாகவும் கிடைக்க வாய்ப்புள்ளது.
o   அதிக எடை அதாவது 5854 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோளை இந்தியாவிலிருந்து அனுப்ப இயலாது என்பதால் தென் அமெரிக்காவின் பிரெஞ்ச் கயானாவில் உள்ள கூரு ஏவுத்தளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

புத்தகங்கள் / ஆசிரியர்கள்

v  Blue Waters Ahoy!’ Chronicling the Indian Navy’s History from 2001-10”   என்ற பெயரில் இந்திய கடற்படையின் சாதனைகளைப் பற்றி  இந்திய கடற்படையில் பணியாற்றி ஓய்வு பெற்ற துணை அட்மிரல் அனுப் சிங் (Vice Admiral Anup Singh) எழுதிய புத்தகம் 2018 ஆம் ஆண்டின் கடற்படை  தினத்தன்று (4-12-18) வெளியிடப்பட்டுள்ளது.Comment Policy:Dear visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation. Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.
View Comments
Close Comments