TNPSC Current Affairs 6th December 2018
☞ Previous Days' Current Affairs Notes |
☞ Today / Previous Days' Current Affairs Quiz |
தமிழ்நாடு
- எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய ”சஞ்சாரம்” நாவல், 2018-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
- தெய்வீக இசையாகப் போற்றப்படும் நாகஸ்வரத்தை வாசிக்கும் கலைஞர்களின் வாழ்க்கைச் சூழலைப் படம் பிடித்தும் காட்டும் வகையில், சஞ்சாரம் நாவல் எழுதப்பட்டுள்ளது. உயிர்மைப் பதிப்பகம் பதிப்பித்த இந்த நாவல் நாகஸ்வரம், மேளம் வாசிப்பவர்களின் துயரம், அலைக்கழிப்பு, தனிமை ஆகியவற்றையும், மங்கல இசைக் கருவியான நாகஸ்வரத்தின் கடந்த காலப் பெருமைகளையும் எடுத்துக் கூறுகிறது.
- இந்த நாவலை எழுதிய எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவராவர்.
- எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் சஞ்சாரம் நாவல் தவிர, உபபாண்டவம், நெடுங்குருதி , உறுபசி, யாமம், துயில், நிமித்தம் ஆகிய நாவல்களையும் ஏராளமான சிறுகதைத் தொகுப்புகள், கட்டுரைத் தொகுப்புகள், திரைப்பட நூல்கள், குழந்தைகள் நூல்கள் ஆகியவற்றையும் எழுதியுள்ளார்.சஞ்சாரம் நாவலின் முதல் பதிப்பு 2014-இல் வெளிவந்துள்ளது.
பிற மொழி சாகித்ய அகதமி விருதுகள் ...
- மலையாள எழுத்தாளர் எஸ். ரமேஷ் நாயரின் குரு பௌர்ணமி எனும் கவிதைப் படைப்பு, தெலுங்கு மொழியில் கோலகலுரி எனோக் எழுதிய விமர்ஷினி எனும் கட்டுரை, சம்ஸ்கிருத மொழியில் ரமா காந்த் சுக்லா எழுதிய மாமா ஜனனி கவிதைப் படைப்பு, கன்னடத்தில் கே.ஜி. நாகராஜப்பா எழுதிய அனுஷ்ரேனி- யஜமானிக்கே எனும் தலைப்பிலான இலக்கிய விமர்சனப் படைப்பு ஆகியவற்றுக்கும் சாகித்ய அகாதெமி விருது கிடைத்துள்ளது.
பாஷா சம்மான் விருது ,
- 2017, 2018-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெமியின் பாஷா சம்மான் விருதுகள். செவ்வியல் மற்றும் இடைக்கால இலக்கிய தளத்தில் சிறந்த பங்களிப்பை அளித்ததற்காக வடக்கு மண்டலத்தில் 2017-ஆம் ஆண்டுக்காக சிறந்த ஹிந்தி கவிஞர் டாக்டர் யோகேந்திர நாத் சர்மா, தெற்கு மண்டலத்தில் கன்னட எழுத்தாளர் ஜி. வெங்கசுப்பையா ஆகியோருக்கும், 2018-ஆம் ஆண்டுக்காக கிழக்கு மண்டலத்தில் ஒடியா மொழி எழுத்தாளர் டாக்டர் ககனேந்திர நாத் தாஸ் , மேற்கு மண்டலத்தில் மராத்தி எழுத்தாளர் டாக்டர் ஷைலஜா பபத் ஆகியோருக்கும் விருது கிடைத்துள்ளது.
கூ.தக. : சாகித்ய அகாதெமியின் தலைவராக டாக்டர் சந்திரசேகர் கம்பர் உள்ளார்.
இந்தியா
- "பிரசாத்” (PRASAD) திட்டத்தின் கீழ் உத்தர்காண்டிலுள்ள “யமுனோத்திரி”, மத்திய பிரதேசத்திலுள்ள “அமர்கண்டக்” மற்றும் ஜார்க்கண்டிலுள்ள “பரசாந்த்” ஆகியவற்றை புதிதாக சேர்ப்பதாக மத்திய சுற்றூலா அமைச்சகம் அறிவித்துள்ளது. இதன் மூலம், “பிரசாத் திட்டத்தின்” கீழுள்ள புனிதத் தலங்களின் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது.
- “பிரசாத்” திட்டம் என்பது, நாடெங்கிலுமுள்ள புனிதத் தலங்களை மேம்படுத்த மத்திய அரசினால் 2014-2015 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட திட்டமாகும்.
- ”PRASAD” விரிவாக்கம் - Pilgrimage Rejuvenation and Spiritual, Heritage Augmentation Drive
- ஒடிஷா அரசின் “பீத்தா திட்டம்” (‘PEETHA’) : அரசு திட்டங்களைப் பற்றிய பொறுப்புடைமை மற்றும் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்வதற்காக ஒடிஷா அரசு ”பொறுப்புடைமை மற்றும் வெளிப்படைத்தன்மை மூலமாக பொதுமக்களை மேம்படுத்துதல்” / ”பீத்தா” (PEETHA - Peoples Empowerment Enabling Transparency and Accountability) எனப்படும் திட்டத்தை தொடங்கியுள்ளது.
- 2017 -ல் , கண்டுபிடிப்புகளுக்கான “பேட்டண்ட் உரிமை” (patents) பெற்றுள்ள நாடுகளின் பட்டியல் இந்தியா 10 வது இடத்தைப் பெற்றுள்ளது. ஜெனீவாவை தலைமையிடமாகக் கொண்டுள்ள ‘உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பினால்’ (World Intellectual Property Organization) வெளியிடப்பட்டுள்ள இப்பட்டியலில் சீனா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளன.
- இந்தியாவின் மிக நீளமான ரயில்-சாலை பாலமான (India's longest railroad bridge) “போகிபீல் மேம்பாலத்தை“ ( Bogibeel Bridge) டிசம்பர் 25-இல் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.
- அஸ்ஸாம், அருணாசலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களை இணைக்கும் வகையில், பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்தப் பாலமானது, அசாமின் திப்ரூகார் ( Dibrugarh) முதல் அருணாச்சல பிரேதசத்தின் பசிகாட் வரை நீண்டுள்ளது.
- இந்த பாலத்துக்கு கடந்த 1997-ஆம் ஆண்டு ஜனவரி மாதம், அப்போதைய பிரதமர் ஹெச்.டி.தேவேகெளடா அடிக்கல் நாட்டினார். ஆனால், கடந்த 2002-ஆம் ஆண்டு, அப்போதைய பிரதமர் வாஜ்பாய் ஆட்சியின்போது தான் இந்தப் பாலத்துக்கான கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன. சுமார் 16 ஆண்டுகள் கழித்து தற்போதுதான் இந்தப் பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
உலகம்
- தென்னாப்பிரிக்க நாட்டின் தேசிய குற்ற விசாரணை அமைப்பின் முதல் பெண் தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஷமிலா படோஹி நியமிக்கப்பட்டுள்ளார்.
- உலகின் வலிமையான பாஸ்போர்ட்டுகளின் பட்டியல் 2018 (Global Passport Power Rank 2018) ல் ஐக்கிய அரபு எமிரேட்டுகள் (United Arab Emirates (UAE)) முதலிடத்தைப் பெற்றுள்ளது. Arton Capital எனும் நிறுவனம் வெளியிட்டுள்ள இந்தப் பட்டியலில் இரண்டாவது மற்றும் மூன்றாம் இடங்களை முறையே சிங்கப்பூர் மற்றும் ஜெர்மனி நாடுகள் பெற்றுள்ளன.
பொருளாதாரம்
- 2018-19ம் நிதியாண்டின் ரிசர்வ் வங்கியின் 5வது நிதி கொள்கை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, ரெப்போ வட்டி விகிதம் 6.50% என்ற தற்போதைய நிலையிலேயே தொடரும். ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் 6.25% சதவீதமாகவும் தொடரும் .
முக்கிய தினங்கள்
- உலக மண் தினம் (World Soil Day) - டிசம்பர் 5
- சர்வதேச பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டிற்காக பாடுபடும் தன்னார்வலர்களுக்கான தினம் (International Volunteer Day for Economic and Social Development) - டிசம்பர் 5 | மையக்கருத்து (2018) - மீண்டுவரும் சமூகத்தை கட்டமைக்கும் தன்னார்வலர்கள் (Volunteers build Resilient Communities)
விளையாட்டு
- சர்வதேச தடகள கூட்டமைப்பின், 2018 ஆம் ஆண்டின் சிறந்த தடகள வீரர்கள் விருது , மாரத்தான் போட்டியில் சாதனைபடைத்த கென்யாவைச் சேர்ந்த வீரர் எலியுட் கிப்சோகெ(Eliud Kipchoge) மற்றும் கொலம்பியாவைச் சேர்ந்த உயரம் தாண்டுதல் வீராங்கனை கேதரின் இபார்குயின் (Caterine Ibarguen ) ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
- 2018 ஆம் ஆண்டில் இந்தியாவில் அதிகம் சம்பாதித்த விளையாட்டு வீரர்களின் வரிசையில், இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி முதலிடத்தில் உள்ளார். இந்த ஆண்டு அவரது ஒட்டுமொத்த வருவாய் ரூ.228.09 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஃபோர்ப்ஸ் இந்தியா பந்திரிக்கை வெளியிட்டுள்ள, இந்தியாவில் அதிகம் சம்பாதிக்கும் தனிநபர்கள் பட்டியலில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் ரூ.235.25 கோடியுடன் முதலிடத்தில் தொடர்கிறார். அந்தப் பட்டியலில் அவருக்கு அடுத்தபடியாக ரூ.228.09 கோடி வருவாயுடன் 2-ஆவது இடத்தில் உள்ளார் கிரிக்கெட் வீரர் விராட் கோலி.
அறிவியல் & தொழில்நுட்பம்
- இஸ்ரோவின் மிக அதிக எடை கொண்டதும் மிக நவீனமானதுமான தகவல் தொடர்பு செயற்கைக்கோள் ஜி சாட்-11 (GSAT-11) பிரெஞ்ச் கயானாவில் உள்ள உள்ள கூறு (Kourou) ஏவுதளத்திலிருந்து, ஏரியன் 5 விஏ – 246 செலுத்துவாகனத்தின் மூலம் 05-12-2018 அன்று அதிகாலை வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.
- 5,854 கிலோ கிராம் எடையுள்ள ஜிசாட்-11, 32 பயன்பாட்டு ஒளிக்கற்றைகளைக் கொண்ட கூ(KU) அலைவரிசை மற்றும் 8 குவி மைய ஒளிக்கற்றைகளைக் கொண்ட கா(KA) அலைவரிசை ஆகியவற்றின் மூலம் இந்தியப் பெருநிலப்பரப்பிலும், தீவுகளிலும் தகவல் தொடர்புகளைப் பயன்படுத்துவோருக்கு அதிக அளவு தகவல்களை வழங்கும்.
- டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் பகுதியாக உள்ள இந்தியத் தகவல் இணைப்புத் திட்டமானது, இணையதள வங்கி, இணையதள சுகாதாரம் மற்றும் இணையதள நிர்வாகம் போன்ற மக்களுக்கான நலத்திட்டங்களை விரிவாக்கம் செய்வதை நோக்கமாக கொண்டது.
- நாட்டில் உள்ள ஊரக மற்றும் எளிதில் தொடர்பு கிடைக்காத கிராம ஊராட்சிகளுக்கான அகண்ட அலைவரிசை தொடர்புகளுக்கு ஜி சாட்-11 கூடுதல் உத்வேகம் அளிக்கும்.
- செலுத்து வாகனத்திலிருந்து பிரிந்தபின் கர்நாடகாவின் ஹசனில் உள்ள இஸ்ரோவின் மையக் கட்டுப்பாட்டு அமைப்பு ஜி சாட் – 11-ன் இயக்கக் கட்டுப்பாட்டையும், உத்தரவுகள் பிறப்பிப்பதையும் எடுத்துக் கொண்டது.
- ”e-motorbike NERA” என்ற பெயரில் உலகின் முதல் 3டி முறையில் அச்சிடப்பட்டு உருவாக்கப்பட்ட மின்சாரத்தால் இயங்கும் மோட்டார் சைக்கிளை (World's First 3D-Printed Electric Motorcycle ) ஜெர்மனியைச் சேர்ந்த ‘பிக்ரெப்’ (BigRep) எனும் நிறுவனம் உருவாகியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.