நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

Current Affairs 7th December 2018 | நடப்பு நிகழ்வுகள் 7 டிசம்பர் 2018

TNPSC Current Affairs 7th December 2018

தமிழ்நாடு

  • தமிழகம் - அந்தமான் இடையே கல்விச் சேவைகள் பரிமாற்றம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் : கல்விச் சேவைகளை பரிமாறிக் கொள்வது தொடர்பாக தமிழக பள்ளிக் கல்வித்துறை, அந்தமான் நிகோபார் கல்வித்துறை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் 06-12-2018 அன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, தமிழ்நாடு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (எஸ்சிஇஆர்டி), அந்தமான் நிகோபார் யூனியன் பிரதேசத்தில் பணியாற்றும் ஆசிரியர்களுக்குத் திறன்மேம்பாடு, கல்வியியல், ஆராய்ச்சி மற்றும் பயிற்சிகளை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.  மேலும், அந்தமான் நிகோபார் தீவுகளில் பயிலும் மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய அடைவுத் தேர்வுகளின் முடிவுகளை ஆய்வு செய்தல் மற்றும் மாணவர்களுக்கு குறைதீர் பயிற்சிஅளிக்க உதவுதல், பாடநூல்கள் தயாரித்தல் ஆகிய பணிகளில், தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை சார்பாக தக்க ஆதரவு வழங்கப்படும். அந்தமான் நிகோபார் தீவுகளில் பயிலும் மாணவர்களின் நலன் கருதி, தமிழ்நாடுமாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தயாரித்து இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ள பாடங்கள் சார்ந்த காணொலிக் காட்சிகள் மற்றும் விரைவுத் துலக்கக் குறியீடுகளின் வாயிலாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள இணைய வளங்கள்ஆகியவைகளைஅவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் வகைசெய்யும்.
  • இயற்கை விவசாய நிபுணர் நெல் ஜெயராமன் காலமானார்: திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கட்டிமேடு கிராமத்தைச் சேர்ந்த இயற்கை விவசாய ஆர்வலர் நெல். ஜெயராமன்(50) 06-12-2018 அன்று காலமானார்.  ‘நமது நெல்லை காப்போம்’ என்ற இயக்கத்தை நடத்தி வந்த அவர், பாரம்பரிய நெல் ரகங்களை தமிழக விவசாயிகளிடம் பிரபலப்படுத்தினார். 174 நெல் ரகங்களை அழிவில் இருந்து மீட்டெடுத்த பெருமையும் அவரையே சாரும். அதனால், வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரால் ‘நெல்’ ஜெயராமன் என்று பாராட்டப்பட்டார். ஒவ்வொரு ஆண்டும் பாரம்பரிய நெல் கண்காட்சியை நடத்தி இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்தினார்.
  • உதகையில் உள்ள மத்திய உருளைக்கிழங்கு ஆய்வு நிலையத்தை (Central Potato Research Institute) மூட மத்திய அரசு முடிவு : நீலகிரி மாவட்டம் உதகையில் மத்திய உருளைக்கிழங்கு  ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.ஏ.ஆர்.) முடிவு செய்திருப்பதாக   செய்திகள் வெளியாகியுள்ளன.  1957-ம் ஆண்டில் அந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், தமிழக அரசு ஆகியன கூட்டாக கடந்த 70 ஆண்டுகளாக உருளைக்கிழங்கு உற்பத்தியாளர்களுக்கு இந்த நிறுவனம் சேவை செய்து வருகிறது.
  • ஸ்டெர்லைட் விவகாரம்த்தில் தருண் அகர்வால் விசாரணைக் குழுவின் அறிக்கையை நிராகரிக்க பசுமைத் தீர்ப்பாயத்தில் தமிழக அரசு கோரிக்கை : ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைத்தது நியாயமானதாக இல்லை என்று ஓய்வுபெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான விசாரணை குழு தாக்கல் செய்த அறிக்கையை தேசிய பசுமைத் தீர்ப்பாயம் நிராகரிக்க வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
  • தமிழகத்தில், கஜா புயல் தாக்குதலினால் பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ள குடும்பங்களுக்கு, அவசர நிதி உதவியாக, 84 லட்சம் ரூபாய் அளிப்பதாக, ஐரோப்பிய யூனியன் அறிவித்துள்ளது. இதன் மூலம், நாகை, திருவாரூர் மற்றும் தஞ்சை மாவட்டங்களைச் சேர்ந்த, 17 ஆயிரத்து, 500 பேர் பயனடைவர்.
  • காவிரியின் குறுக்கே, மேக்கேதாட்டுவில் புதிய அணை கட்டும் நடவடிக்கைகளுக்காக கர்நாடக மாநிலத்துக்கும் அதற்கு அனுமதி அளித்ததற்காக மத்திய நீர் வளத் துறைக்கும் சட்டப் பேரவையில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதற்கான அரசின் தனித் தீர்மானம் பேரவையில் 06-12-2018 அன்று ஒருமனதாக நிறைவேறியது.

இந்தியா

  • டாக்டர் பி ஆர் அம்பேத்கர் ஊடக அதிகாரமளிப்பதற்கான பள்ளியில் (Dr B.R. Ambedkar School of Media Empowerment ) மாணவர் சேர்க்கையை மத்திய சமூகநீதி மற்றும் மேம்பாட்டு அமைச்சர்  திரு.தாவர்சந்த் கெலாட் தொடங்கி வைத்தார்.
    • பத்திரிகைத் துறையில், தலித் மற்றும் பழங்குடி இளைஞர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்கு  முதன் முதலில் புது தில்லியில்  அமைக்கப்பட்டுள்ள இந்த ஊடகப்பள்ளிக்கு மக்கள் தொடர்புக்கான இந்திய கல்விக் கழகத்தின் (ஐ ஐ எம் சி) ஆதரவுடன் செயல்படுகிறது.  இந்தப் பள்ளியின் கிளைகள் புனே, அசாம், அருணாச்சலப்பிரதேசம், உத்தராகண்ட் மற்றும் நாட்டின் இதரப் பகுதிகளில் அமைக்கப்படும்.
    • செயற்கை நுண்ணறிவு, இணையப் பாதுகாப்பு உள்ளிட்ட இதழியல்     மற்றும் மக்கள் தொடர்பு சார்ந்த அனைத்து  முக்கிய பாடப்பிரிவுகளையும், இந்த ஊடகப்பள்ளிக் கொண்டிருக்கும்.
  • வேளாண் ஏற்றுமதிக்கொள்கை 2018 (Agriculture Export Policy, 2018) -க்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை 06-12-2018 அன்று ஒப்புதல் வழங்கியுள்ளது.
    • மேலும், மத்தியில் கண்காணிப்புக் கட்டமைப்பை (Monitoring Framework at Centre)  நிறுவும் ஆலோசனைக்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு வர்த்தக அமைச்சகம், மேம்பாட்டு முகமையாக செயல்படும். சம்பந்தப்பட்ட மாநில அரசுகளின் பிரதிநிதிகள், பல்வேறு அமைச்சகங்கள், துறைகள், முகமைகள், ஆகியவை வேளாண் ஏற்றுமதிக் கொள்கையின் அமலாக்கத்தைக் கண்காணிக்கும்.
    • 2022 ஆம் ஆண்டிற்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவது என்ற மத்திய அரசின் இலக்கை அடைவதில்   விவசாயப் பொருட்களின் ஏற்றுமதி முக்கிய பங்களிக்கும் என்பதை உணர்ந்து மத்திய அரசு இந்த  வேளாண் ஏற்றுமதிக்கொள்கையை வெளியிட்டுள்ளது.
    • வேளாண் துறையில் உலக சக்தியாக இந்தியாவை உருவாக்குதல், விவசாயிகளின் வருமானத்தை அதிகரித்தல் பொருத்தமான கொள்கை திட்டங்கள் மூலம் இந்திய வேளாண் வளங்கள் ஏற்றுமதியை ஊக்கப்படுத்துதல் ஆகியவை இந்தக் கொள்கையின் தொலைநோக்குப் பார்வையாகும்.
வேளாண் ஏற்றுமதிக்கொள்கையின் நோக்கங்கள்:
  • 2022-க்குள் வேளாண் பொருள்கள் ஏற்றுமதியை இரண்டு மடங்காக்குவது.
  • 2022 -க்குள், இந்தியாவின் விவசாய பொருட்களின் ஏற்றுமதியை தற்போதைய 30 பில்லியன் அமெரிக்க டாலர் என்பதிலிருந்து 60 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமாக உயர்த்துதல்.
  • அழுகும் பொருட்கள் உள்ளிட்ட வேளாண் பொருட்களை மதிப்புக்கூட்டி நமது ஏற்றுமதி நிலையை மாற்றி அமைப்பது.
  • புதிய, உள்நாட்டுத் தன்மை உடைய, இயற்கையான, நெறிமுறை சார்ந்த, பாரம்பரிய மற்றும் பாரம்பரியம் அல்லாத வேளாண் பொருட்களை ஏற்றுமதி செய்வது.
  • தூய்மைப்பிரச்சினை மற்றும் பிற தடைகளை அகற்றி எளிதாக சந்தை வாய்ப்பு கிடைப்பதற்கு நிறுவன முறையை உருவாக்குவது.
  • வெகுவிரைவில் உலக மதிப்புத் தொடருடன் ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி வேளாண் பொருட்கள் ஏற்றுமதியில் இந்தியாவின் பங்கினை இரண்டு மடங்காக்கப் பாடுபடுவது.
  • வெளிநாட்டுச் சந்தைக்கான ஏற்றுமதி வாய்ப்புகளின் மூலம் விவசாயிகளை ஆதாயம் பெறச் செய்வது.
  • சாக்புர்காண்டி அணைத் திட்டம் (Shahpurkandi Dam Project) : பஞ்சாப் மாநிலம் ராவி ஆற்றின் மீது அமைக்கப்படவிருக்கும் ”சாக்புர்காண்டி அணைத் திட்டத்திற்கு”  மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • பலதுறை சார்ந்த இணையதளம் மற்றும் அதனை பயன்படுத்துவோரின் தேசிய இயக்கத்தைத் (National Mission on Interdisciplinary Cyber-Physical Systems) தொடங்க பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை 6-12-2018 அன்று  ஒப்புதல் அளித்துள்ளது. 
    • இந்தத் திட்டம் ரூ.3,360 கோடி மதிப்பில் ஐந்தாண்டு காலத்திற்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையால் அமல்படுத்தப்படும்.
    • சமூகத்தில் அதிகரித்து வரும் தொழில்நுட்பத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், சர்வதேசப் போக்குகளையும் அடுத்தத் தலைமுறை தொழில்நுட்பங்களுக்கான முன்னணி நாடுகளின்  திட்டங்களைக் கணக்கில் கொள்வதற்கும் தேசிய இயக்கம் பயன்படும்.
    • சிபிஎஸ்-(Cyber Physical Systems) ல் தொழில்நுட்ப மேம்பாடு, செயல்முறை மேம்பாடு, மனிதவள மேம்பாடு, திறன் விரிவாக்கம், தொழில் முனைதல், புதுமைத் தொழில் வளர்ச்சி, மற்றும் இவற்றோடு தொடர்புடைய தொழில்நுட்பங்களை எதிர்கொள்வதற்கு இது ஒரு விரிவான இயக்கமாக இருக்கும். 15 தொழில்நுட்ப கண்டுப்பிடிப்பு மையங்கள், 6 செயல்முறை மேம்பாட்டு மையங்கள், 4 தொழில்நுட்பப் பரிமாற்ற ஆய்வுப் பூங்காக்கள் ஆகியவற்றை உருவாக்குவது இந்த இயக்கத்தின் நோக்கமாகும்.
    • பலதுறை சார்ந்த இணையதளம் மற்றும் அதனைப் பயன்படுத்துவோரின் தேசிய இயக்கம் என்பது மத்திய அமைச்சகங்கள், மாநில அரசுகள், தொழில்துறை, கல்வி நிறுவனங்கள் என ஒட்டுமொத்த இந்தியாவையும் உள்ளடக்கியதாக இருக்கும்.
  • Ideate for India- Creative Solutions using Technology” என்ற பெயரில்  பள்ளி மாணவர்களுக்கான தேசிய அளவிலான  தொழில்நுட்ப போட்டிகளை மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்பம், சட்டம் மற்றும் நீதி அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் 6-12-2018 அன்று புது தில்லியில் துவக்கி வைத்தார்.
  • 1 ஏப்ரல் 2019 முதல் புதிதாக விற்கப்படும் அனைத்து வாகனங்களிலும்  ‘உயர்தர பாதுகாப்பு பதிவு தகடுகளை” (High Security Registration Plates – HSRP)  விற்பனைக்கு முன்னதாக பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.  இதற்காக, மத்திய மோட்டார் போக்குவரத்து வாகனங்களின் சட்டம், 1989 -ல் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. 
  • இந்தியாவின் இரண்டாவது உள்நாட்டு சரக்கு போக்குவரத்து “MV RN தாகூர் (MV RN Tagore) கப்பலின் மூலம் கல்கத்தாவிலிருந்து பாட்னா வழித்தடத்தில் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. இந்தியாவின் முதல் சரக்கு கப்பல்  நவம்பர் 2018 ல், கல்கத்தாவிலிருந்து -  வாரணாசிக்கு  வந்தடைந்தது குறிப்பிடத்தகக்து.
கூ.தக. :
  • நதிகளில் கப்பல்கள் மூலம் சரக்குகளை எடுத்துச் செல்வதற் காக சிறிய அளவில் உள்நாட்டி லேயே ஆங்காங்கே துறைமுகம் மற்றும் சரக்கு போக்குவரத்து முனையங்கள் தற்போது ஏற்படுத் தப்பட்டு வருகின்றன.
  • இந்தத் திட்டத் தின்கீழ் கங்கை நதியில் வார ணாசி கரையில் ,கடந்த நவம்பர் 2018 -ல், இந்தியாவின் முதலாவது உள்நாட்டு நீர்வழி சரக்கு போக்குவரத்து முனையத்தை  உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
  • இந்த முதல் நீர்வழி போக்குவரத்துத் தடத்தில் முதல் சரக்கு கப்பல் கல்கத்தாவிலிருந்து -  வாரணாசிக்கு வந்தடைந்தது. ரவீந்திரநாத் தாகூர் என்ற பெய ரிலான கப்பல் சரக்குகளை எடுத்து வந்தது. இதில் 16 பெரிய சரக்குப் பெட்டகங்கள் வந்திறங்கின. பெப்ஸி நிறுவனத்தின் இந்த சரக்குகள் கப்பலில் எடுத்து வரப் பட்டு வாரணாசி துறைமுகத்தில் இறக்கப்பட்டன.
  • யூனியன் பிரதேச நிர்வாகிகளுக்கு சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க அதிகாரம்: உள்கட்டமைப்புத் திட்ட ஒப்பந்தங்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க ஏதுவாக, யூனியன் பிரதேசங்களை நிர்வகிக்கும் துணைநிலை ஆளுநர்கள், நிர்வாகிகளுக்கு சிறப்பு நீதிமன்றங்களை அமைக்கும் அதிகாரத்தை மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கியுள்ளது.
  • இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரபலமாக விளங்கும் உலக தலைவர்களின் பட்டியலில் மோடி முதலிடம் பிடித்துள்ளார். இன்ஸ்டாகிராமில் அவரை 1.48 கோடி பேர் பின்தொடர்கின்றனர்.
  • உலக அளவில் கரியமில வாயு வெளியேற்றத்தில் இந்தியா 4வது இடத்தில் உள்ளது என ஆய்வில் தகவல் : உலக அளவில் கரியமில வாயு வெளியேற்றுவது பற்றி குளோபல் கார்பன் புராஜெக்ட் என்ற பெயரிலான ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. இதில், 2017ம் வருடத்தில் சீனா (27 சதவீதம்), அமெரிக்கா (15 சதவீதம்), ஐரோப்பிய யூனியன் (10 சதவீதம்) மற்றும் இந்தியா (7 சதவீதம்) ஆகிய நாடுகள் முதல் நான்கு இடங்களை பிடித்துள்ளன.  இந்த நாடுகளில் இருந்து 58 சதவீதம் அளவிற்கு கரியமில வாயுக்கள் வெளியேற்றப்படுகின்றன.  மற்ற நாடுகள் 41 சதவீதம் அளவிற்கு கரியமில வாயுக்களை வெளியேற்றுகின்றன.
    • 2018ம் ஆண்டில், தொடர்ந்து வலுவாக வளர்ச்சி அடைந்து வரும் இந்தியாவின் கரியமில வாயுக்கள் வெளியேற்றம் சராசரியாக 6.3 சதவீதம் என்ற அளவில் உள்ளது. இவற்றில் நிலக்கரி (7.1 சதவீதம்), எண்ணெய் (2.9 சதவீதம்) மற்றும் வாயு (6.0 சதவீதம்) என அனைத்து எரிபொருள்களின் பயன்படுத்துதலில் இந்தியா வளர்ச்சி அடைந்துள்ளது என ஆய்வு தெரிவிக்கின்றது.
    • இந்த ஆய்வில் முதல் 10 இடங்களில் சீனா, அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், இந்தியா, ரஷ்யா, ஜப்பான், ஜெர்மனி, ஈரான், சவூதி அரேபியா மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகள் உள்ளன என தெரிய வந்துள்ளது.

வெளிநாட்டு உறவுகள்

  • 06 டிசம்பர் 2018 அன்று பிரதமர் மோடி அவர்களின் தலைமையிலான மத்திய கேபினட், பல்வேறு நாடுகளுக்கிடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்களுக்கு ஒப்புதல் வழங்கினது. அவற்றின் விவரம் வருமாறு,
    • இந்தியா - ஜப்பான் நாடுகளுக்கிடையே, சுகாதாரத்துறை, சுற்றுசூழல் துறை மற்றும் அஞ்சல் துறைகளில் பரஸ்பர ஒத்துழைப்பிற்கான ஒப்பந்தங்களுக்கு (Memorandum of Cooperation (MoC)) ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பங்கள், பிரதமர் மோடி அவர்களின் ஜப்பானிய பயணத்தின் போது, 29-10-2018 அன்று செய்துகொள்ளப்பட்டதாகும்.
    • இந்தியா மற்றும் அமெரிக்கா நாடுகளுக்கிடையே, 1 நவம்பர் 2018 அன்று செய்துகொள்ளப்பட்ட , புவி அறிவியல் (Earth Sciences) துறையில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
    • இந்தியா மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கிடையே 17-10-2018 அன்று செய்துகொள்ளப்பட்ட ஆற்றல் பாதுகாப்பு மற்றும் ஆற்றல் திறன் (energy efficiency / energy conservation) தொடர்பான துறைகளில் ஒத்துழைப்பிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
    • இந்தியா மற்றும் தஜ்கிஸ்தான் நாடுகளுக்கிடையே விண்வெளி தொழில்நுட்பங்களை அமைதி மற்றும் வளர்ச்சிக்காகப் பயன்படுத்துதலில் ஒத்துழைப்பு வழங்குவதற்காக 8-10-2018 அன்று செய்துகொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்திற்கு மத்திய கேபினட் ஒப்புதல் வழங்கியுள்ளது.
    • மனிதர்களைக் கொண்ட விண்வெளிப்பயணத் திட்டத்தில் (Human Spaceflight Programme) இந்தியா மற்றும் ரஷ்யா நாடுகளின் கூட்டு நடவடிக்கைகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.  இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் புதுதில்லியில் அக்டோபர் 15 2015 அன்று கையெழுத்திடப்பட்டது.
    • இந்தியா மற்றும் ஜிம்பாவே நாடுகளுக்கிடையே நிலவியல், சுரங்கம் மற்றும் தாதுப்பொருட்கள் வளங்கள் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பு வழங்குவதற்காக 3-11-2018 அன்று செய்துகொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
    • இந்தியா மற்றும் உஸ்பெகிஸ்தான் நாடுகளுக்கிடையே, விண்வெளி ஆராய்ச்சிகளை அமைதிக்கான நோக்கங்களுக்கு பயன்படுத்துவதற்காக (Cooperation in the Peaceful Uses of Outer Space), 1-10-2018 அன்று (உஸ்பெகிஸ்தான் அதிபரின் இந்தியப் பயணத்தின் போது) செய்துகொள்ளப்பட்ட  புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு  மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
    • இந்தியா மற்றும் மொராக்கோ நாடுகளுக்கிடையே, விண்வெளி ஆராய்ச்சிகளை அமைதிக்கான நோக்கங்களுக்கு பயன்படுத்துவதற்காக(Cooperation in the Peaceful Uses of Outer Space), 25-09-2018 அன்று   செய்துகொள்ளப்பட்ட  புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு   மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
    • இந்தியா மற்றும் அல்ஜீரியா நாடுகளுக்கிடையே விண்வெளி அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் பயன்பாடு துறைகளில்  ஒத்துழைப்பிற்காக 19-09-2018 அன்று செய்துகொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
    • இந்தியா - ஆர்மீனியா நாடுகள் இணைந்து அஞ்சல்தலை வெளியிடுவது (joint issue of postage stamp) குறித்து ஜீன் 2018 ல் செய்துகொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
      • இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி மத்திய தகவல் தொடர்பு துறையின் கீழ் இயங்கும் அஞ்சல் துறை மற்றும் ஆர்மீனியாவின் தேசிய அஞ்சல் துறை ‘டென்ஸ்’ என்ற தலைப்பில் இந்தியாவும் அமெரிக்காவும் கூட்டாக அஞ்சல் தலைகளை வெளியிட ஒப்புக் கொண்டன. இதன்படி ஆகஸ்ட் 2008-ல் இந்த அஞ்சல் தலைகள் வெளியிடப்பட்டன.
      • இந்த நினைவு அஞ்சல் தலைகளில் மணிப்புரி நடனமும் ஆர்மீனியாவின் ”ஹொவ் ஆரெக்” (HovArek Dance) நடனமும் வெளியிடப்பட்டுள்ளன.
    • ஹேண்ட் இன் ஹேண்ட் 2018” (Hand-in-Hand 2018) என்ற பெயரில் இந்தியா மற்றும் சீனா நாடுகளின் கூட்டு இராணுவப்பயிற்சி  சீனாவின் செங்குடு (Chengdu) நகரில்  10-23 டிசம்பர் 2018 தினங்களில் நடைபெறவுள்ளது.
    • கச்சா எண்ணெய் இறக்குமதியின் போது , ரூபாயில் பணப்பரிமாற்றம் செய்ய இந்தியா-ஈரான் நாடுகள் ஒப்பந்தம் செய்துள்ளன. இதையடுத்து, இறக்குமதி கச்சா எண்ணெய்க்கான விலை முழுவதையும் ரூபாயாகவே யூகோ வங்கியில் ஈரானிய தேசிய எண்ணெய் நிறுவனத்தின் பெயரில் இந்தியா செலுத்தும். அந்தத் தொகையில் பாதியை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யும் பொருள்களுக்காக ஈரான் பயன்படுத்திக் கொள்ளும்.
    • ஸ்வீடன் மற்றும் இந்தியா நாடுகளுக்கிடையே புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையில்  இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்  3-12-2018 அன்று செய்துகொள்ளப்பட்டுள்ளன.

விருதுகள்

  • புதுமையான இளம் ஆராய்ச்சியாளர்களுக்கான உயிரி தொழில்நுட்ப விருது 2018” (Innovative Young Biotechnologist Award (IYBA) 2018) ஐ.ஐ.டி மாண்டியின் பேராசிரியர்  ராஜானிஷ் கிரி (Dr. Rajanish Giri) க்கு வழங்கப்பட்டுள்ளது. ஷிகா வைரஸ்க்கு எதிரான தடுப்பு நடவடிக்கையின் மீதான புதுமையான  யோசனைகளுக்காக இவருக்கும் இந்த விருதை மத்திய உயிரிதொழில்நுட்ப துறை அறிவித்துள்ளது.

திட்டங்கள்

  • முக்யமந்திரி தீர்த் யாத்ரா யோஜனா (‘Mukhyamantri Teerth Yatra Yojana’) என்ற பெயரில் மூத்த குடிமக்களுக்கு இலவச ஆன்மீக சுற்றுலா பயண திட்டத்தை தில்லி மாநில அரசு அறிவித்துள்ளது.

மாநாடுகள் / கூடுகைகள்

  • ஸ்டார்ட் அப் இந்தியா முதலீட்டு கூடுகை 2018  (Annual Startup India Venture Capital Summit 2018), ”இந்தியாவில் கண்டுபிடிப்புகளுக்காக உலகளாவிய முதலீட்டை திடட்டுதல்” (Mobilizing Global Capital for Innovation in India.) எனும் மையக்கருத்தில்,  7 டிசம்பர் 2018 ல் கோவாவில் நடைபெறுகிறது.

நியமனங்கள்

  • ஐ.நா. சமூக பொருளாதார மற்றும் கலாச்சார உரிமைகள் குழுவின்(Committee on Economic, Social and Cultural Rights (CESCR)) ஆசியா-பசுபிக் இருக்கைக்கு இந்தியாவைச் சேர்ந்த  பிரீத்தி சரண்  (Preeti Saran) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

முக்கிய தினங்கள்

  • படைவீரர் கொடிநாள் - டிசம்பர் 7
    • கொடி நாளில் திரட்டப்படும் நன்கொடைகள், முன்னாள் படைவீரர்கள், ஊனமுற்ற படைவீரர்கள், போர் விதவைகள் மற்றும் குடும்பத்தினருக்கு தமிழக அரசு முன்னாள் படைவீரர் நலத் துறை மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு நலத் திட்டங்களுக்காக, முழுவதுமாகப் பயன்படுத்தப்படுகின்றன.

விளையாட்டு

  • அட்மிரல்ஸ் கோப்பை படகுப்போட்டியில் (‘Admirals Cup’ Sailing Regatta (2018)) இந்தாலியைச் சேர்ந்த அணி வெற்றி பெற்றுள்ளது.  கேரள மாநிலம் கண்ணூர்  மாவட்டத்திலுள்ள “எட்டிக்குளம் கடற்கரையோரம்” (Ettikulam Beach) நடைபெற்ற இந்த போட்டியில் சிங்கப்பூர் மற்றும் அமெரிக்க அணிகள் முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பெற்றன.
  • அகில இந்திய காவல்துறை துப்பாக்கிச் சுடும் போட்டிகள் 2018 (All India Police (AIPDM) Shooting Competition-2018) ஹரியானாவின் குருகிராமில் 6-12-2018 அன்று துவங்கியது.
  • அதிவேகமாக 200 டெஸ்ட் விக்கெட் வீழ்த்தி பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் யாசிர் ஷா 82 ஆண்டுகால சாதனையை முறியடித்துள்ளார். இதன் மூலம், கடந்த 1936-இல் ஜோஹன்னஸ்பர்க்கில் நடந்த டெஸ்ட் ஆட்டத்தில் ஆஸி. லெக் ஸ்பின்னர் கிளாரி கிரிம்மட் 36 டெஸ்ட் ஆட்டங்களில் 200 விக்கெட்டை வீழ்த்தி இருந்ததே சாதனையாக இதுவரை இருந்தது. ஆனால் யாசிர் ஷா தற்போது 33 டெஸ்ட் ஆட்டங்களில் 200 விக்கெட்டை வீழ்த்தி அதை முறியடித்தார்.பாகிஸ்தான்-நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே அபுதாபியில் மூன்றாவது டெஸ்ட் ஆட்டத்தின் போது இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது.
  • பல்வேறு குறைபாடுகள் இருந்தும், நீச்சல் போட்டிகளில் சாதனை படைத்ததற்காக 2018ம் ஆண்டுக்கான ஜனாதிபதியின் 'நேஷனல் ரோல் மாடல்' விருது சென்னையைச் சேர்ந்த ஸ்ரீராம் சீனிவாஸ் என்ற மாற்றுத்திறனாளி இளைஞருக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • சர்வதேச தடகள கூட்டமைப்பின்” (International Association of Athletics Federations (IAAF)) 2023 ஆம் ஆண்டின் உலக சாம்பியன்ஷிப் போட்டிகள்    ஹங்கேரிய தலைநகர் புடாபெஸ்டில் நடைபெறுவதாக அறிவித்துள்ளது.

அறிவியல் & தொழில்நுட்பம்

  • டீசல் என்ஜினை மின்சார என் ஜினாக மாற்றி இந்திய இரயில்வே சாதனை படைத்துள்ளது. மேலும், ரயில்வேயை முற்றிலும் மின்மயமாக்கும் நோக்கிலும், கார்பன் வெளியீட்டை முழுவதுமாகக் குறைக்கும் நோக்கிலும் டீசல் என்ஜினை மின்சார என்ஜினாக மாற்றும் முயற்சியில், வாராணசியிலுள்ள டீசல் என்ஜின் பணிமனை ஈடுபட்டு வந்தது.  அந்த மின்சார என்ஜினுக்கு ரயில்வே வாரியம் கடந்த நவம்பர் மாதம் 27-ஆம் தேதி ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, இந்த மின்சார என்ஜினைக் கொண்ட ரயில் வாராணசியில் இருந்து லூதியாணா வரை கடந்த டிசம்பர் 3-ஆம் தேதி   முதன்முதலாக வெற்றிகரமாக் இயக்கப்பட்டுள்ளது. உலக அளவில் இத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது இதுவே முதல் முறை என்று அந்தக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இறந்து போன பெண்ணின் கருப்பையை பொருத்திக்கொண்ட பெண்ணுக்கு குழந்தை - பிரேசிலில் மருத்துவ அதிசயம். : முதல் முறையாக மருத்துவ அதிசயமாக, பிரேசில் நாட்டில் இறந்து போன ஒரு பெண்ணின் கருப்பையை பொருத்திக்கொண்ட பெண்ணுக்கு குழந்தை பிறந்துள்ளது. இந்த அறுவை சிகிச்சை பிரேசில் நாட்டின், சா பாவ்லோ நகரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் நடந்துள்ளது.

புத்தகங்கள் / ஆசிரியர்கள்

  • குடியரசின் நெறிமுறை(“The Republican Ethic”), மற்றும் “லோக்தந்த்ர கி ஸ்வார் (குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தின் தெரிவு செய்யப்பட்ட உரைகள்) ( “Loktantra Ke Swar” (Selected Speeches of President Shri Ram Nath Kovind)) எனும் புத்தகங்களை மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் வெளியீட்டுப் பிரிவு இயக்ககம் 8-12-2018 அன்று வெளியிடுகிறது.

Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!