நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

TNPSC Current Affairs 10th December 2018 | நடப்பு நிகழ்வுகள் 10 டிசம்பர் 2018

TNPSC Current Affairs 10th December 2018
☞   Previous Days' Current Affairs Notes
☞  Today / Previous Days' Current Affairs Quiz

தமிழ்நாடு

  • தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பிற்காக ‘181’ இலவச தொலைபேசி எண் 10-12-2018 முதல் அறிமுகம் செய்யப்பட உள்ளது. 
    • நாடு முழுவதும் பெண்களின் பாதுகாப்பிற்காக ‘181’ என்னும் இலவச தொலைபேசி எண்ணை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. தில்லி, குஜராத் உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில் மட்டும் இந்த சேவை தற்போது செயல்பாட்டில் உள்ளது. இந்நிலையில் தமிழகத்திலும் இந்த ‘181’ இலவச தொலைபேசி எண்  அறிமுகம் செய்யப்பட உள்ளது.  
    • குடும்ப வன்முறை, வரதட்சணை கொடுமை, பாலியல் துன்புறுத்தல், உடல்-மனநல பாதிப்புகள், பெண்களுக்காக அரசு செயல்படுத்தும் திட்டங்கள், பள்ளிகள், கல்லூரிகளில் வழங்கப்படும் ஸ்காலர்ஷிப்புகள் உள்பட குழந்தைகள் முதல் முதியோர் வரை பெண்களுக்கு தேவையான உதவி மற்றும் பாதுகாப்புக்கு இந்த எண்ணை அழைக்கும் வகையில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது
    • இந்த சேவை மையத்துடன் காவல்துறை, மருத்துவம், சட்ட உதவிகள், கவுன்சிலிங் ஆகிய துறைகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. பெண்களிடம் இருந்துவரும் அழைப்புகளின் அடிப்படையில் அவர்களுக்கு தேவையான உதவிகள் வழங்க இது ஏதுவாக இருக்கும்.

இந்தியா

  • ”இராணுவ இலக்கிய திருவிழா 2018” (Military Literature Festival (MLF) 2018) 7-12-2018 அன்று சண்டிகாரில் நடைபெற்றது. இந்திய இராணுவம், பஞ்சாப் மற்றும் ஹரியானா அரசுகள் இணைந்து இந்த நிகழ்வை நடத்தியுள்ளன.
  • இந்தியாவின் முதல் நீருக்கடியிலான அருங்காட்சியகம் புதுச்சேரி கடல்பகுதியில், இந்திய கடற்படையிலிருந்து கடந்த மார்ச் 2018 -ல் திரும்பப்பெறப்பட்ட  “ஐ.என்.எஸ்.கடலூர் (INS Cuddalore) போர்க்கப்பலில்  அமைக்கப்படவுள்ளது.
  • கேரள மாநிலம், கண்ணூரில் புதிதாக கட்டமைக்கப்பட்ட சர்வதேச விமான நிலையம் 09-12-2018 அன்று திறக்கப்பட்டது.
    • கேரளத்தின் 4-ஆவது சர்வதேச விமான நிலையம் இதுவாகும். இதன் மூலம் 4 சர்வதேச விமான நிலையங்கள் கொண்ட ஒரே மாநிலம் என்ற பெருமையை கேரளம் அடைந்துள்ளது.
    • ஏற்கெனவே திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு ஆகிய இடங்களில் சர்வதேச விமான நிலையங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

உலகம்

  • சீனாவின் ”சாங்கி 4 செயற்கைக்கோள் (Chang’e-4 mission) :  சந்திரனின்  தொலைதூரப்பகுதியான வான் கார்மான் மையத்தில் (Von Karman crater)  முதல் முறையாகத் தரையிறங்கும் இலக்குடன்,  சீனாவின் ”சாங்கி 4 செயற்கைக்கோள்” (Chang’e-4 mission) 7-12-2018 அன்று வெற்றிகரமாக  விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.  இந்த முயற்சி வெற்றிகரமாக நடைபெற்றால், வான் கார்மான் மையத்தில் (Von Karman crater)  தரையிறங்கி முதல் நாடு எனும் பெருமையை சீனா பெறும்.

வெளிநாட்டு உறவுகள்

  • இந்த்ரா கடற்படை பயிற்சி 2018 (INDRA NAVY 2018) : இந்த்ரா கடற்படை பயிற்சியின் 10-வது போர்ப்பயிற்சி, 2018 டிசம்பர் 9 முதல் 16 வரை விசாகப்பட்டினம் கடற்பகுதியில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக, ரஷ்யக் கூட்டமைப்பின் கடற்படை கப்பல்களான வர்யாக், அட்மிரல் பேன்டிலேயவ் மற்றும் போரிஸ் புட்டோமா ஆகியவை 9 டிசம்பர், 2018 அன்று விசாகப்பட்டினம் வந்துள்ளன.
    • இருநாட்டு கடற்படைகள் இடையேயான செயல்பாட்டு திறனை மேம்படுத்துதல், பொதுவான புரிந்துணர்வை மேம்படுத்துதல் மற்றும் கடலோரப் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான நடைமுறைகளை வகுப்பதே இந்தக் கூட்டுப் போர்ப்பயிற்சியின் நோக்கமாகும்.
    • கடந்த 2003 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த்ரா கடற்படை பயிற்சி, கடந்த பல ஆண்டுகளில் அனுபவ முதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதுடன், எதிர்பார்ப்பு, இணக்கம் மற்றும் பங்கேற்பு அளவை மேம்படுத்தியுள்ளது.
  • "எக்ஸ் ஏவியாஇந்த்ரா விமானப்படை பயிற்சி 2018' (Ex Aviaindra 2018) என்ற பெயரில் இந்தியா-ரஷியா இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில், இரு நாட்டு விமானப் படையினர் பங்கேற்கும் 12 நாள் கூட்டுப் பயிற்சி, ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூர் விமானப்படை தளத்தில் 2018 டிசம்பர் 10-21 வரை வரை நடைபெறுகிறது.
    • இந்திய விமானப்படை – ரஷ்ய கூட்டமைப்பின் வான்படை இணைந்து மேற்கொள்ளும் ஏவியாஇந்த்ரா போர்ப்பயிற்சி முதன் முதலில் 2014 ஆம் ஆண்டு நடத்தப்பட்டது.
    • ஏவியாஇந்த்ரா 2018, இந்திய விமானப்படை – ரஷ்ய கூட்டமைப்பின் வான்படை இணைந்து மேற்கொள்ளும் 2-வது பெரிய போர்ப்பயிற்சி ஆகும். இந்தப் போர்ப்பயிற்சி, இரண்டு கட்டங்களாக நடத்தப்பட உள்ளது. 
    • இந்தப் பயிற்சியில், அந்நிய நாட்டின் விமானங்கள் எதுவும் கொண்டுவரப்பட மாட்டாது என்பதே இதன் சிறப்பு அம்சமாகும்.
    • ரஷ்யாவின் லிபெட்ஸ்க் விமானப்படை தளத்தில் 2018 செப்டம்பர் 17 முதல் 28 வரை நடைபெற்ற கூட்டுப் போர்ப்பயிற்சியில் பங்கேற்ற இந்திய விமானப்படை விமானிகள், ரஷ்ய விமானிகளுடன் இணைந்து ரஷ்யக் கூட்டமைப்பின் வான்படை விமானத்தில்தான் பயிற்சி மேற்கொண்டனர்.
    • அதேபோன்று, இந்தியாவில் நடைபெறவுள்ள பயிற்சியிலும் ரஷ்யக் கூட்டமைப்பின் வான்படை விமானிகள், இந்திய விமானப்படை விமானத்தில் இந்திய விமானிகளுடன் இணைந்தே பயிற்சி மேற்கொள்ளவுள்ளனர். இது இருநாட்டு விமானப்படைகளுக்கும் பொதுவான நடைமுறையாகும்.
  • தென்கொரிய பயணிகள் இந்தியா வந்த பிறகு விசா பெறும் வசதி: மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.
    • ஏற்கெனவே, இதே வசதி ஜப்பான் நாட்டுப் பயணிகளுக்கு கடந்த 2016-ஆம் ஆண்டு மார்ச் முதல் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது, 2ஆவது நாடாக தென்கொரியாவுக்கும் இந்த வசதி அளிக்கப்படுகிறது.
    • அந்நாட்டிலிருந்து இந்தியாவுக்கு வரும் தொழிலதிபர்கள், சுற்றுலாப் பயணிகள், மருத்துவ சிகிச்சை பெற வருபவர்கள் உள்ளிட்டோர் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
    • தில்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய விமான நிலையங்களில், இந்த நுழைவு இசைவினை தென்கொரியப் பயணிகள் பெற்றுக் கொள்ள முடியும். இதனை வைத்துக்கொண்டு 60 நாள்களுக்கு அவர்கள் இந்தியாவில் தங்கி இருக்கலாம்.
    • ஆண்டுதோறும் சுமார் 2 லட்சம் தென்கொரியப் பயணிகள் இந்தியாவுக்கு வருகை தருகின்றனர். அவர்களில் 80 சதவீதம் பேர் சுற்றுலாப் பயணிகள் ஆவர்.
    • இது தவிர 166 நாடுகளுக்கு இணையவழி சுற்றுலா நுழைவு இசைவை இந்தியா வழங்கி வருகிறது. தற்போது, வழங்கப்படும் நுழைவு இசைவில் 40 சதவீதம் இணைய வழியில் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
  • இந்தியா-சீனா கூட்டு ராணுவப்பயிற்சி : பயங்கரவாதத்துக்கு எதிராகச் செயல்படும் நோக்கிலும், பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிக்கும் நோக்கிலும் இந்திய-சீன ராணுவப்படைகள் பங்கேற்கும் கூட்டுப்பயிற்சி, தென்மேற்கு சீனாவிலுள்ள செங்டு பகுதியில்    11-12-2018 அன்று தொடங்கவுள்ளது. இரு நாடுகளுக்கிடையே 14 நாள்கள் நடைபெறவுள்ள இந்த  7-ஆவது ராணுவ கூட்டுப்பயிற்சி டிசம்பர்  23-ஆம் தேதி நிறைவடைய உள்ளது.
    • இந்தக் கூட்டு ராணுவப்பயிற்சியில், துப்பாக்கிச்சூடுப் பயிற்சி, அடிப்படைப் பயிற்சிகள் மற்றும் இரு நாடுகளின் சிறப்புப் பயிற்சிகள்ஆகியவை மேற்கொள்ளப்பட உள்ளன'

பொருளாதாரம்

  • இந்தியாவில் கூரை மேலான சூரிய ஒளி சக்தி திட்டங்களை (rooftop solar power projects)  தனியார் நிறுவனங்களின் உதவியுடன்  அமல்படுத்துவதற்காக, ”நபார்டு வங்கி , ஐ.நா. பருவநிலை அமைப்பின்  (United Nations Framework Convention on Climate Change) அங்கீகாரம் பெற்ற “பசுமை பருவநிலை நிதியத்திடம்” (Green Climate Fund) 100 மில்லியன் அமெரிக்க டாலர்  கடனுதவி ஒப்பந்தம் செய்துள்ளது.
  • ஆந்திர மாநில அரசின் நீர் சுத்திகரிப்பு திட்டங்களுக்காக 400 மில்லியன் அமெரிக்க டாலர் கடனுதவி வழங்குவதற்கு ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (Asian Infrastructure Investment Bank (AIIB)) ஒப்புதல் வழங்கியுள்ளது.

விருதுகள்

  • திருமதி இந்தியா யுனிவர்ஸ் க்ளோப் - 2018 பட்டத்தை தமிழகத்தைச் சேர்ந்த சம்யுக்தா பிரேம் வென்றுள்ளார்.இதன் மூலமாக 2019-ம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெறவுள்ள சர்வதேச போட்டியில் பங்கேற்கவுள்ளார்.
  • சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர் (மாநிங்களவை) விருது, மாநிலங்களவை திமுக குழுத் தலைவரான கனிமொழிக்கு வழங்கப்படவுள்ளது.
    • லோக்மால்ட் என்னும் தனியார் செய்தி நிறுவனம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த நாடாளுமன்ற உறுப்பினருக்கான விருதுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் 2018-ஆம் ஆண்டுக்கான சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினருக்கான விருது கனிமொழிக்கு வழங்கப்பட உள்ளது.

மாநாடுகள் / கூடுகைகள்

  • நீடித்த நீர் மேலாண்மை தொடர்பான முதலாவது சர்வதேச மாநாடு (1st International Conference on Sustainable Water Management) மொஹாலியில் (Mohali) 2018 டிசம்பர் 10-11 தேதிகளில் நடைபெறுகிறது.  ‘நீடித்த நீர் மேலாண்மை’ என்பதே இந்த மாநாட்டின் மையக்கருத்தாகும். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, அமெரிக்கா, ஸ்பெயின், நெதர்லாந்து, கொரியா, கனடா, ஜெர்மனி, இலங்கை உள்ளிட்ட நாடுகளின் பிரசித்தி பெற்ற நிறுவனங்களைச் சேர்ந்த ஏராளமான நிபுணர்களும், பிரதிநிதிகளும் இந்த மாநாட்டில் பங்கேற்று, நீர்வளங்களுக்கான நீடித்த மேம்பாடு தொடர்பான அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் அதன் பயன்பாடு குறித்த தங்களது அனுபவங்கள் மற்றும் நிபுணத்துவத்தை பகிர்ந்துகொள்ள உள்ளனர்.

முக்கிய தினங்கள்

  • சர்வதேச ஊழலுக்கெதிரான தினம் (International Anti-Corruption Day) - டிசம்பர் 9  | மையக்கருத்து 2018 :   ஊழல் : நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகளை அடைவதற்கான தடை (Corruption: An impediment to Sustainable Development Goals)

விளையாட்டு

  • விளையாடு இந்தியா இளைஞர்கள் விளையாட்டு போட்டிகள் (Khelo India Youth Games) ஜனவரி, 2019 -ல் பூனேவில் நடைபெறுகின்றன.
Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!