நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

TNPSC Current Affairs 9th December 2018 | நடப்பு நிகழ்வுகள் 9 டிசம்பர் 2018

☞   Previous Days' Current Affairs Notes
☞  Today / Previous Days' Current Affairs Quiz
TNPSC Current Affairs 9th December 2018

இந்தியா

  • கேரள மாநிலத்துக்கு குறைந்த வட்டியில், ரூ.720 கோடியை கடனாக வழங்க ஜெர்மனி நாடு முன்வந்துள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் மறு கட்டமைப்பு பணிகளுக்காக இந்த தொகைப் பயன்படுத்தப்படும்.
  • 2008-ம் ஆண்டு நவம்பர் 26 -ல்  மும்பையில் தாக்குதலை நடத்தியது ‘லஷ்கர் இ-தொய்பா’ இயக்கம்தான் என்று பாகிஸ்தான்  முதல் முறையாக வெளிப்படையாக ஒப்புக்கொண்டு உள்ளது.
  • உலகளவில் சாலை விபத்துகளில் இந்தியா முதலிடத்திலுள்ளதாக உலக சுகாதார நிறுவனத்தின் Global Status Report on Road Safety என்ற அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • கூ.தக. : 2010-2020 வரையிலான பத்தாண்டு காலத்தை “சாலை விபத்தை தவிர்ப்பதற்கான நடவடிக்கை எடுப்பதற்கான பத்தாண்டாக” (Decade of Action for Road Safety) ஐக்கிய நாடுகளவை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உலகம்

  • பொது போக்குவரத்தை முற்றிலும் இலவசமாக்கவுள்ள முதல் நாடு எனும் பெருமையை லக்ஸம்பர்க் (Luxembourg) நாடு பெற்றுள்ளது.   2019 ஆம் ஆண்டிற்குள் அனைத்துவிதமான பொது போக்குவரத்துகளின் கட்டணங்களையும் ஒழிப்பதற்கு அந்நாடு திட்டமிட்டுள்ளது.
  • உலகின் மிகப்பெரிய “அரேபிய மொழி ஒலி நூலகம்” (Arabic audio library) துபாயில் துவங்கப்பட்டுள்ளது. அரேபிய நாடுகளில் காணப்படும் 7 மில்லியன் பார்வைக் குறைபாடு கொண்டோர் பயன்படும் வண்ணம்  இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  • ஐ.நா. உலக தீவிரவாத எதிர்ப்புக்க்கான ஒருங்கிணைப்பு (UN Global Counter-Terrorism Coordination Compact) எனும் புதிய அமைப்பை ஐக்கிய நாடுகளவையின் பொதுச்செயலர் ஆண்டோனியோ குட்ரெஸ் 6-12-2018 அன்று துவங்கியுள்ளார்.  இந்த அமைபில், 36 சர்வதேச நிறுவங்கள், இண்டர் போல், உலக சுங்க  நிறுவனம் ஆகியவை இணைந்து செயல்படவுள்ளன.
  • இயற்கை எரிவாயு (Liquified Natural Gas (LNG) )ஏற்றுமதி செய்யும் நாடுகளின் பட்டியலில், 7-12-2018 அன்றைய நிலவரப்படி, கத்தார் நாட்டை பின்னுக்குத் தள்ளி ஆஸ்திரேலியா முதலிடத்தைப் பெற்றுள்ளது. 

பொருளாதாரம்

  • வெளிநாடுகளில் பணிபுரிந்து இந்தியாவுக்கு பணம் அனுப்பி வைப்போர் பட்டியலில் இந்தியா தொடர்ந்து உலகளவில் முதலிடத்தில் நீடித்து வருகிறது. இந்தியாவிலிருந்து புலம் பெயர்ந்து வெளிநாடுகளில் வசித்து வருபவர்கள் இந்த ஆண்டில் இதுவரை 8 ஆயிரம் கோடி அமெரிக்க டாலர்களை ( இந்திய மதிப்பில் ரூ.57.10 லட்சம் கோடி) அனுப்பியுள்ளதாக உலக வங்கி சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
    • இந்தியாவை பின்தொடர்ந்து சீனா 6,700 கோடி டாலர்களும் (ரூ.47.81 லட்சம் கோடி), மெக்ஸிகோ மற்றும் பிலிப்பின்ஸ் நாடுகள் தலா 3,400 கோடி டாலர்களும் (ரூ.24.26 லட்சம் கோடி), எகிப்து 2,600 கோடி டாலர்கள் (ரூ.18.55 லட்சம் கோடி) என பட்டியலில் அடுத்தடுத்த இடங்களை பெற்றுள்ளன.

மாநாடுகள் / கூடுகைகள்

  • இந்திய வங்கிக்கடன் திவால் நெறிமுறைகள் மாநாடு (Insolvency and Bankruptcy Code of India – New Paradigm for Stressed Assets)  அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 5-12-2018 அன்று நடைபெற்றது.  இம்மாநாட்டில் , இந்தியாவின் சார்பாக , இந்திய வங்கிதிவால் வாரியத்தின்” ( M. S. Sahoo ) தலைவர் எம்.எஸ்.சாஹீ கலந்துகொண்டார்.  அமெரிக்காவுக்கான இந்திய கான்சுலேட் ஜெனரல் மற்றும் இந்திய வங்கிதிவால் வாரியம் இணைந்து இந்த கூடுகையை நடத்தியுள்ளன.

நியமனங்கள்

  • இந்திய கல்வி மேம்பாட்டு சங்கத்தின் தேசிய தலைவராக ஜி.விசுவநாதன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

விருதுகள்

  • 68வது உலக அழகி பட்டத்தை மெக்சிகோவின் வனேசா போன்ஸ் டி லியோன்  வென்றுள்ளார். இவருக்கு, 2017ல், உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட, இந்தியாவைச் சேர்ந்த, மானுஷி சில்லார், கிரீடம் அணிவித்தார்.
  • ஃபோர்ப்ஸ் பத்திரிக்கையின் 100 வலிமைமிக்க பெண்கள் பட்டியலில்,  இந்தியாவிலிருந்து  ரோஷிணி நாடார் மல்கோத்ரா (57வது இடம்), கிரண் மஜீம்தார் ஷா (60 வது) ,  சோபனா பார்தியா (88 வது) மற்றும் பிரியங்கா சோப்ரா (94 வது) ஆகிய நான்கு இடங்களைப் பெற்றுள்ளனர்.
  • ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் “கிளீட்ஸ்மான் விருது 2018” (Gleitsman Award) , நோபல் பரிசுப்பெற்ற பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா யூசுஃபி (Malala Yousafzai) - க்கு வழங்கப்பட்டுள்ளது.

 விளையாட்டு

  • முதல்தர கிரிக்கெட்டில் அறிமுக ஆட்டத்தில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார் 21 வயது மத்தியப் பிரதேச கிரிக்கெட் வீரர் அஜய் ரொஹேரா. இந்தூரில் ஹைதராபாத் - மத்திய பிரதேச அணிகளுக்கு இடையிலான ரஞ்சி ஆட்டத்தின் போது,  மத்தியப் பிரதேச அணியின் அஜய் ரொஹேரா  267 ரன்கள் எடுத்துக் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இது ஓர் உலக சாதனை. 24 வருடங்களுக்கு முன்பு மும்பையைச் சேர்ந்த அமோல் முஸும்தார். ஹரியானாவுக்கு எதிரான ரஞ்சி ஆட்டத்தில் 260 ரன்கள் எடுத்ததே முதல்தர கிரிக்கெட்டில் ஓர் அறிமுக வீரர் எடுத்த அதிக ரன்களாக இருந்தது. அந்தச் சாதனையை அஜய் முறியடித்துள்ளார். 

முக்கிய தினங்கள்

  • 2023 ஆம் ஆண்டை “சர்வதேச தினைகளின் ஆண்டாக” (International Year of Millets) கொண்டாட வேண்டுமென்ற இந்தியாவின் கருத்துருவுக்கு  உலக உணவு மற்றும் வேளாண்மை நிறுவனம் (Food and Agriculture organisation (FAO))  ஒப்புதல் வழங்கியுள்ளது.
    • கூ.தக. : ஏற்கனவே இந்திய அரசு, 2018 ஆம் ஆண்டை “தேசிய தினைகள் ஆண்டாக” (National Year of Millets) அனுசரித்துவருவது குறிப்பிடத்தக்கது.
    • ஐ.நாவின் உலக உணவு திட்டத்தின் (United Nations World Food Program (WFP)) செயல் வாரியத்தின் உறுப்பினராகவும் இந்தியா அனுசரிக்கப்பட்டுள்ளது.
  • தேசிய நீர்மூழ்கிக் கப்பல் தினம் ( Submarine Day ) - டிசம்பர் 8 | இந்தியாவின் முதல் நீர்மூழ்கிக்கப்பலான ஐ.என்.எஸ்.கால்வாரி  ( INS Kalvari) 1967 ஆம் ஆண்டு இந்த நாளில் தான் இந்திய கடற்படையில் சேர்த்துக்கொள்ளப்பட்டது.

Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!