நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

TNPSC Current Affairs 11th December 2018 | நடப்பு நிகழ்வுகள் 11 டிசம்பர் 2018

TNPSC Current Affairs 11th December 2018
☞   Previous Days' Current Affairs Notes
☞  Today / Previous Days' Current Affairs Quiz

தமிழ்நாடு

  • இந்தியாவில் முதல் முறையாக, மாணவர்களின்  புகைப்படம் எடுத்து வருகையை பதிவு செய்யும் திட்டம்  தமிழக பள்ளி கல்வித்துறையின் மூலம் , சென்னை, அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் துவங்கி வைக்கப்பட்டுள்ளது. பெங்களூரைச் சேர்ந்த, ஐ.சி.இ.டி., என்ற நிறுவனம் சார்பில், 'ஆன்ட்ராய்ட்' வகை ஆப் வழியாக, இந்த தொழில்நுட்பம் அமலாகிறது.
  • பராந்தக சோழன் கல்வெட்டு கண்டுபிடிப்பு : திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், தெள்ளாறு அருகே உள்ள நெற்குணம் கிராமத்தில், முதலாம் பராந்தக சோழன் கல்வெட்டு கண்டறியப்பட்டது. நெற்குன்றத்துாரில் இருந்த ஏரிக்கு, சோழ சிற்றரசர் ஒருவர், பராமரிப்பு நிலம் வழங்கி, வரிச் சலுகை அளித்த செய்தியை, அந்த கல்வெட்டு தெரிவிக்கிறது.

இந்தியா

  • மத்திய அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதிய திட்டத்தின் கீழ், அரசின் பங்களிப்பை, 10 சதவீதத்தில் இருந்து, 14 சதவீதமாக உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும், பணி ஓய்வு பெற்ற பின் எடுக்கப்படும்,60 சதவீத தொகைக்கு, வரி விலக்கு அளிக்கப்பட்டு வந்தது. இனி, முழுவதுமாக வரி விலக்கு அளிக்கப்படும்.
  • அருணாச்சலப் பிரதேச மாநிலத்தின் 23 வது மாவட்டமாக ஷி யோமி (Shi Yomi) மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அம்மாநிலத்தின் மேற்கு சியாங் ( West Siang ) மாவட்டத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு இந்த புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

உலகம்

  • சார்க் வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டம் (SAARC Chambers of Commerce and Industry meeting) பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் நடைபெற்றது
  • அமெரிக்காவுக்கான ஐ.நா. தூதர் பதவிக்கு, தற்போதைய அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹெதர் நாவெர்ட்டின் பெயரை அதிபர் டிரம்ப் பரிந்துரை செய்துள்ளார்.

வெளிநாட்டு உறவுகள்

  • கஸகஸ்தான் நாட்டின் தூதரகம் குஜராத் மாநிலத்தில் 10-12-2018 அன்று திறக்கப்பட்டுள்ளது.

விருதுகள்

  • ஸ்கோச் தேசிய முக்கியத்துவத்திற்கான விருது (Skoch Award for National Significance) மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அமைச்சரகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
கூ.தக.
  • தற்போது இந்தியாவில் 21% மின்சாரம் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களின் வழையாகவே பெறப்படுகின்றது.
  • உலகளவில், காற்று ஆற்றல் உற்பத்தியில் இந்தியா 4 வது இடத்திலும் , சூரிய ஆற்றல் மற்றும் மொத்த புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தயாரிப்பில் இந்தியா  5 வது இடத்திலும் உள்லது குறிப்பிடத்தக்கது.
  • மிஸ்டர் சூப்பர் நேச்சுரல் பட்டம் 2018 (Mister Supernatural) ஐ இந்தியாவின், கோவாவைச் சேர்ந்த பிரதாமேஷ் மவுலிங்கர்  (Prathamesh Maulingkar)  வென்றுள்ளார்.  உலக அழகிப்போட்டிகளையொத்த ஆண்களுக்கான இந்த போட்டிகள் போலந்து நாட்டின் கிரினிக்கா-ஜித்ரோஜ் (Krynica-Zdroj) நகரில் நடைபெற்றன.

நியமனங்கள் / இராஜினாமா

  • இந்திய ரிசர்வ் வங்கியின் (Reserve Bank of India) 24 வது கவர்னர் உர்ஜித் படேல் தனது பதவியை 10-12-2018 அன்று  திடீரென ராஜிநாமா செய்துள்ளார்.  கடந்த 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் 5-ஆம் தேதி நியமிக்கப்பட்டார். இவருடைய பதவிக்காலம் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் நிறைவடையவுள்ள நிலையில், 8 மாதங்களுக்கு முன்பாகவே தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
  • மத்திய மனிதவளத்துறை இணையமைச்சர் உபேந்திர குஷ்வாகா ( Upendra Kushwaha )  தனது பதவியை 10-12-2018 அன்று இராஜினாமா செய்துள்ளார்.

முக்கிய தினங்கள்

  • 34 வது சார்க் சாஷன தினம் ( SAARC Charter Day 2018 ) 8 டிசம்பர் 2018 அன்று அனுசரிக்கப்பட்டது.
  • சர்வதேச மனித உரிமைகள் தினம் (International Day of Human Rights) - டிசம்பர் 10  | மையக்கருத்து -  மனித உரிமைக்காக எழுந்து நில் (StandUp4HumanRights)

அறிவியல் & தொழில்நுட்பம்

  • 5,000 கி.மீ. பறந்து சென்று எதிரிகளின் இலக்கை தாக்கி அழிக்கும் அக்னி-5 ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக 10-12-2018 அன்று  மீண்டும் சோதனை நடத்தியுள்ளது. ஒடிஸா மாநிலம், அப்துல்கலாம் தீவில்  இந்த சோதனை நடத்தப்பட்டது.
    • அக்னி-5 ஏவுகணை, 17 மீட்டர் உயரம், 2 மீட்டர் அகலம் கொண்டது. அணுகுண்டுகள் உள்பட சுமார் 1.5 டன் எடை கொண்ட ஆயுதங்களை 5,000 கிலோ மீட்டர் தூரத்துக்கு சுமந்து சென்று, எதிரி நாட்டின் இலக்கை தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டது. இந்த ஏவுகணை கடந்த 2012ஆம் ஆண்டில் முதலில் சோதனை நடத்தப்பட்டது. இதையடுத்து 2013ஆம் ஆண்டில் 2ஆவது முறையாகவும், 2015, 2016ஆம் ஆண்டுகளில் 3 மற்றும் 4ஆவது முறையாகவும் சோதனை நடத்தப்பட்டது. 5ஆவது முறையாக நிகழாண்டில் கடந்த ஜனவரி மாதம் அக்னி-5 ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது. இதன்பின்னர் 6ஆவது முறையாக கடந்த ஜூன் மாதம் அந்த ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது. இதையடுத்து, 7ஆவது முறையாக அக்னி-5 ஏவுகணை தற்போது சோதனை நடத்தப்பட்டுள்ளது. அக்னி-1 ஏவுகணை 700 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கையும், அக்னி-2 ஏவுகணை 2,000 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கையும், அக்னி-3 மற்றும் அக்னி-4 ஏவுகணைகள் 2,500 கிலோ மீட்டர் முதல் 3,500 கிலோ மீட்டர் வரையில் உள்ள இலக்குகளை தாக்கி அழிக்கும் திறன் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!