நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

TNPSC Current Affairs 12th December 2018 | நடப்பு நிகழ்வுகள் 12 டிசம்பர் 2018

TNPSC Current Affairs 12th December 2018
☞   Previous Days' Current Affairs Notes
☞  Today / Previous Days' Current Affairs Quiz

தமிழ்நாடு

  • தமிழ்நாட்டில் சுற்றுலாவை மேம்படுத்தி வேலைவாய்ப்புக்களை அதிகரிப்பதற்கான 31 மில்லியன் டாலர் கடன் உதவிக்கான ஒப்பந்தத்தில் மத்திய அரசும் ஆசிய வளர்ச்சி வங்கியும் (Asian Development Bank (ADB)) 11.12.2018 அன்று கையெழுத்திட்டுள்ளன.
    • இந்த ஒப்பந்தம் தமிழ்நாட்டில் சுற்றுலாவுக்கான கட்டமைப்பை மேம்படுத்தவும், மாநிலத்தின் இயற்கை மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாக்க உதவும். மேலும், இத்திட்டத்தின் மூலம் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து, தமிழ்நாட்டில் புதிய வேலைவாய்ப்புகளை, குறிப்பாக, ஏழைகள் மற்றும் பெண்களிடம் திறன் பயிற்சி மற்றும் சமுதாயம் சார்ந்த வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.
  • தமிழ் இசைச் சங்கங்கத்தின் “இசைப் பேரறிஞர் விருது மிருதங்க வித்வான்  உமையாள்புரம் கா.சிவராமனுக்கும்,பண் இசைப் பேரறிஞர் விருது    திருமுறை இசைத் துறையில் புகழ்பெற்ற பழநி க.வெங்கடேனுக்கும் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • சர்வதேச திரைப்பட விழாவுக்காக தமிழக அரசு சார்பில் ரூ.75 லட்சம் நிதி வழங்கப்பட்டது. இந்தத் தொகையானது, முன்னதாக வழங்கப்பட்டு வந்த  ரூ.50 லட்சத்தில் இருந்து ரூ.75 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.  சர்வதேச திரைப்பட விழாவானது டிசம்பர் 13 முதல் 20-ஆம் தேதி வரை சென்னையில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
  • கழிப்பறை கட்டித்தர போராடிய 7 வயது சிறுமி ஹனீஃபா ஜாரா ஆம்பூர் நகராட்சியின்  தூய்மை இந்தியா திட்டத் தூதுவராக நியமனம்  :  வேலூர் மாவட்டம், ஆம்பூரரில், தனது வீட்டில் கழிப்பறை கட்டித் தர தந்தையிடம் முறையிட்டும் பலனிக்காமல் போனதால் காவல் நிலையம் வரை பிரச்னையை எடுத்துச் சென்று கழிப்பறை கட்டுவதற்கான முயற்சியை மேற்கொண்ட 7 வயது சிறுமி ஹனீஃபா ஜாராவை தூய்மை இந்தியா திட்டத் தூதுவராக ஆம்பூர் நகராட்சி நிர்வாகம் நியமித்துள்ளது.
  • மின்னஞ்சலில் பதிவுத் துறை ஆவணங்கள் அனுப்பும் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார் : சார் பதிவாளர் அலுவலகங்களில் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை ஆவணதாரர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி  அவர்கள் 10-12-2018 அன்று தொடங்கி வைத்தார். 

இந்தியா

  • ENSURE” online portal  :   தேசிய கால்நடைகள் திட்டத்தின் ( National Livestock Mission) கீழ்  கால்நடை வளர்ப்பு தொழில் முனைவு வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்குதல் ( Entrepreneurship Development and Employment Generation (EDEG) )  சார்ந்த  மத்திய அரசின் பல்வேறு கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு திட்டங்களுக்கான மாநியங்களை “நேரடியாக பயனர்கள் வங்கிக் கணக்கில் செலுத்துவதற்காக” (Direct Benefit Transfer) நபார்டு (NABARD) “ENSURE”   என்ற இணையதள சேவை உருவாக்கப்பட்டுள்ளது. இதனை மத்திய கால்நடைகள் மற்றும் மீன்வளத்துறை  இயக்கவுள்ளது.
  • முடிசூட்டப்படா பெருமை (Uncrowned Glory – An exhibition of Ethnic Ornaments of Himachal Pradesh) என்ற பெயரில் ஹிமாச்சல் பிரதேச மாநிலத்தின் பாரம்பரிய நகைக் கண்காட்சி புது தில்லியிலுள்ள தேசிய அருங்காட்சியகத்தில் 11-12-2018 அன்று நடைபெற்றது.
  • கலா உத்சவ் (கலைத் திருவிழா) என்ற பெயரில்  பள்ளிக் குழந்தைகளுக்கான தேசிய கலைப் போட்டிகள் 12 டிசம்பர் 2018 அன்று புது தில்லியில் துவங்குகின்றன.   வாய்ப்பாட்டு, இசைக்கருவிகள், நடனம் மற்றும் ஓவியம் ஆகிய பிரிவுகளில் போட்டிகளைக் கொண்டுள்ள இந்த நிகழ்வில்  கர்நாடகா தவிர இந்தியாவின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சார்ந்த குழந்தைகள் கலந்துகொள்கிறார்கள்.
கூ.தக. :
  • கல்வியில் கலை பற்றிய அறிவை வளர்ப்பதற்காகவும், பள்ளி மாணவர்களின் கலைசார்ந்த திறன்களை மேம்படுத்துவதற்காகவும், “கலா உத்சவ்” எனப்படும் நிகழ்வை, மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்ச்சகத்தின், பள்ளிக் கல்வித் துறை கடந்த 2015 ஆண்டு முதல் ஆண்டுதோறும் நடத்தி வருகிறது குறிப்பிடத்தக்கது.
  • குறைந்தபட்ச ஊதிய ஆபரேஷன் (‘Operation Minimum wage’) எனும் பெயரில் மாநிலம் முழுவதும் குறைந்தபட்ச ஊதிய சட்டம் 2017 -ன் அமலாக்கத்தை ஆராயும்  திட்டத்தை தில்லி அரசு அறிவித்துள்ளது.
  • அருணாச்சலப் பிரதேசத்தின் 24 வது மாவட்டமாக  “லேபா ராடா (Lepa Rada) உருவாகியுள்ளது. சமீபத்தில், 23 வது மாவட்டமாக “ஷி யோமி” (Shi Yomi ) மாவட்டம் உருவானது குறிப்பிடத்தக்கது.

உலகம்

  • நிதி நடவடிக்கைக்கான சர்வதேச அமைப்பில் (Financial Action Task Force (FATF)) 38 வது உறுப்பினராக இஸ்ரேல் நாடு 10-12-2018 அன்று இணைந்துள்ளது.  சர்வதேச அளவில்  பணமோசடி, பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்தல் மற்றும் பிற பொருளாதார அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கான இவ்வமைப்பின் தலைமையிடம் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் அமைந்துள்ளது.

வெளிநாட்டு உறவுகள்

  • ஹேண்ட்-இன் - ஹேண்ட் 2018 ” (Hand-in-Hand 2018) என்ற பெயரில், இந்தியா மற்றும் சீன இராணுவங்களின், ஏழாவது, கூட்டு இராணுவ ஒத்திகை  சீனாவின் செங்குடு (Chengdu)  நகரில்  10-23 டிசம்பர் 2018 தினங்களில் நடைபெறுகிறது.

மாநாடுகள் / கூடுகைகள் 


  • நான்காவது, பங்குதாரர்கள் விவாத அரங்கு 2018 ( Partners’ Forum 2018 ) - 12-13 டிசம்பர் 2018 தினங்களில் புது தில்லியில் நடைபெறுகிறது.
    • கருவில் இருக்கும் குழந்தைகள், புதிதாகப் பிறந்த பச்சிளம் குழந்தைகள் மற்றும் குழந்தைகள் ஆரோக்கியத்திற்கான பங்குதாரர் அமைப்புடன் (Partnership for Maternal, Newborn and Child Health (PMNCH),)  இணைந்து    இந்திய   அரசு இந்த இரண்டு நாள் சர்வதேச மாநாட்டிற்கு ஏற்பாடு செய்துள்ளது. 
    • இந்த மாநாட்டில், 85 நாடுகளில் இருந்து வரும் சுமார் 1,500 பிரதிநிதிகள் பங்கேற்று பெண்கள், குழந்தைகள் மற்றும் வளர் இளம்பருவத்தினரின் ஆரோக்கியம் மற்றும் நலத்தை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கவுள்ளனர்.
    • ”வாழ் – செழித்தோங்கு – மாற்றத்தை உருவாக்கு” என்ற சர்வதேச நிலைப்பாட்டின் குறிக்கோளையொட்டிய இந்தப் பங்குதாரர் விவாத அரங்கின் நிகழ்ச்சிகள் தயாரிக்கப்பட்டுள்ளது.
    • பெண்கள், குழந்தைகள் மற்றும் வளர் இளம் பருவத்தினர் தொடர்பான பிரச்சினைகளுக்கு சர்வதேச அளவில் நிலையான தீர்வு காணும் நோக்கில் இந்த மாநாட்டிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • இந்த பங்குதாரர் விவாத அரங்கில் ஆப்பிரிக்கா, கிழக்கு மத்திய தரைகடல் பகுதி, ஐரோப்பா, அமெரிக்கா, தென்கிழக்காசியா மற்றும் மேற்கு பசிபிக் ஆகிய ஆறு பிராந்தியங்களின் கீழ்க்கண்ட ஆறு சிறப்பு அம்சங்களின் அனுபவங்களை எடுத்துரைக்கும்:
      • முன்பருவ குழந்தைப்பருவம் வளர்ச்சி (ஜெர்மனி & சிலி);
      • வளர் இளம் பருவ சுகாதாரம் மற்றும் நலவாழ்வு (அமெரிக்கா & இந்தோனேஷியா);
      • சேவையில் தரம் சமத்துவம் மற்றும் கண்ணியம் (இந்தியா & கம்போடியா);
      • இந்தியாவிலிருந்து, விரைவுபடுத்தப்பட்ட இந்திரதனுஷ் இயக்கம் இந்தப் பிரிவின் கீழ், ஆய்வுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.
      • பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதாரம் (மலாவி & மலேசியா) மற்றும்;
      • பெண்கள், சிறுமிகள் மற்றும் சமுதாயத்திற்கு அதிகாரம் அளித்தல் (தென்னாப்பிரிக்கா & கவுதமாலா); மற்றும்
      • மனிதாபிமானமற்ற மற்றும் எளிதில் உடையக்கூடிய (சியரா லியோன் & ஆப்கானிஸ்தான்)
கூ.தக. :
  • குழந்தைகள் மற்றும் பேறுகால உயிரிழப்புகளை குறைக்கவும், வளர் இளம் பருவத்தினர், குழந்தைகள், பச்சிளம் குழந்தைகள் மற்றும் கருவில் இருக்கும் குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதை விரைவுப்படுத்தும் நோக்கில், “பங்குதாரர்கள் விவாத அரங்கு” எனப்படும் சர்வதேச சுகாதார ஒத்துழைப்பு அமைப்பு செப்டம்பர் 2015-ல் தொடங்கப்பட்டது.
  • இதற்கு முந்தைய விவாத அரங்குகள் தென்னாப்பிரிக்காவின் ஜோஹன்னஸ்பர்க் (2014), இந்தியாவின் புதுதில்லி (2010) மற்றும் தான்ஸானியாவின் தர் ஏஸ் சலாம் (2007) ஆகிய இடங்களில் நடைபெற்றுள்ளது. தற்போது இந்தியா இரண்டாவது முறையாக இந்த பங்குதாரர்கள் விவாத அரங்கை நடதுகிறது.
  • நீடித்த வளர்ச்சிக்கான இலக்கு, குறிப்பாக, ‘ஒவ்வொரு பெண், ஒவ்வொரு குழந்தை’ இயக்கத்தின் ஆதரவுடன் பெண்கள், குழந்தைகள் மற்றும் வளர் இளம் பருவத்தினரின் சுகாதாரம் சார்ந்த நிலைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ள சுகாதாரம் சார்ந்த நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகளை அடைவதே, கருவில் இருக்கும் குழந்தைகள், புதிதாகப் பிறந்த பச்சிளம் குழந்தைகள் மற்றும் குழந்தைகள் ஆரோக்கியத்திற்கான பங்குதாரர் அமைப்பின் நோக்கம் ஆகும்.
செய்தி ஆதாரம் : http://pib.nic.in/PressReleseDetail.aspx?PRID=1555497

நியமனங்கள்

  • ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியான சக்திகாந்த தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
    • மத்திய அரசுடன் பல்வேறு விஷயங்களில் எழுந்த மோதல் போக்கின் காரணமாக ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்த உர்ஜித் படேல் தனது பதவியை ராஜிநாமா செய்ததைத் தொடர்ந்து  சக்திகாந்த் தாஸ் நியமிக்கப்பட்டுல்லார்.  1980-ஆம் ஆண்டு கேடர் ஐ.ஏ.எஸ் அதிகாரியான சக்திகாந்த தாஸ் (63) தமிழக அரசில் தொழில் துறையின் முதன்மைச் செயலாளர் மற்றும் பொருளாதார விவகாரத் துறை செயலாளர் உள்ளிட்ட பதவிகளை வகித்து ஓய்வு பெற்றுள்து குறிப்பிடத்தக்கது.  தற்போது ரிசர்வ் வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள அவர் இந்த பதவியில் மூன்று ஆண்டுகள் நீடிப்பார்.
  • பிரதமரின் பொருளாதார ஆலோசனைக்குழு உறுப்பினர் பதவியை பொருளாதார நிபுணர் சுர்ஜித் பல்லா ராஜிநாமா செய்துள்ளார்.  பிரதமரின் பொருளாதார ஆலோசனைக்குழுவில் அவர் பகுதி நேர உறுப்பினராக இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

முக்கிய தினங்கள்

  • மகாகவி பாரதியாரின் 137-ஆவது பிறந்தநாள் 11-12-2018 அன்று அனுசரிக்கப்பட்டது.
  • ஐக்கிய நாடுகள் சர்வதேச குழந்தைகள் அவசரகால நிதிய (யுனிசெஃப்) தினம் (UNICEF - United Nations International Children Emergency Fund)  Day  - டிசம்பர் 11
    • கூ.தக. 11 டிசம்பர் 1946 அன்று உருவாக்கப்பட்ட யுனிசெஃப் அமைப்பின் தலைமையிடம் நியூயார்க் நகரில் அமைந்துள்ளது.
  • சர்வதேச மலைகள் தினம் (International Mountain Day) - டிசம்பர் 11  | மையக்கருத்து (2018) - MountainsMatter

புத்தகங்கள் / ஆசிரியர்கள்

  • Of Counsel:The Challenges of the Modi Jaitley Economy” என்ற பெயரில் முன்னாள் முதன்மை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் எழுதிய புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.

Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!