TNPSC Current Affairs 13 December 2018
☞ Previous Days' Current Affairs Notes |
☞ Today / Previous Days' Current Affairs Quiz |
தமிழ்நாடு
- நாட்டிலேயே முதல் முறையாக, தமிழகத்தில், முதியோர் இல்லத்தில் வசிக்கும் முதியவர்களுக்கு, இலவசமாக நிமோனியா தடுப்பூசி போடும் திட்டம் 12-12-2018 அன்று சென்னை, வியாசர்பாடியில் உள்ள, செயின்ட் தாமஸ் முதியோர் இல்லத்தில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
- 'தமிழ்நாடு உணவு பதப்படுத்தும் கொள்கை - 2018' யை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் 12-12-2018 அன்று வெளியிட்டுள்ளார்கள். விவசாயிகளின் வருமானத்தை அதிகரித்தல், உணவுப் பொருட்கள் வீணாவதை குறைத்தல், பண்ணைப் பொருட்களின் மதிப்புக் கூட்டுதல் போன்றவை, உணவு பதப்படுத்தும் கொள்கையின் குறிக்கோள்கள்.இதன்படி, தமிழக அரசு, உணவு பூங்காக்கள் அமைத்து, தொழில் முனைவோர்கள், மத்திய அரசிடமிருந்து, நிதியுதவி பெற வழிவகை செய்யும்.வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை, உணவு பதப்படுத்தும் கொள்கையை செயல்படுத்தும் முகமையாக திகழும்.இக்கொள்கை, உணவு பதப்படுத்தும் பிரிவில், தனியார் நிறுவனங்கள் முதலீடு செய்வதற்கான வாய்ப்பை, அதிக அளவில் ஏற்படுத்தி தரும். உணவு பதப்படுத்தும் பிரிவில், அதிக வேலைவாய்ப்பையும் ஏற்படுத்தி தரும்.
- கஜா புயல் பாதித்ததாக 4 மாவட்டங்கள் அறிவிப்பு : நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய நான்கு மாவட்டங்களும் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக தமிழக அரசினால் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானல் கோட்டமும் புயலினால் பாதிக்கப்பட்ட பகுதியாக அறிவிப்புச் செய்யப்பட்டுள்ளது.
- ”முதுகலைத் தமிழ் பயிலும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.2000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தை” முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் 11-12-2018 அன்று வெளியிட்டுள்ளார். தமிழ் வளர்ச்சித் துறை வாயிலாக அமல்படுத்தப்படும் இத்திட்டத்தின் மூலம் சென்னையிலுள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் முதுகலைத் தமிழ் பயிலும் மாணவர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.
- இந்தியாவிலுள்ள அரசியல் கட்சி அலுவலங்களில் மிக உயரமான கட்சி கொடி 114 அடி உயரத்தில் சென்னையிலுள்ள தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் ஏற்றப்பட்டுள்ளது.
இந்தியா
- ”எம்.எஸ்.சுவாமிநாதன் குழு” அறிக்கை அமலாக்கம் : தேசிய விவசாயிகளுக்கான குழு (National Commission on Farmers) எம்.எஸ்.சுவாமிநாதன் தலைமையில் 2006 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. இந்த குழு தனது அறிக்கையில், விவசாயிகளுக்கான குறைந்த பட்ச ஆதரவு விலையானது (Minimum Support Prices (MSPs)) அவர்கள் தயாரிப்பிற்கு செலவிட்ட மொத்த தொகையில் , குறைந்தபட்சம் 50% இருக்க வேண்டும் என பரிந்துரை செய்திருந்தது. இந்த பரிந்துரை, “தேசிய விவசாயிகள் கொள்கை 2007” (National policy for Farmers 2007) யில் ஏற்றுக்கொள்ளப்படாத நிலையில் தற்போது, மத்திய அரசு, 2018-2019 ஆம் ஆண்டிற்கான காரிஃப் , ராஃபி மற்றும் பிற வணிகப் பயிர்களுக்கான குறந்த பட்ச ஆதாரத் தொகையை , அவற்றின் தயாரிப்பு செலவில் 50% ஆக உயர்த்தி அறிவித்துள்ளது.
- அருணிமா சின்கா (Arunima Sinha) : அண்டார்டிகாவின் “மவுண்ட் வின்சன்” ( Mount Vinson) மலையை ஏறவிருக்கும் உலகின் முதல் மாற்றுத்திறனாளி பெண் எனும் பெருமையை பெறவுள்ளவர். ஏற்கனவே ஐந்து கண்டங்களிலுள்ள மிக உயர்ந்த சிகரங்களை அடைந்து சாதனைப் படைத்துள்ள இவர், சமீபத்தில், பிரதமர் மோடி அவர்களிடம் வாழ்த்துப்பெற்றுள்ளார்.
- ஒரு லட்சத்து 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகளில் தீர்ப்பு அளித்து, அலகாபாத் ஐகோர்ட்டு மூத்த நீதிபதி சுதிர் அகர்வால் இந்திய நீதித்துறை வரலாற்றில் சாதனை படைத்துள்ளார்.
- மிஸோரம் முதல்வராக பதவியேற்கும் ஸோரம்தங்கா : மிஸோரம் சட்டப் பேரவைத் தேர்தலில் மிஸோ தேசிய முன்னணி கட்சி அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அக்கட்சியின் தலைவர் ஸோரம்தங்கா, மாநில முதல்வராக வரும் டிசம்பர் 15-ஆம் தேதி பதவியேற்கவுள்ளார்.
- தெலங்கானா முதல்வராக இரண்டாவது முறையாக கே. சந்திரசேகர் ராவ் பதவியேற்கவுள்ளார் : தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் வெற்றிபெற்ற ராஷ்டிர சமிதி (டி.ஆர்.எஸ்.) கட்சித் தலைவர் கே. சந்திரசேகர் ராவ் , தொடர்ந்து 2ஆவது முறையாக தெலங்கானா முதல்வராக 13-12-2018 அன்று பதவியேற்கவுள்ளார்.
- 2018-ல், இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட விவரங்களின் பட்டியலை கூகுள் வெளியிட்டுள்ளது. அதிகம் தேடப்பட்ட நட்சத்திர நபராக மலையாள நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் இடம்படித்துள்ளார். இதற்கு அடுத்தடுத்த இடங்களில் பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா கணவர் நிக் ஜோனஸ், நடனக் கலைஞர் சப்னா சௌத்ரி, பாலிவுட் மற்றும் ஹாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா, பாலிவுட் நடிகை சோனம் கபூர் கணவர் ஆனந்த அஹுஜா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மேலும் நட்சத்திர திருமணங்களின் எதிரொலியாக பிரபல அமெரிக்க நடிகையும், டட்சஸ் ஆஃப் சசக்ஸ் இளவரசியுமான மேகன் மார்கிள் இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட வெளிநாட்டு பிரபலமாக உள்ளார்.
திட்டங்கள்
- ”ஃபேம்-இந்தியா திட்டம்” (FAME-India Scheme) : FAME- Faster Adoption and Manufacturing of (Hybrid &) Electric Vehicles in India எனும் விரிவாக்கம் கொண்டுள்ள இத்திட்டத்தை மத்திய கனரக தொழில்துறை 1 ஏப்ரல் 2015 முதல் அமல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் இந்தியாவில், மின் வாகனங்களின் உற்பத்தியை வேகமாக அமலாக்கம் செய்வதாகும். இத்திட்டத்தின் முதல் கட்டத்தை முடிப்பதற்கு 31 ஏப்ரல் 2017 அன்றை மத்திய அரசு இலக்காக நிர்ணயித்த நிலையில் தற்போது, இலக்கு காலக்கட்டம் 31 மார்ச் 2019 வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.
புத்தகங்கள் / ஆசிரியர்கள்
- ”திருவள்ளுவர் கால எழுத்தில் திருக்குறள்” என்ற பெயரில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் மூலம், திருவள்ளுவர் வாழ்ந்த காலத்தில் தமிழ்நாட்டில் வழக்கத்திலிருந்ததாகக் கருதப்படும் தமிழ் பிராமி எழுத்து முறையில் அணியமாக்கப்பட்டுள்ள நூலை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் 11-12-2018 அன்று வெளியிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.