நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

TNPSC Current Affairs 14 December 2018 | நடப்பு நிகழ்வுகள் 14 டிசம்பர் 2018

TNPSC Current Affairs 14 December 2018
☞   Previous Days' Current Affairs Notes
☞  Today / Previous Days' Current Affairs Quiz

தமிழ்நாடு

  • தமிழகத்தில் புதிய வருவாய் வட்டங்கள் தொடக்கம்: தமிழகத்தில் புதிதாக ஏற்படுத்தப்பட்ட வருவாய் வட்டங்களை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் 13-12-2018 அன்று துவங்கி வைத்தார்கள். இவற்றின் விவரம் வருமாறு,
    • கோவை மாவட்டம், பொள்ளாச்சி வட்டத்தை சீரமைத்து ஆனைமலையை தலைமையிடமாகக் கொண்டு மார்ச்ச நாயக்கன்பாளையம், கோட்டூர் ஆகிய மூன்று வட்டங்கள் மற்றும் 31 வருவாய் கிராமங்களை உள்ளடக்கி புதிதாக ஆனைமலை வருவாய் வட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
    • கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வருவாய் வட்டத்தைச் சீரமைத்து அஞ்செட்டியை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் வட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
  • 16-வது சென்னை  சர்வதேச திரைப்பட விழா  13-20 டிசம்பர் 2018 தினங்களில்  சென்னையில் நடைபெறுகிறது. தமிழக அரசு ஆதரவுடன் இண்டோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேசன்  நடத்தும் இதில்  59 நாடுகளில் இருந்து சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்று விருது பெற்ற படங்கள் உள்பட 150 படங்கள் திரையிடப்படுகின்றன.
  • பெய்ட்டி புயல் : வங்க கடலில் தீவிரமாக உருவெடுக்கும், 'பெய்ட்டி' புயல், 16-12-2018 அன்று  சென்னை - விசாகப்பட்டினம் இடையே கரையை கடக்க இருக்கிறது.

இந்தியா

  • மத்தியப் பிரதேச முதல்வராக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கமல்நாத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  • பகவத் கீதை விழா 7-23 டிசம்பர் 2018 வரை ஹரியாணா மாநிலம், குருக்ஷேத்திரத்தில் நடைபெறுகிறது. 
    • மோரீஷஸ் நாட்டிலும் இம்மாதிரியான பகவத் கீதை விழா பிப்ரவரி 2018 நடைபெறவிருப்பதாக அநாட்டின் தற்காலிக அதிபர் பரமசிவம் பிள்ளை வையாபுரி அறிவித்துள்ளார்.
  • ஆசியாவின் வயதான "சிம்பன்சி' - ” ரீட்டா    தில்லி தேசிய உயிரியல் பூங்காவில் உள்ளது. இதனுடைய   59-ஆவது பிறந்த நாள் விழா 13-12-2018 அன்று கொண்டாடப்பட்டது.
  • மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உருவம் பதித்த 100 ரூபாய் நாணயம்  வெளியிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.35 கிராம் எடை கொண்டதாக இருக்கும் இந்த நாணயத்தின் ஒரு பக்கத்தில் வாஜ்பாயின் படத்துடன் அவரது பெயர் தேவனாகிரி மற்றும் ஆங்கிலத்தில் பொறிக்கப்பட உள்ளது. அதற்கு கீழ் வாஜ்பாய் வாழ்ந்த காலத்தை குறிக்கும் வகையில் 1924 - 2018 என பொறிக்கப்பட உள்ளது.
  • 'கோச் மித்ரா' திட்டம் : பயணத்தின் போது, ரயில் பெட்டிகளை சுத்தம் செய்வதற்கான, 'கோச் மித்ரா' திட்டம், 102 ரயில்களில் அறிமுகமாகி உள்ளது.இந்த ரயில்களில் பயணிப்போர், ரயில் பெட்டியின் சுகாதாரம், பயணியருக்கு வழங்கப்படும் போர்வைகள், குடிநீர் வசதி, மின் வசதிகள் மற்றும் கழிப்பறை குறைபாடுகள் குறித்து, 98217 36069 என்ற, மொபைல் போன் எண்ணிற்கு, குறுஞ்செய்தியாக அனுப்பினால், உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்திய தேசிய இராணுவப் பல்கலைக்கழகம் (Indian National Defence University) அமைந்துள்ள இடம் - குருகிராமம், ஹரியானா (Gurugram, Haryana) | 2010 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது.

வெளிநாட்டு உறவுகள்

  • கர்தார்பூர் வழித்தடத்தில் இந்தியாவின் சார்பாக 4 கி.மீ. தூரத்துக்குச் சாலை அமைக்கப்படவிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
    • இந்த சாலை பஞ்சாபின் குருதாஸ்பூர் மாவட்டத்திலுள்ள தேரா பாபா நானக் பகுதியிலிருந்து சர்வதேச எல்லைப் பகுதி வரையிலான சுமார் 4 கி.மீ. தூரத்துக்கு இந்தியா சார்பில் அமைக்கப்படவுள்ளது. 
கூ.தக. :
  • சீக்கிய மதத்தைத் தோற்றுவித்த குரு நானக் தேவ், தனது வாழ்நாளில் ஏறத்தாழ 18 ஆண்டுகளைத் தற்போதைய பாகிஸ்தானில் உள்ள கர்தார்பூரில் கழித்தார். அவரது நினைவாக எழுப்பப்பட்ட தர்பார் சாஹிப் குருத்வாரா, சர்வதேச எல்லைப் பகுதியிலிருந்து ஏறத்தாழ 3 கி.மீ. தொலைவில் ராவி நதிக்கரையில் அமைந்துள்ளது.
  • அந்த குருத்வாராவுக்கு இந்தியாவில் உள்ள சீக்கியர்கள் நுழைவுஇசைவு (விசா) இன்றி புனிதப்பயணம் மேற்கொள்ள வசதியாக இந்தியாவின் குருதாஸ்பூரையும், கர்தார்பூரையும் இணைக்கும் வகையிலான வழித்தடத்துக்கு நவம்பர் 26-ஆம் தேதி இந்தியப் பகுதியில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவும், 28-ஆம் தேதி பாகிஸ்தான் பகுதியில் அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கானும் அடிக்கல் நாட்டினது குறிப்பிடத்தக்கது.

பொருளாதாரம்

  • அஸ்ஸாம் மாநிலத்தில் ஆற்றோர மண்ணரிப்பைத் தடுப்பதற்காகவும் வெள்ள அபாயத்தை குறைப்பதற்காகவுமான திட்டங்களுக்கு 60 மில்லியன் அமெரிக்க டாலர் கடனுதவி ஒப்பந்தம் இந்தியா மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கியிடையே (Asian Development Bank (ADB)) 13-12-2018 அன்று செய்துகொள்ளப்பட்டது.

திட்டங்கள்

  • ஷியாம பிரசாத் முகர்ஜி ரூரர்பன் திட்டம் (Shyama Prasad Mukherji Rurban Mission) (National Rurban Mission (NRuM)) : கிராமப்புற மக்களுக்கும் நகர்புறங்களைப்போன்ற அனைத்துவிதமான அடிப்படை வசதிகளையும்  ஏற்படுத்தி அவர்களின் பொருளாதாரத்தை அதிகரிக்கச் செய்யும்  நோக்கிலான இந்த திட்டத்தை   21 பிப்ரவரி 2016 அன்று பிரதமர் மோடி அவர்கள் துவக்கி வைத்தார்.  இத்திட்டத்திற்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் 60 : 40  என்ற விகிதத்தில் நிதியுதவி வழங்கும்.  ஹிமாலய மற்றும் வட கிழக்கு மாநிலங்களில் மற்றும் இந்த விகிதம் 90:10 என்பதாக இருக்கும்.
கூ.தக. : 2011 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இந்தியாவில் 68% (833 மில்லியன்) மக்கள் கிராமப்புறங்களில் வசிக்கின்றனர்.  இது 2001 ஆம் ஆண்டை விட 12% அதிகமாகும்.

மாநாடுகள் / கூடுகைகள்

  • ஐந்தாவது, “இந்திய தொழில் கண்காட்சி (Enterprise India Exhibition) 13 டிசம்பர் 2018 அன்று மியான்மர் நாட்டின் யங்கூன் நகரில்  இந்திய குடியரசுத்தலைவர் ராம் நாத் கோவிந்த் அவர்களால் தொடங்கிவைக்கப்பட்டது.

நியமனங்கள்

  • பத்திரங்கள் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் (Securities Appellate Tribunal) தலைமை அதிகாரியாக ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வாலா  நியமிக்கப்பட்டுள்ளார். ”பத்திரங்கள் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின்” தலைமையிடம் மும்பையில் உள்ள்து.

விருதுகள்

  • சர்வதேச் டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பின் (International Table Tennis Federation) நட்சத்திர விருதுகள் 2018 -ல் , இந்தியாவின் மாணிகா பத்ரா (Manika Batra) விற்கு ‘பிரேக்கிங் த்ரோவ் நட்சத்திரம்’ (Breakthrough Star) என்ற விருது வழங்கப்பட்டுள்ளது.
  • லோக்மாத் பாராளுமன்றவாதிகளுக்கான விருதுகள் 2018 (Lokmat Parliamentary Award ) ல்,
    • சிறந்த பாராளுமன்றவாதி விருது - மாநிலங்களவையின் எதிர்க்கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத்திற்கும்
    • சிறந்த பெண் பாராளுமன்றவாதி விருது (மக்களவை) - ரமா தேவி -க்கும்
    • சிறந்த பெண் பாராளுமன்றவாதி விருது (மாநிலங்களவை) - கனிமொழி -க்கும் வழங்கப்பட்டுள்ளது.

அறிவியல் & தொழில்நுட்பம்

  • இந்தியாவின் 35-ஆவது தகவல்தொடர்பு செயற்கைக்கோளான ஜிசாட்-7ஏ டிசம்பர் 19-ஆம் தேதி  விண்ணில் செலுத்தப்பட உள்ளது. 2250 கிலோ எடைகொண்ட இந்த செயற்கைக்கோள் முழுவதும் உள்நாட்டில் இஸ்ரோவால் உருவாக்கப்பட்டதாகும். இது விண்ணில் குறைந்தபட்சம் 8 ஆண்டுகள் செயல்பாட்டில் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்தின் இரண்டாவது ஏவுதளத்திலிருந்து ஜி.எஸ்.எல்.வி.-எப்11 ராக்கெட் மூலம் ஜிசாட்-7ஏ செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட உள்ளது. இது இஸ்ரோ சார்பில் விண்ணில் ஏவப்படும் 13-ஆவது ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் ஆகும். அதோடு, முழுவதும் உள்ளநாட்டில் உருவாக்கப்பட்ட கிரையோஜெனிக் என்ஜின் பொருத்தப்பட்ட 7-ஆவது ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் இது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த செயற்கைக்கோள்  விமானப்படை தகவல் தொடர்புக்காக  தயாரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
    • ஜிசாட்-7ஏ செயற்கைகோள் விமானப்படையின் போர்த்திறன்களை அதிகரிப்பதுடன், உலகளாவிய நடவடிக்கைகளையும் அதிகளவில் தெரிந்துகொள்ள உதவிகரமாக இருக்கும். 2013-ம் ஆண்டு ‘ஜிசாட்-7’ என்ற செயற்கைகோள் கடற்படைக்காக தயாரித்து விண்ணில் செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது 2-வது முறையாக ‘ஜிசாட்-7ஏ’ செயற்கைகோளை தயாரித்து விமானப்படைக்காக அர்ப்பணிக்க இருக்கிறது.
கூ.தக. : 
  • கடந்த நவம்பர் 14-ஆம் தேதி ஜி.எஸ்.எல்.வி. மார்க்3-டி2 ராக்கெட் மூலம் ஜிசாட்-29 தகவல்தொடர்பு செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது. நவம்பர் 29-இல் பி.எஸ்.எஎல்.வி. சி-43 ராக்கெட் மூலம் இந்தியாவின் ஹைசிஸ் செயற்கைக்கோள் உள்பட 9 நாடுகளைச் சேர்ந்த 31 செயற்கைக்கோள்கள் விண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டன. தொடர்ந்து பிரெஞ்ச் கயானா விண்வெளி மையத்திலிருந்து இந்தியாவின் ஜிசாட்-11 தகவல்தொடர்பு செயற்கைக்கோள் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது.
  • "அகாடெமிக் லோமொனொசோவ் (Akademik Lomonosov) என்ற பெயரில் உலகின் முதல் மிதக்கும் அணு உலை ரஷியாவில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு நிறுவப்பட்டுள்ள 35 வாட் திறனுடைய இரண்டு அணு உலைகளின் மூலம் 70 மெகா வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும்.
Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!