Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

TNPSC Current Affairs

Posts in CT

Loading posts...

TNPSC Current Affairs 15 December 2018 | நடப்பு நிகழ்வுகள் 15 டிசம்பர் 2018

TNPSC Current Affairs 15 December 2018

இந்தியா

  • "ஆபரேஷன் ஆலிவா” (Operation Oliva) என்பது, ’ஆலிவ் ரிட்லே கடல் ஆமைகளை’ (Olive Ridley sea turtles) பாதுகாப்பதற்கான கடலோரக் காவல்படையின் திட்டமாகும்.
  • இந்தியாவின் முதல் தனியார் ஆளில்லாத விமானங்கள் (unmanned aerial vehicles (UAVs))  தயாரிக்கும்  ஆலை  ஹைதராபாத் நகரிலுள்ள அதானி ஏரோஸ்பேஸ் பார்க் - ல் அமைக்கப்பட்டுள்ளது.
  • குஜராத் மாநிலத்தின், வதோதரா மாவட்டத்தில், நாட்டின் முதல், தேசிய ரயில்வே மற்றும் போக்குவரத்து பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டுள்ளது.
  • ஈகோ நிவாஷ் சம்ஹிதா 2018” (ECO Niwas Samhita 2018) எனும் பெயரில் வசிப்பிட கட்டிடங்களுக்கான ஆற்றல் பாதுகாப்பு  விதிகளை  மத்திய அரசு அறிவித்துள்ளது.  இத்திட்டத்தை அமல்படுத்துவதன் மூலம் 2030 ஆம் ஆண்டிற்குள் ஆண்டுதோறும் 125 பில்லியன் யுனிட் மின்சாரத்தை சேமிக்க முடியும் என கணிக்கப்பட்டுள்ளது. 
  • தேசிய மருத்துவ உபகரணங்கள் மேம்பாட்டு குழு (National Medical Devices Promotion Council) மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகத்தின் கீழுழ்ழ தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறையின் மூலம் அமைக்கப்படவுள்ளது.

உலகம்

  • மேற்கு ஜெருசலேமை இஸ்ரேல் தலைநகராக அங்கீகரிப்பதாக ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.
  • ஆப்பிரிக்க நாடான கானாவின் தலைநகர் அக்ராவில் உள்ள கானா பல்கலைக்கழக வளாகத்தில் வைக்கப்பட்டு இருந்த காந்தி சிலை அகற்றப்பட்டது. இந்த சிலையானது, 2016-ல் அப்போதைய இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்களினால்   திறந்து வைக்கப்பட்டது. 

வெளிநாட்டு உறவுகள்

  • இந்திய ரூபாய் நோட்டுகளில் நூறு ரூபாயைத் தவிர பிற நோட்டுகளைப் பயன்படுத்த நேபாள அரசு தடை விதித்துள்ளது.

நியமனங்கள்

  • இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் (Film and Television Institute of India (FTII) Society) புதிய தலைவராக  பிரிஜேந்திர பால் சிங் (Brijendra Pal Singh) 13-12-2018 அன்று நியமிக்கப்பட்டுள்ளார்.
  • ”கினியா குடியரசு” ( Republic of Guinea ) நாட்டிற்கான இந்திய தூதுவராக C. பருபால் (T.C. Barupal ) நியமிக்கப்பட்டுள்ளார்.
  • ராஜஸ்தான் முதல்வராக காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  • நுண்ணறிவு பிரிவு, "ரா' அமைப்புகளின் தலைவர்களின் பதவிக் காலம் 6 மாதங்கள் நீட்டிப்பு : நுண்ணறிவுப் பிரிவின் இயக்குநர் ராஜீவ் ஜெயின் மற்றும் "ரா' அமைப்பின் செயலர் அனில் கே. தஷ்மானா ஆகியோரின் பதவிக்காலம் டிசம்பர் 2018 இறுதியில் முடிவுற இருந்த நிலையில், அவர்களின் பதவிக்காலத்தை 6 மாதங்கள் நீட்டித்து மத்திய அர்சு உத்தரவிட்டுள்ளது.

முக்கிய தினங்கள்

  • தேசிய ஆற்றல் பாதுகாப்பு தினம் (National Energy Conservation Day) - டிசம்பர் 14

விருதுகள்

  • இந்திய மருத்துவர் சங்கம் சார்பில், 'சேவையில் இருக்கும் மூத்த மருத்துவர்' என்ற, 'டாக்டர் விஸ்வநாதன் விருது' நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த நோயாளிகளிடம், 10 ரூபாய் மட்டுமே கட்டணம் பெற்று, சிகிச்சை அளித்து வரும்,  டாக்டர் ஜனார்த்தனன் (80) அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • ஞான பீட விருது 2018 க்கு ஆங்கில நாவல் ஆசிரியர் அமிதவ் கோஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமிதவ் கோசுக்கு வயது 1956-ம் ஆண்டு கொல்கத்தாவில் ஒரு வங்காள இந்து குடும்பத்தில் பிறந்தார்.  தற்போது நியூயார்க்கில் வசித்து வருகிறார்.
    • சீ ஆஃப் பாப்பிஸ் (Sea of Poppies) நாவல், பாபர் மசூதி இடிக்கப்பட்டதன் காரணம் என்ன, பாபர் உண்மையிலே அந்த இடத்தில் இருந்த கோவிலை இடித்துவிட்டு மசூதி கட்டினரா என்ற கேள்விகளுக்கெல்லாம் விடையளிக்கும் வகையில் இவர் எழுதிய கட்டுரைத் தொகுப்பு, தி மேன் பிஹைண்ட் தி மாஸ்க் (The Man behind the Mosque) ஆகியவை இவரது குறிப்பிடத்தக்க படைப்புகளாகும்.
    • இந்தியாவின் அதிகாரப்பூர்வ மொழிகளில் எழுதும் எந்த ஓர் எழுத்தாளரும் இந்த விருதுக்கு தகுதியானவர் ஆவார். தமிழில் பிரபல எழுத்தாளர்கள் அமரர் அகிலன், ஜெயகாந்தன் ஆகியோர் கடந்த 1975 மற்றும் 2002-ம் ஆண்டுகளில் ஞானபீடம் விருதினை பெற்றனர்.

அறிவியல் & தொழில்நுட்பம்

  • பென்னு குறுங்கோளில்” (asteroid Bennu) தண்ணீர் இருப்பதற்கான அறிகுறிகளை நாசாவின் (NASA) , “OSIRIS-REx spacecraft” விண்கலம் கண்டுபிடித்துள்ளது. இங்கு ஆக்சிஜன் மற்றும் ஹைட்ரஜன் அணுக்கள் இணைந்து “ஹைட்ரோக்சில்” (hydroxyls) வடிவில் தண்ணீர் காணப்படுவதாக கண்டறியப்படுகிறது.

விளையாட்டு

  • 21 தேசிய கண் பார்வையற்றோருக்கான தடகள விளையாட்டு சாம்பியன்ஷிப் (21st Usha National Athletics Sports Championship) போட்டிகள் 13-12-2018 அன்று புது தில்லியில் தொடங்கின.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot