நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

TNPSC Current Affairs 16 December 2018 | நடப்பு நிகழ்வுகள் 16 டிசம்பர் 2018

TNPSC Current Affairs  16 December 2018
☞   Previous Days' Current Affairs Notes
☞  Today / Previous Days' Current Affairs Quiz

தமிழ்நாடு

  • புயல் சீரமைப்பு பணிகளுக்காக, மத்திய அரசின், 'பவர் பைனான்ஸ்' நிறுவனத்திடம் இருந்து, தமிழக அரசின் மின் வாரியம், 1,000 கோடி ரூபாய் கடன் வாங்க முடிவு செய்துள்ளது.

இந்தியா

  • நிலத்தடி நீர்ப் பயன்படுத்துதல் மீதான புதிய ஒழுங்குமுறைகளை மத்திய அரசு 13 டிசம்பர் 2018 அன்று அறிவித்துள்ளது. இதன்படி,
    • நிலத்தடி நீர் மீது “நீர் பாதுகாப்பு கட்டணம்” (Water Conservation Fee) விதிக்கப்படவுள்ளது.  இந்த ஒழுங்குமுறைகள்  ஜீன் 2019 முதல் அமலுக்கு வரவிருக்கின்றன. இதன்படி,
    • வீடுகளில் குடிநீர் உள்ளிட்ட பல்வேறுத் தேவைகளுக்காக ஓர் அங்குலத்துக்கும் குறையாத விட்டம் கொண்ட குழாயில் தினமும் 20 கன மீட்டர் வரை நிலத்தடி நீரை எடுப்பவர்கள், ஒரு கன மீட்டருக்கு ரூ.2 வரை கட்டணம் செலுத்த வேண்டும்; வீடுகளும் மத்திய அரசிடம் மறுப்பின்மை சான்றிதழ் பெறுவது கட்டாயமாகிறது.
    • தொழிற்சாலைகளில் கழிவுநீர் சுத்திகரிப்பு, டிஜிட்டல் மீட்டர் பொருத்துதல், தண்ணீர் ஆடிட் நடத்துதல் ஆகியவையும் இதர அம்சங்களாகும். 
கூ.தக : மத்திய நிலத்தடி நீர் ஆணையத்தின் ( Central Ground Water Authority) தலைமையிடம் ஃபரிதாபாத்தில் உள்ளது. இதன் தற்போதைய தலைவராக கே.சி.நாயக் (K. C. Naik.) உள்ளார்.
  • வங்கக்கடலில் உருவான "பெய்ட்டி' புயல் மசூலிப்பட்டினம் -காக்கி நாடா இடையே 17-12-2018 அன்று பிற்பகல் கரையைக் கடக்கும் என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு "பெய்ட்டி' என்று பெயர் சூட்டிய நாடு தாய்லாந்து.

உலகம்

  • இலங்கை பிரதமராக ரணில் விக்ரமசிங்கே மீண்டும் 16-12-2018 அன்று பதவியேற்றுள்ளார்.
  • நைஜீரியாவில் யுனிசெஃப் மீதான தடை நீக்கம் : நைஜீரியாவின் பதற்றம் நிறைந்த வடகிழக்குப் பகுதியில், சிறுவர்கள் நலனுக்கான ஐ.நா.வின் யுனிசெஃப் பிரிவுக்கு விதித்திருந்த தடையை அந்த நாட்டு ராணுவம் விலக்கிக் கொண்டது.

விருதுகள்

  • அசோக் அமிர்தராஜுக்கு 'செவாலியே' விருது : சென்னையைச் சேர்ந்த டென்னிஸ் விளையாட்டு வீரர், அசோக் அமிர்தராஜுக்கு, பிரஞ்சு அரசின் 'செவாலியே' விருது வழங்கப்பட்டுள்ளது.இவர், தமிழிலும், ஹாலிவுட்டிலும், பல படங்களை தயாரித்துள்ளார். தமிழில், ஜீன்ஸ் மற்றும் ரஜினி நடித்த, ஹாலிவுட் படமான, பிளட் ஸ்டோன் போன்ற, 100க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்துள்ளார்.பிரெஞ்சு அரசு, கலை, இலக்கியம், கலாசார துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு, செவாலியே விருது வழங்கி, கவுரவித்து வருகிறது.

நியமனங்கள்

  • சத்தீஷ்கார் மாநில புதிய முதல்வராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பூபேஷ் பாகெலே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  • மத்தியப் பிரதேச மாநிலத்தின் 18-ஆவது முதல்வராக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கமல்நாத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • மிஸோரம் முதல்வராக மிஸோ தேசிய முன்னணி கட்சியின் தலைவர் ஸோரம்தங்கா பதவியேற்றுள்ளார்.

முக்கிய தினங்கள்

  • விஜய் திவஸ் தினம் - டிசம்பர் 16 |   பாகிஸ்தானுக்கு எதிராக கடந்த 1971–ம் ஆண்டு நடந்த போரில் இந்தியா வெற்றி பெற்றதை  நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 16–ந்தேதி நாடு முழுவதும் ‘விஜய் திவஸ்’ என்ற பெயரில் வெற்றியை நினைவு கூறும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது
  • சர்வதேச தேயிலை தினம் (International Tea day) - டிசம்பர் 15

விளையாட்டு

  • உலக கோப்பை ஹாக்கி தொடரில் பெல்ஜியம் அணி முதல் முறையாக நெதர்லாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. 
  • உலக டூர் ஃபைனல்ஸ் பாட்மிண்டன் சாம்பியன் போட்டியில், ஜப்பானின் நஜோமி ஒகுஹராவை  வீழ்த்தி, இந்தியாவின்  பி.வி.சிந்து பட்டம் வென்றுள்ளார்.
Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!