TNPSC Current Affairs, Online Tests, Latest News

Responsive Ads Here

Post Top Ad

Your Ad Spot

TNPSC Current Affairs 17 December 2018 | நடப்பு நிகழ்வுகள் 17 டிசம்பர் 2018

TNPSC Current Affairs 17  December 2018
☞   Previous Days' Current Affairs Notes
☞  Today / Previous Days' Current Affairs Quiz

தமிழ்நாடு

 • தமிழில் தந்தி அடிக்கும் முறையை கண்டுபிடித்த அஞ்சல் துறை அலுவலர், கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த சிவலிங்கனார் 94வது வயதில் இறந்தார்.

இந்தியா

 • 'இந்தியர்கள் பயன்படுத்தும் கிரெடிட் கார்டுகள் மற்றும் அவற்றின் பண பரிவர்த்தனைகள் தொடர்பான தகவல்களை, இந்தியாவில் உள்ள சர்வர்களில் மட்டுமே சேமிக்க வேண்டும்' என, ரிசர்வ் வங்கி ஏப்ரல் 2018 ல் உத்தரவிட்டுள்ளது. இந்த நடைமுறை 16 அக்டோபர் 2018 முதல் அமலுக்கு வந்துள்ளது. இதையடுத்து, இந்தியாவைச் சேர்ந்த கிரெடிட் கார்டுதாரர்கள் பற்றிய தகவல்களை, பிற நாடுகளில் உள்ள, 'சர்வர்' எனப்படும் பிரதான கம்ப்யூட்டர்களில் இருந்து, நீக்கும் பணியை, 'மாஸ்டர்கார்டு' நிறுவனம், துவங்க உள்ளது.
 • குஜராத்தின், நர்மதா மாவட்டத்திலுள்ள “கேவடியா (Kevadia) வில் புதிய நவீன இரயில் நிலையத்தை அமைப்பதற்கான அடிக்கல் 15-12-2018 அன்று இந்திய குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த அவர்களால் நாட்டப்பட்டது.

உலகம்

 • 4,400 ஆண்டுகள் பழமையான எகிப்து ராஜ குருவின் கல்லறை கண்டுபிடிப்பு : எகிப்து நாட்டில் தலைநகர் கெய்ரோ அருகில், வாட்யே என்னும் அரச குருவின் 4,400 ஆண்டுகள் பழமையான கல்லறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 • பாரீஸ் பருவநிலை மாற்ற உடன்பாடு 2020-க்குள் அமல் : புகை மாசு வெளியேற்றத்தை குறிப்பிட்ட அளவு குறைத்து, அதன் மூலம் புவி வெப்பமாதலையும், பருவ நிலை மாற்றத்தையும் கட்டுப்படுத்துவதற்கான வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒப்பந்தத்தை சர்வதேச நாடுகள் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் கடந்த 2015-ஆம் ஆண்டு மேற்கொண்டன. அந்த ஒப்பந்தத்துக்கு இறுதி வடிவம் கொடுப்பதற்கான பேச்சுவார்த்தை , “COP 24” (Conference of the Parties to the United Nations Framework Convention on Climate Change (COP 24))  என்ற பெயரில், போலந்தின் கடோவைஸ் (Katowice, Poland)  நகரில் கடந்த  டிசம்பர் 2-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை நடைபெற்றது. இக்கூடுகையின் மூலம்  ஏற்பட்டுள்ள ஒப்பந்தத்தின் செயல்திட்டத்துக்கு சர்வதேச நாடுகள் ஒப்பதல் அளித்துள்ளன.  இதன்படி பூமியின் வெப்ப நிலை 2 டிகிரி செல்சியஸ் அளவு  குறைக்கப்படும்.
கூ,தக. : (நன்றி: தினமணி)
 • பூமி உறைந்து விடாமல் இருப்பதற்கு அதன் வளி மண்டலம்தான் காரணம். வளி மண்டலத்தில் கலந்துள்ள நீராவியும், கரியமில வாயு, மீத்தேன், ஓஸோன் போன்ற வாயுக்களும், சூரிய ஒளிக் கதிரிலிருந்து அகச்சிவப்புக் கதிர்களை உள்வாங்கி வெளியிடுவதாலேயே, பூமியின் வெப்பம் உயிர்கள் வாழ்வதற்குத் தேவையான அளவில் இருந்து வருகிறது. அந்த வாயுக்கள் இல்லாவிட்டால், பூமியின் மேற்பரப்பு பனிக்கட்டிகளாக உறைந்திருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
 • இந்தச் சூழலில், மனிதர்களின் தொழிற்புரட்சிக்குப் பிறகு, பூமியை வெப்பமாக வைத்திருக்கும் கரியமில வாயு உள்ளிட்டவை வளிமண்டலத்தில் அதிக அளவில் கலக்கத் தொடங்கின.அவை, அதிக அளவில் சூரியனிடமிருந்து வெப்பத்தை கிரகித்துத் தருவதால் பூமியின் வெப்பமும் அதிகமாகி வருவதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். கடந்த 1880-லிருந்து 2012-ஆம் ஆண்டு வரை பூமியின் சராசரி வெப்ப நிலையில் 0.85 டிகிரி செல்ஷியஸ் அதிகரித்ததாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.இதன் காரணமாக, அன்டார்டிகா கண்டத்தின் பனிக்கட்டிகள் உருகி, கடலின் நீர்மட்டம் அதிகரித்து பல தீவுகளும், கடற்கரைப் பகுதிகளும் கொஞ்சம் கொஞ்சமாக கடல் கொள்ளும் அபாயத்தில் உள்ளன. மேலும், வெப்ப அதிகரிப்பால் வளிமண்டல சுழற்சியில் மாற்றங்கள் ஏற்பட்டு புயல், வெள்ளம், வறட்சி போன்ற பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.
 • "பருவ நிலை மாற்றம்' என்று அழைக்கப்படும் இந்த பாதிப்புகளைக் கட்டுப்படுத்துவதற்காக, கரியமில வாயு உள்ளிட்ட வெப்பத்தை அதிகரிக்கச் செய்யும் வாயுக்கள், தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்களில் இருந்து வெளியேறுவதைக் கட்டுப்படுத்துவதற்காக உலக நாடுகள் 2015-ஆம் ஆண்டில் மேற்கொண்ட ஒப்பந்தம்தான் பாரீஸ் பருவ நிலை ஒப்பந்தம்.
 • துபையில் மென்பொருள் நிறுவனம் தொடங்கிய 13 வயது இந்தியச் சிறுவன் : கேரளத்தைச் சேர்ந்த ஆதித்யன் ராஜேஷ்   "டிரினெட் சொல்யூஷன்ஸ்' என்ற பெயரில் மென்பொருள் மேம்பாட்டு நிறுவனத்தைத் துபாயில் தொடங்கியுள்ளார்.

வெளிநாட்டு உறவுகள்

 • முதல் வெளிநாட்டு பயணமாக மாலத்தீவு அதிபர் இப்ராகீம் முகமது சோலி 16-12-2018 அன்று இந்தியா வந்துள்ளார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திரமோடி, வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் ஆகியோரை சந்தித்து பேசுகிறார்.

நியமனங்கள்

 • தேசிய குற்ற ஆவணங்கள் பீரோவின் (National Crime Records Bureau (NCRB)) இயக்குநராக ராம்பால் பவார் (Ramphal Pawar)  14-12-2018 அன்று நியமிக்கப்பட்டுள்ளார்.

விருதுகள்

 • உலகளாவிய இந்திய அழகிப் போட்டி 2018” (Miss India Worldwide 2018) ல் இந்திய - அமெரிக்க பெண் ஸ்ரீ சாய்னி (Shree Saini)  வெற்றிபெற்றுள்ளார்.  

விளையாட்டு

 • உலகக் கோப்பை ஹாக்கி போட்டியின் இறுதி ஆட்டத்தில் பெல்ஜியம் அணி "ஷூட் அவுட்' முறையில் 3-2 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
 • உலக டூர் ஃபைனல்ஸ் பாட்மிண்டனில் தங்கம் வென்றார் சிந்து :   சீனாவில் நடைபெற்ற உலக டூர் ஃபைனல்ஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி. சிந்து   தங்கப் பதக்கம் வென்றுள்ளார். இதன் மூலம் உலக டூர் ஃபைனல்ஸ் போட்டியில் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றார். இறுதிச்சுற்றில் உலகின் 6-ஆம் நிலை வீராங்கனையான சிந்து, உலகின் 5-ஆம் நிலையில் இருப்பவரும், முன்னாள் உலக சாம்பியனுமான ஜப்பானின் நஜோமி ஒகுஹராவை வீழ்த்தியுள்ளார்.
 • இந்திய கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன் கவுதம் கம்பீர் அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக 5 டிசம்பர் 2018 அன்று அறிவித்துள்ளார்.

அறிவியல் & தொழில்நுட்பம்

 • 21-ஆண்டுகளுக்கு பிறகு பூமிக்கு அருகாமையில் வரும் "48-பி' என்ற வெர்டினியன் வால்நட்சத்திரத்தை பொதுமக்கள் தொலைநோக்கி இல்லாமல் காணலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • வான் வெளியில் வால் நட்சத்திரம் அவ்வப்போது நகர்வது வழக்கம். தற்போது "48-பி' என்ற வெர்டினியன் வால்நட்சத்திரம் பூமிப்பாதையில் நகர்கிறது. சுமார் 21 ஆண்டுகளுக்கு பிறகு வடகிழக்கு திசையில் நீலநிற வண்ணத்தில் பூமிக்கு மிக அருகாமையில் வருகிறது. இந்த அரிய நிகழ்வை இந்தியா முழுவதிலுமிருந்து தொலைநோக்கியின்றி வெறும் கண்ணால் பொதுமக்கள் பார்க்கலாம். இந்த நிகழ்வானது கடந்த டிச. 14-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை இரவு 7 மணி முதல் தெரியும்.

No comments:

Post a comment

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot