நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

TNPSC Current Affairs 18 December 2018 | நடப்பு நிகழ்வுகள் 18 டிசம்பர் 2018

TNPSC Current Affairs 18 December 2018
☞   Previous Days' Current Affairs Notes
☞  Today / Previous Days' Current Affairs Quiz

தமிழ்நாடு

  • பிரதமர் சுகாதாரப் பாதுகாப்புத் திட்டத்தின் (Pradhan MantriSwasthya Suraksha Yojana) கீழ் புதிதாக , மதுரையில் ரூ.1,264 கோடியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு 17-12-2018 அன்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த மருத்துவமனையை 45 மாதங்களில் நிர்மாணிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மதுரை தோப்பூரில் 200 ஏக்கர் பரப்பளவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட உள்ளதாக தமிழக அரசு  ஏற்கெனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
    • பிரதமர் சுகாதாரப் பாதுகாப்புத் திட்டத்தின் (பிஎம்எஸ்எஸ்ஒய்) கீழ் புதிதாக மதுரையில் அமையவுள்ள மருத்துவமனையில் 750 படுக்கை வசதிகள் இருக்கும். இதில் அவசர கால சிகிச்சை, காய சிகிச்சை, ஆயுஷ் மருத்துவ சிகிச்சை, தனியார் படுக்கை, ஐசியு சூப்பர் ஸ்பெஷாலிட்டி சிகிச்சை உள்ளிட்டவை அடங்கும்.
    • மேலும், 15 சூப்பர் ஸ்பெஷாலிட்டி துறைகள் இடம் பெறும். இவை முழுமையான செயல்பாட்டுடன் கூடிய எய்ம்ஸ் மருத்துவமனையாக இருக்கும். மேலும், ஒவ்வொரு எய்ம்ஸ் மருத்துவமனையிலும் ஒரு நாளைக்கு 1500 புறநோயாளிகளுக்கும், உள்நோயாளி பிரிவில் மாதத்துக்கு 1,000 பேருக்கும் சிகிச்சை அளிக்க வசதி ஏற்படுத்தப்படும். தற்போது நாட்டில் 11 எய்ம்ஸ் மருத்துவமனைகள் உள்ளன. இந்த மருத்துவமனையானது வேலைவாய்ப்பு, கவனிப்பு, சிகிச்சை ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டிருக்கும். இந்த மருத்துவமனையுடன் மருத்துவக் கல்லூரியும், அதில் ஆயுஷ் பிரிவுக்கு தனிக் கட்டடம், அரங்கம், இரவு நேரத் தங்கும் குடில், விருந்தினர் இல்லம், விடுதிகள், குடியிருப்பு வசதிகளும் ஏற்படுத்தப்படும்.
கூ,தக. : தெலங்கானா மாநிலத்தில் பீபீ நகரில் ரூ.1,028 கோடி மதிப்பீட்டிலும் எய்ம்ஸ் மருத்துவமனைகள்அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியா

  • திருநங்கைகள் உரிமை மசோதா 17-12-2018 அன்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
  • ஆதார் சட்டத் திருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் : அலைபேசி எண் பெறுவது மற்றும் வங்கி கணக்கு துவக்குவதற்கு சுய விருப்பத்தின் அடிப்படையில் ஆதாரைக் குறிப்பிடுவதை கட்டாயமாக்கும் வகையில் சட்ட திருத்தங்கள் செய்ய மத்திய அமைச்சரவை 17-12-2018 அன்று ஒப்புதல் அளித்துள்ளது.
  • இந்தியாவில், கலை, அறிவியல், வர்த்தகம் மற்றும் மருத்துவம் பயிற்றுவிக்கும் பெண்களுக்கான கல்லூரி மற்றும் பல்கலை கழகங்களின் மொத்த எண்ணிக்கை 4,219   என  மத்திய அரசு  தெரிவித்துள்ளது.  என தெரிவித்துள்ளார். இவற்றில் உத்தர பிரதேசம் அதிக அளவிலும் (843), ராஜஸ்தான் (684) மற்றும் தமிழகம் (383) ஆகியவை அடுத்த இடங்களிலும் உள்ளன.
  • முத்தலாக்முறைக்கு எதிராக புதிய மசோதா 17-12-2018 அன்று நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.
    • முஸ்லிம் பெண்கள் (திருமண உரிமைகள் பாதுகாப்பு) சட்டம்-2018 ஏற்கனவே நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தின்படி ‘முத்தலாக்’ முறையில் மனைவியை விவாகரத்து செய்வது சட்டவிரோதம் என்றும், இதன்மூலம் கணவருக்கு 3 வருடங்கள் ஜெயில் தண்டனை விதிக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
    • இந்த சட்டமசோதா சில கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக மாநிலங்களவையில் நிறைவேற்றப்படாமல் நிலுவையில் இருந்தது. இதில் மத்திய அரசு, விவாகரத்து செய்யும் கணவர்களுக்கு ஜாமீன் வழங்குவது உள்பட சில திருத்தங்களை செய்தது. ஆனாலும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்படவில்லை. இதனால் கடந்த செப்டம்பர் மாதம் இதற்காக திருத்தங்களையும் சேர்த்து ஒரு அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் 17-12-2018 நாடாளுமன்ற கூட்டம் தொடங்கியதும் இந்த அவசர சட்டத்துக்கு மாற்றாக ஒரு புதிய மசோதாவை சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத் அறிமுகம் செய்தார்.
    • இந்த புதிய மசோதாவில் பல திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது. ‘முத்தலாக்’ முறையினால் பாதிக்கப்படும் முஸ்லிம் பெண்களுக்கு உதவுவதற்கு இந்த சட்டம் அவசியம். இதில் குற்றம்சாட்டப்படுபவர் விசாரணைக்கு முன்பே ஜாமீன் கேட்டு மாஜிஸ்திரேட்டு கோர்ட்டை அணுக முடியும்.
    • இந்த வழக்கில் கணவர், மனைவிக்கு நஷ்டஈடு கொடுக்க ஒப்புக்கொண்ட உடனே மாஜிஸ்திரேட்டு அவருக்கு ஜாமீன் வழங்க முடியும். நஷ்டஈடு எவ்வளவு என்பதை மாஜிஸ்திரேட்டு முடிவு செய்வார். மனைவியோ அல்லது அவரது ரத்தசம்பந்தமான உறவினர்களோ, திருமணத்தின் மூலம் உறவினர் ஆனவர்களோ போலீசில் புகார் செய்தால் தான் வழக்கு பதிவு செய்ய முடியும். மற்றவர்களோ, பக்கத்தில் வசிப்பவர்களோ புகார் செய்ய முடியாது.
    • இந்த பிரச்சினை தொடர்பாக மனைவி மாஜிஸ்திரேட்டு கோர்ட்டை அணுகினால், கணவன்-மனைவிக்கு இடையேயான பிரச்சினையை தீர்த்துவைக்க மாஜிஸ்திரேட்டுக்கு அதிகாரம் உள்ளது. இருதரப்பினரும் வழக்கை வாபஸ் பெற்றுக்கொள்ளவும் உரிமை உள்ளது. பாதிக்கப்படும் மனைவி தனக்கும், தன் சிறுவயது பிள்ளைகளுக்கும் பிழைப்பூதியம் கேட்டும் மாஜிஸ்திரேட்டை அணுகலாம்.
  • நீதிமன்ற கட்டணம், அபராதங்கள் ஆகியவற்றை மின் பணபரிவர்த்தனை (e-payments ) மூலமாக செலுத்துவதற்கான வசதியை அறிமுகம் செய்துள்ள இந்தியாவின் முதல் நீதிமன்றம் எனும் பெருமையை பூனே மாவட்ட நீதிமன்றம் (15-12-2018) பெற்றுள்ளது.
  • மத்திய பிரதேச மாநிலத்தின் 18 வது முதலமைச்சராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கமல்நாத் 17-12-2018 அன்று பதவியேற்றுள்ளார்.
  • சட்டிஸ்கர் மாநிலத்தின் மூன்றாவது முதலமைச்சராக காங்கிரஸ் கட்சியின் பூபேஷ் பாஹல் (Bhupesh Baghel) 17-12-2018 அன்று பதவியேற்றுள்ளார்.
  • இராஜஸ்தான் மாநிலத்தின் முதலமச்சராக காங்கிரஸ் கட்சியின் அஷோக் கெக்லாட் (Ashok Gehlot) 17-12-2018 அன்று பதவியேற்றுள்ளார்.

வெளிநாட்டு உறவுகள்

  • மாலத்தீவுக்கு இந்தியா ரூ.10,000 கோடி நிதியுதவி : மாலத்தீவின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்காக, ரூ 10, 000 கோடி நிதியுதவி வழங்குவதாக பிரதமர் நரேந்திர மோடி 17-12-2018 அன்று அறிவித்தார்.
  • இந்தியா பிரான்ஸ் நாடுகளுக்கிடையே 3-10-2018 அன்று செய்துகொள்ளப்பட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை 17-12-2018 அன்று ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • இந்தியா ஆஸ்திரேலியா நாடுகளுக்கிடையே, மாற்றுத்திறனாளிகள் துறையில் ஒத்துழைப்பிற்காக 22-11-2018 அன்று செய்துகொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை 17-12-2018 அன்று ஒப்புதல் வழங்கியுள்ளது.

விருதுகள்

  • பிரபஞ்ச அழகி 2018” (Miss Universe 2018) போட்டியில் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த காத்ரினா எலிசா கிரே (24) (Catriona Elisa Gray) வென்றுள்ளார். இந்த போட்டிகள் தாய்லாந்து நாட்டிலுள்ள’பாக் கிரட்’ (Pak Kret)  எனுமிடத்தில் நடைபெற்றது.

அறிவியல் & தொழில்நுட்பம்

  • இந்திய விமானப்படையின் தகவல் தொடர்பு செயற்கைகோளான ஜிசாட்- 7ஏ வுடன் ஜி.எஸ்.எல்.வி’.- எப்11 (GSLV-F11) ராக்கெட் 18-12-2018 அன்று விண்ணில் ஏவப்படுகிறது.
    • இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) இந்திய விமானப்படையின் தகவல் தொடர்புக்காக ஜிசாட்- 7ஏ என்ற செயற்கைகோளை வடிவமைத்து உள்ளது. 1 மீட்டர் உயரம் கொண்ட ஜி.எஸ்.எல்.வி.- எப்11 ராக்கெட்டின் எடை 415.6 டன் ஆகும். இதில் வைத்து அனுப்பப்படும் 2,250 கிலோ எடை கொண்ட ஜிசாட்- 7ஏ செயற்கைகோள் பூமியில் இருந்து அதிகபட்சமாக 36 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திலும், குறைந்தபட்சம் 170 கிலோ மீட்டர் தூரத்திலும் கொண்ட சுற்றுப்பாதையில் பூமியை சுற்றி வர இருக்கிறது. விமானப்படைக்கு தேவையான தகவல்களை இந்த செயற்கைகோள் மூலம் பெற முடியும்.
  • இந்தியாவில் முதல் முறையாக பயோ - ஜெட் எரிபொருள் பயன்படுத்தப்பட்டு இராணுவ விமானங்கள் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ளது.  இந்த ‘உயிரி எரிபொருளானது’ ,  “ஜாட்ரோபா எண்ணையிலிருந்து” (Jatropha oil ) தயாரிக்கப்படுகிறது.
Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!