நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

TNPSC Current Affairs 28 February 2019

தமிழ்நாடு
 • தேவேந்திரகுல வேளாளர் பெயர் மாற்றம் - ஆய்வு செய்ய அரசு குழு அமைப்பு :  ஆதிதிராவிடர் இனப் பிரிவுகளில் உள்ள குடும்பன்,  பண்ணாடி,  காலாடி,  கடையன், தேவேந்திரகுலத்தான்,  பள்ளன் ஆகிய ஆறு பிரிவுகளையும் ஒன்றாக இணைத்து தேவேந்திரகுல வேளாளர் எனப் பெயர் மாற்றம் செய்வதைக் குறித்து ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அளிக்க ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர், சட்டத் துறை செயலாளர் ஆகியோர் உறுப்பினர்களாகவும், ஆதிதிராவிடர் நல இயக்குநர் உறுப்பினர்-செயலராகவும் இருப்பர்.
 • தமிழிசை மூவர் விழா நாகப்பட்டிணம் மாவட்டத்திலுள்ள சீர்காழியில் 27 பிப்ரவரி 2019 முதல் 1 மார்ச் 2019 வரையில் மூன்று நாள்கள் நடைபெறுகிறது.  சீர்காழியில் பிறந்து வளர்ந்து, உலகெங்கும் தமிழிசையை வளர்த்த மூவர்களான முத்துதாண்டவர், அருணாச்சலக் கவிராயர், மாரிமுத்தாப் பிள்ளை ஆகியோரின் நினைவைப் போற்றும் வகையில் தமிழிசை மூவர்களுக்கும் ஆண்டுதோறும் அரசு சார்பில் மூன்று நாள்கள் விழா கொண்டாடப்படுகிறது குறிப்பிடத்தக்கது.
 • தமிழகம் முழுவதும் 28-02-2019 முதல் ஸ்மார்ட் லைசென்ஸ் வழங்கும் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.

இந்தியா

 • "ஸ்ரேயாஸ்” (SHREYAS) திட்டம் : உயர்கல்வி பயிலும் இளைஞர்களுக்கான் திறன் பயிற்சி திட்டம் (Scheme for Higher Education Youth in Apprenticeship and Skills (SHREYAS)) என்று பெயரிடப்பட்டுள்ள திட்டத்தினை  27-02-2019 அன்று  மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகார் தொடங்கி வைத்துள்ளார்.  மத்திய மனித வள மேம்பாடு, திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு ஆகிய மூன்று அமைச்சகங்கள் இணைந்து  செயல்படுத்தும் இத்திட்டத்தின் நோக்கம்,  உயர்கல்வி பயிலும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு சார்ந்த பயிற்சிகளை வழங்கி அவர்களுக்கான வேலைவாய்ப்புகளை உறுதி செய்வதாகும் .
 • ”ISL Dictionary”  (Indian Sign Language Dictionary) என்பது மத்திய சமூக நீதி அமைச்சகத்தினால் வெளியிடப்பட்டிருக்கும்   செவித்திறன் குறைபாடுடையோருக்கான (Hearing Impaired Persons)  அகராதியாகும்.
 • தேசிய இளையோர் பாராளுமன்ற விழா 2019 (National Youth Parliament Festival)  “புதிய இந்தியாவின் குரலாக இருப்பீர் தீர்வுகளை உருவாக்கி கொள்கைக்கு பங்களிப்பு செய்வீர்” ( ‘Be the Voice of New India and Find solutions and Contribute to Policy’) என்ற மையப் பொருளுடன்  18 முதல் 25 வயதிற்குட்பட்ட இளைஞர்களை பங்கேற்பாளர்களாகக் கொண்டு, மத்திய இளைஞர் விவகார அமைச்சகத்தின் கீழ் இயங்கும்  தேசிய சேவைகள் திட்டம் மற்றும் நேரு யுவ கேந்திரா சங்காதான் ஆகிய அமைப்புகளின் மூலம் புது தில்லியில் நடத்தப்பட்டது.
  • தேசிய இளையோர் பாராளுமன்ற விழா விருதுகள் 2019 பெற்றோர் விவரம் வருமாறு,
   • முதல் பரிசு - ஸ்வேதா உம்ரே (Shweta Umre) , மகாராஷ்டிரா
   • இரண்டாவது பரிசு - S அஞ்சானாக்‌ஷி  (Anjanakshi M.S), கர்நாடகா
   • மூன்றாவது பரிசு - மம்தா குமாரி , பீகார் 
  • விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமான் :    இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் விமானப் படை விமானங்களுக்கு எதிராக தாக்குதல் நடத்திய இந்திய விமானப் படையின்  மிக் - 21 விமானத்தின்  விமானி அபிநந்தன் வர்தமான்  பாகிஸ்தான் இராணுவத்தின் பிடியில் சிக்கியுள்ளார். இவர்   தமிழ்நாட்டின்  திருவண்ணாமலை மாவட்டம், திருப்பனமூரைச் சேர்ந்தவர்.  தாம்பரம் விமானப்படை மையத்தில் பயிற்சி பெற்ற அபிநந்தன் கடந்த 2004 முதல் இந்திய விமானப்படையில் பணியாற்றி வருகிறார். 
  • அனைவரையும் உள்ளடக்கிய இணைய சேவை பட்டியல் 2019 (inclusive internet index 2019)- ல் இந்தியா 47 வது இடத்தைப் பெற்றுள்ளது.   ஃபேஷ்புக் அமைப்பின் பொருளாதார நுண்ணறிவு பிரிவு (Economist Intelligence Unit (EIU) for Facebook) வெளியிட்டுள்ள இந்தப் பட்டியலில் முதல் மூன்று இடங்களை முறையே ஸ்வீடன், சிங்கப்பூர் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் பெற்றுள்ளன.
  • ’பயோ - ஆசியா 2019’ (BioAsia 2019) என்ற பெயரில் ஆசியாவின் மிகப்பெரிய பயோ-டெக்னாலஜி மற்றும் உயிர் - அறிவியல் மன்றத்தின் கூடுகை 25-27 பிப்ரவரி 2019 தினங்களில் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நடைபெற்றது.
  • ’பிராணம் மசோதா’ (Parents Responsibility and Norms for Accountability and Monitoring (PRANAM) Bill) என்ற பெயரில், மாநில அரசு ஊழியர்கள் (அஸ்ஸாம்) தங்கள் பெற்றோர்கள் மற்றும் உடல் ஊனமுற்ற உடன்பிறந்தோரைச் சரிவர கவனிக்காத பட்சத்தில், அவர்களது ஊதியத்தில் 10% அல்லது 15% த்தினை அவர்தம் பெற்றோர் அல்லது உடல் ஊனமுற்ற உடன்பிறப்புகளின் கணக்கில் செலுத்தும்   இந்தியாவின் முன்னோடி  சட்ட மசோதாவை அமல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்கான ’பிராணம் குழு’ வை (PRANAM Commission) அஸ்ஸாம்  மாநில அரசு அமைத்துள்ளது.  
  • ”ஸ்கில் சாதி திட்டம்” (Skill Saathi initiative) என்ற பெயரில் ’திறன் இந்தியா திட்டத்தைப்’ பற்றிய தகவல்களை அனைத்து இளைஞர்களையும் சென்றடைவதற்கான திட்டத்தை ஒடிஷா மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
  • ”யுவ சஹாகார் திட்டம்” (Yuva Sahakar scheme) என்ற திட்டமானது நவம்பர் 2018 ல் ,  தேசிய கூட்டுறவு வளர்ச்சி நிறுவனத்தின் ( National Cooperative Development Corporation (NCDC) ) மூலம் தொடங்கப்பட்டது.  இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம்  கூட்டுறவு அமைப்புகளின் மூலம் நிதியுதவி வழங்கி இளம் தொழில் முனைவோர்களை ஊக்குவிப்பதாகும். இதற்காக, ‘கூட்டுறவு தொழில்முனைவு மற்றும் கண்டுபிடிப்பிற்கான நிதி’ (Cooperative Start up and Innovation Fund) ஏற்படுத்தப்பட்டுள்ளது.

உலகம்

 • நைஜீரியா நாட்டின் அதிபராக முகமது புகாரி (Muhammadu Buhari) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

முக்கிய தினங்கள்

 • உலக அரசு சாரா அமைப்புகள் தினம் (World NGO Day) - பிப்ரவரி 27
 • தேசிய அறிவியல் தினம் - பிப்ரவரி 28 | மையக்கருத்து 2019 - மக்களுக்கான அறிவியல் மற்றும் அறிவியலுக்கான மக்கள்  (Science for the People and People for the Science.)
கூ.தக. : சர் சி.வி.ராமன் தனது ஆய்வுக் கட்டுரையைச் சமர்பித்த தினமான பிப்ரவரி 28-ம் தேதி, தேசிய அறிவியல் தினமாக நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

விருதுகள்

 • பி.வி. நரசிம்மராவ் தேசிய தலைவர் மற்றும் வாழ்நாள் சாதனையாளர் விருது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு வழங்கப்பட்டுள்ளது.

விளையாட்டுக்கள்  

 • துப்பாக்கி சுடுதலில் உலக சாதனை படைத்த இந்தியர்கள் : தில்லியில் நடைபெற்ற உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலில் 2 இந்தியர்கள் புதிய உலக சாதனை படைத்துள்ளனர். அவர்கள் விவரம் வருமாறு,
  • ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 26 வயது வீராங்கனை அபூர்வி சந்தேலா 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவு மகளிர் ஒற்றையர் இறுதிச்சுற்றில் 252.9 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றதுடன் இத்தனை புள்ளிகளைப் பெற்ற வீராங்கனை என்ற புதிய உலக சாதனையையும் படைத்துள்ளார்.
  • உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 16 வயது இளம் வீரர் சௌரவ் சௌதரி ஆடவர் பிரிவில், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இறுதிச்சுற்றில் 245 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றதுடன் புதிய உலக சாதனையையும் படைத்தார் சௌரவ். இந்த வெற்றி மூலம் 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு இவர் தகுதி பெற்றார்.
  • 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் சௌரவ் சௌதரி, மானு பேக்கர் இணை தங்கம் வென்றது.  பதக்கப்பட்டியலில், இந்தியாவும் (3 தங்கம்), ஹங்கேரியும் (3 தங்கம்) முதலிடம் பெற்றன.  இந்தப் போட்டியின் மூலம், இந்தியா சார்பில் சௌரவ் சௌதரி மட்டுமே ஒலிம்பிக் போட்டிக்குத் தேர்வானார்.
 • பெங்களூருவில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரை ஆஸ்திரேலியா அணி வென்றுள்ளது.
 • கேலோ இந்தியா செயலியை 27-2-2019 அன்று பிரதமர் மோடி அவர்கள் தொடங்கி வைத்துள்ளார்கள். 
  • விளையாட்டு, உடல்தகுதி ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், கேலோ இந்தியா என்ற பெயரில் செல்லிடப் பேசி செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
  • மத்திய அரசின் கேலோ இந்தியா (விளையாடு இந்தியா) திட்டத்தின் ஒரு பகுதியாக இந்திய விளையாட்டு ஆணையம், இந்தச் செயலியை வடிவமைத்துள்ளது.
  • விளையாட்டையும், உடல்தகுதியையும் அடிப்படையாக வைத்து செயலி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும்.
  • 18 விளையாட்டுகள் குறித்த விதிமுறைகளும் இதில் குறிப்பிடப்பட்டிருக்கும். ஒவ்வொரு விளையாட்டுக்கும் என்னென்ன உபகரணங்கள் தேவை என்பது குறித்த அடிப்படையான விஷயங்களும் இதில் இருக்கும்.
  • இந்திய விளையாட்டு ஆணையம் நாடு முழுவதும் செய்துள்ள வசதிகள், முகவரிகள், அதிகாரிகளின் தொடர்பு எண்கள் உள்ளிட்ட விவரங்களும் இருக்கும்.
  • மேலும், உடல் தகுதி தேர்வுகள் குறித்த தகவல்களும் இந்தச் செயலில் இருக்கும். அதாவது, எந்த விளையாட்டில் சிறார்கள் நிபுணத்துவம் பெற்றவராக உள்ளனர் என்பதை செயலில் குறிப்பிடப்பட்டுள்ள 18 தேர்வுகளை பயிற்சியாளர்கள் சோதனை செய்து பார்ப்பதன் மூலம் அறிந்து கொள்ள முடியும்.
  • ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மொழிகளில் தகவல்கள் வழங்கப்படுகின்றன.
 • இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஜெயசூரியா அடுத்த இரண்டு ஆண்டுகள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதிலிருந்து  தடை செய்யப்பட்டுள்ளார்.  அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளின் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Announcement !
Join the conversation
Post a Comment
Link copied to clipboard