நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

TNPSC Current Affairs 8 September 2020

 Current Affairs Today 8-09-2020

தமிழகம்

  • ☞ கண்தான பதிவேட்டுக்காக உருவாக்கப்பட்டுள்ள www.hmis.tn.gov.in/eyedonor என்ற தனி இணையதளத்தை முதல்வா் பழனிசாமி 7-9-2020 அன்று தொடக்கி வைத்துள்ளார். கண்தானம் செய்ய விரும்புவோர் யாரிடம் உறுதிமொழி கொடுப்பது, இறந்த பிறகு எவ்வாறு, எங்கு எப்படி கண்களை தானமாக அளிப்பது போன்ற விவரங்கள் குறித்து தெளிவான வழிகாட்டுதல்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையிலும், மாநிலத்தில் கண்தானம் செய்ய விரும்புவோர் குறித்த பதிவேட்டை ஏற்படுத்தவும், இந்த புதிய இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளம் மூலம், கண்தானம் செய்ய விரும்புவோர், தங்களது பெயர், இருப்பிட முகவரி, கைப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி போன்ற தகவல்களை பதிவு செய்து, கண் தானத்திற்கான உறுதிமொழியை ஏற்ற பின்பு, அதற்கான சான்றிதழை நேரடியாக இணையதளத்தின் வாயிலாகவே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

  • ☞ கல்லூரி வரலாற்றில் முதல்முறையாக, சென்னை ஐஐடியில் பயிற்சி வேலைவாய்ப்புக்கான தோ்வு (இன்டா்ன்ஷிப்) முழுவதும் இணைய வழியிலேயே நடைபெற்றது.

  • ☞ “தமிழ்நாடு மின்னணுவியல் வன்பொருள் உற்பத்திக் கொள்கை 2020” ஐ முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 7-9-2020 அன்று வெளியிட்டார். (நன்றி : தினமணி, 8-9-2020)

தற்போதைய உட்கட்டமைப்புகள் :

  • ⌖இந்தியாவின் மொத்த மின்னணு உற்பத்தியில், தமிழ்நாட்டின் பங்களிப்பு 16 சதவீதம் ஆகும். மேலும், கணினி, மின்னணுவியல் மற்றும் ஒளியியல் பொருட்கள் உற்பத்தியில் தேசிய அளவில் தமிழ்நாடு 2-வது இடத்தில் உள்ளது. கைப்பேசி உற்பத்தி, கணினி மற்றும் அதன் புற உபகரணங்கள், தொழில்துறைக்குத் தேவையான மின்னணு பொருட்கள், நுகர்வோர் மின்னணு மற்றும் மின்னணு உதிரிபாகங்கள் போன்ற பொருட்களின் உற்பத்திக்கு வலுவான தளமாக தமிழ்நாடு விளங்குகிறது. ஸ்ரீபெரும்புதூரில் இருந்து ஒரகடம் வரையில் உள்ள மின்னணுவியல் உற்பத்தி தடத்தில், சாம்சங், டெல், சான்மினா, நோக்கியா சீமென்ஸ் நெட்வொர்க்ஸ் போன்ற முக்கிய நிறுவனங்கள் தங்களது உற்பத்தித் திட்டங்களை நிறுவி உள்ளன.

வன்பொருள் உற்பத்திக் கொள்கையின் நோக்கங்கள் :

  • ⌖2025ம் ஆண்டுக்குள், தமிழ்நாட்டின் மின்னணுவியல் துறையின் உற்பத்தியினை, 100 பில்லியன் அமெரிக்க டாலர்களாக (ரூ.7.35 லட்சம் கோடியாக) உயர்த்துதல்.

  • ⌖இந்தியாவின் மொத்த மின்னணு உற்பத்தியில், தமிழ்நாட்டின் தற்போதைய பங்களிப்பான 16 சதவீதத்தை 25 சதவீதமாக உயா்த்துதல்.

  • ⌖செமி கண்டக்டர் புனையமைப்பு (Semi conductor Fabrication) துறையை தமிழகத்தில் வளா்த்தெடுத்தல்.

  • ⌖அடுத்த 4 ஆண்டுகளுக்குள் தமிழகத்தில் மின்னணு வன்பொருள் உற்பத்தித் துறையின் மனிதவளத் தேவையைப் பூா்த்தி செய்யும் வகையில் ஒரு லட்சம் பேருக்கு திறன் பயிற்சி அளித்தல்.

  • ⌖கைப்பேசிகள், எல்இடி தயாரிப்புகள், ஃபேப்லஸ் சிப் வடிவமைப்புகள், பிசிபிக்கள்,  சோலார் போட்டோவோர்டாய்க் செல்கள், மருத்துவ மின்னணுவியல் மற்றும் மோட்டார் வாகன மின்னணுவியல் போன்ற முக்கிய துறைகளில் தமிழ்நாட்டில் செய்யப்படும் மதிப்புக் கூட்ட அளவினை கணிசமாக அதிகரித்தல்.

  • ⌖மின்னணு அமைப்பு, வடிவமைப்பு மற்றும் உற்பத்தி புத்தொழில் தொழிலகங்களுக்கான உகந்த சூழலினை வளர்த்தல்; குறிப்பாக வடிவமைப்பு, மேம்பாடு மற்றும் உற்பத்தி ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள புத்தாக்கத் தொழில்நுட்ப நிறுவனங்களின் வளர்ச்சியினை ஊக்குவித்தல்.

முக்கிய அம்சங்கள்:

    • ⌖முதலீட்டுத் தொகையில் 30% வரை மூலதன மானியம்.

    • ⌖நில குத்தகைக்கான மானியம் - தொழில் ரீதியாக பின் தங்கிய மாவட்டங்களில் தொழில் திட்டங்களை செயல்படுத்துபவர்களுக்கு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு நிலம் வாங்கும் செலவில் 50% மானியம்.

    • ⌖நிதி நிறுவனங்களில் இருந்து பெறப்படும் காலக் கடன்களுக்கு (டெர்ம் லோன்ஸ்) அதிகபட்சமாக 5% வரை வட்டி மானியம்.

    • ⌖மின்னணு அமைப்பு வடிவமைப்பு மற்றும் உற்பத்தித் தொழிலகங்கள் வாங்கும் நிலங்களுக்கு, 50% முதல் 100% வரை முத்திரைத் தீர்வைகளுக்கு விலக்களிப்பு.

    • ⌖முதன் முறையாக பணியமர்த்தப்படும் பணியாளர்களுக்கு, 6 மாத காலங்களுக்கு, மாதம் ஒன்றுக்கு 4,000 ரூபாய் வீதம் பயிற்சி மானியம், பெண் ஊழியர்களுக்கு, 6 மாத காலங்களுக்கு, மாதம் ஒன்றுக்கு 6,000 ரூபாய் வீதம் பயிற்சி மானியம்.

    • ⌖5 ஆண்டுகளுக்கு மின்சார வரிவிலக்கு.

    • ⌖அறிவுசார் மூலதனம் மற்றும் மேம்படுத்தப்பட்ட தரச் சான்றளிப்பு மானியம்- காப்புரிமை விண்ணப்பங்களுக்கு, 50 லட்சம் ரூபாய் வரை 50% மானியம். மேலும், தரச் சான்றிதழ்களுக்கு, ஒரு நிறுவனத்திற்கு 1 கோடி ரூபாய் வரை, 50% மானியம்.

    • ⌖ சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்கட்டமைப்பு மானியம் மற்றும் நடைமுறையில் உள்ள தொழில் கொள்கை 2014-ன் படி இதர சலுகைகள்.

    • ⌖பெரிய முதலீடுகள் அல்லது, அதிகமதிப்பு கூட்டல் / வேலைவாய்ப்பு / சிறந்த தொழில் சூழலை உருவாக்குவதற்கான சாத்தியக் கூறுகளைக் கொண்ட முதலீடுகளுக்கு, சிறப்பு தொகுப்பு சலுகை வழங்கப்படும்.

    • ⌖ஒவ்வொரு இஎம்சி-யிலும் தனியார் துறையுடன் இணைந்து, ஒரு திறன் மற்றும் பயிற்சி மையம் நிறுவப்படும். ஒரு லட்சம் நபர்களுக்கும் மேற்பட்டவர்களுக்கு திறன் பயிற்சி அளிக்கப்படும்.

    • ⌖மின்னணு வடிவமைப்பு மற்றும் உற்பத்தி மையங்களின் அருகில், தொழிலகங்களில் பணிபுரிவோர்க்கு குடியிருப்பு திட்டங்களை உருவாக்குதல்.

    • ⌖ தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் மூலம், புத்தாக்க மானியங்கள், புத்தொழில் மானியங்கள் , மற்றும் விதை மூலதனம் போன்ற சலுகைகள் மூலம், புத்தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவளித்தல்.

    • ⌖ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆதரவு - இரட்டை நகர ஒப்பந்தங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களுடன் இணைந்து ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, பொது வசதி மையங்கள் மற்றும் மின்னணு சோதனை மையங்களை விரிவாக்குதல்.

    • ⌖ மின்னணு பழுது பார்க்கும் பூங்காக்கள் மற்றும் மின் கழிவு மேலாண்மைக்கான வசதிகள் அமைக்கப்படும்

  • ☞ சிவகங்கை அருகே கோமாளிபட்டியில் ஆசிரியம் பற்றிய 13-ம் நூற்றாண்டு கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆசிரியம் என்றால் அடைக்கலம் தருதல், பாதுகாப்பு தருதல் என்று பொருள். ஆசிரியம் சொல்லுடன் காணப்படும் கல்வெட்டுகள் இதுவரை தமிழகத்தில் 70-க்கும் குறைவாகவே கண்டெடுக்கப்பட்டுள்ளன. பெரும்பாலும் புதுக்கோட்டை, மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் காணப்படுகின்றன.

    • ⌖தற்போது கோமாளிப்பட்டியில் கிடைத்திருக்கும் இரண்டு கல்வெட்டுகளில் ஒன்று பதிமூன்றாம் நூற்றாண்டின் முற்பகுதியையும், மற்றொன்று பதிமூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதியையும் சேர்ந்தது. முற்பகுதியைச் சேர்ந்த கல்வெட்டில் வில், அம்பு சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு மூலம் படைவீரர்கள் கேழாநிலை (தற்போதைய கீழாநிலைக்கோட்டையாக இருக்கலாம்) என்ற ஊரில் தங்கியிருந்து இரட்டகுலகாலபுரம் நகரத்தார்க்கு பாதுகாப்பு தந்துள்ளனர். பதிமூன்றாம் நூற்றாண்டு பிற்பகுதியைச் சேர்ந்த கல்வெட்டில் பூரண கும்ப சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு மூலம் குலசேகர பாண்டியன் தனது ஆட்சிக்காலத்தில் படையை உருவாக்கி அப்பகுதிக்கு பாதுகாப்பு தந்துள்ளார் என்பதை காட்டுகிறது

இந்தியா

  • ☞ ஒலியின் வேகத்தைவிட சுமார் 6 மடங்கு வேகத்தில் செல்லும் ஹைபா்சோனிக் தொழில்நுட்பத்திலான ஏவுகணை செலுத்து வாகனத்தை (Hypersonic Test Demonstrator Vehicle (HSTDV)) பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (Defence Research and Development Organisation (DRDO) ) உருவாக்கியுள்ளது. அதிவேக ஏவுகணை தயாரிப்புக்காக ஸ்கிராம்ஜெட் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த ராக்கெட் இன்ஜின், ஒடிசாவில் உள்ள வீலர் தீவில் அமைக்கப்பட்டுள்ள டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் ஏவுதளத்தில் 7-9-2020 அன்று வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ளது.

உலகம்

  • ☞ கரோனா தொற்றுக்கான தடுப்பு ஊசியை அதிக அளவில் கொள்முதல் செய்து உலக நாடுகளுக்கு விநியோகிக்கும் பணியை ஐ.நா. குழந்தைகளுக்கான நிதி அமைப்பு (United Nations Children's Fund is a United Nations) மேற்கொள்ளவுள்ளது.

  • ☞ ”ஹைசென் புயல்” (Typhoon Haishen) என்கிற சக்தி வாய்ந்த புயல் 160 கிலோ மீட்டர் வேகத்தில் 7-9-2020 ல் ஜப்பானைத் தாக்கியுள்ளது. ஏற்கனவே ‘மேசக்‘ (Typhoon "Mesaq" ) என்ற சக்தி வாய்ந்த புயலும், ஜப்பானின் தெற்கு பகுதியில் உள்ள தீவுகளை 1-9-2020 அன்று கடுமையாக தாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

  • ☞ சவூதி அரேபியா நாட்டினால் 5-9-20020 அன்று நடத்தப்பட்ட “ஜி-20 கல்வி அமைச்சர்கள் இணையதள கூடுகையில்” ( G20 Education Ministers Meet ) இந்தியாவின் சார்பாக, மத்திய மனிதவளத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் கலந்துகொண்டார். இந்த கூடுகைக்கு கு சவுதி அரேபியாவின் கல்வி அமைச்சர் டாக்டர் ஹமாத் அல்-ஆஷேக் தலைமை தாங்கினார்,

  • ☞ சர்வதேச சூரிய ஆற்றல் கூட்டமைப்பு (International Solar Alliance (ISA)) முதலாவது உலக சோலார் தொழில்நுட்ப உச்சிமாநாடு (World Solar Technology Summit) 8-9-2020 ல் இணையவழியில் நடைபெறுகிறது.

    • ⌖கூ.தக. : 121 நாடுகள் உறுப்பினர்களாக உள்ள சர்வதேச சூரிய ஆற்றல் கூட்டமைப்பு 2015 ஆம் ஆண்டில், பாரிஸ் பருவநிலை மாற்ற மாநாட்டின் போது இந்தியாவினால் முன்மொழியப்பட்டு தொடங்கப்பட்ட அமைப்பாகும். இதன் தலைமையிடம் ஹரியானா மாநிலம் குருகிராமில் (Gurugram) அமைந்துள்ளது.

பொருளாதாரம்

  • ☞ கே.வி.காமத் குழுவின் (KV Kamath Committee) பரிந்துரையின் படி, கட்டுமானம், எஃகு உற்பத்தி, சாலைகள் அமைப்பு, மனை வணிகம், மொத்த வியாபாரம், ஜவுளி, ரசாயனம், நுகா்வுப் பொருள்கள், எஃகு அல்லாத உலோகங்கள், மருந்து உற்பத்தி, சரக்கு போக்குவரத்து, ஆபரண கற்கள் மற்றும் நகைகள், சிமெண்ட், ஹோட்டல்கள், உணவகங்கள், சுற்றுலா, சுரங்கம், பிளாஸ்டிக் பொருள்கள் தயாரிப்பு, வாகன தயாரிப்பு, வாகன உதிரிபாகங்கள், வாகன விநியோகஸ்தா்கள், விமானப் போக்குவரத்து, சா்க்கரை, துறைமுகம் மற்றும் அது சார்ந்த சேவைகள், கப்பல் போக்குவரத்து, கட்டட கட்டுமானத்துக்கான பொருள்கள், பெருநிறுவன சில்லறை விற்பனையகங்கள் உள்ளிட்ட 26 துறைகளில் கடன் மறுசீரமைப்புத் திட்டத்தை செயல்படுத்தலாம் என்ற கே.வி.காமத் குழுவின் பரிந்துரையை இந்திய ரிசா்வ் வங்கி ஏற்றுக்கொண்டுள்ளது.

    • ⌖வங்கிக் கடன் பெற்ற நிறுவனம் கடனை திருப்பிச் செலுத்தும் வகையில், கடன் மறுசீரமைப்புத் திட்டங்களை இறுதி செய்யும்போது அந்த நிறுவனத்தின் மொத்த நிலுவை கடன்கள், உறுதியாகத் தெரிந்த நிகர மதிப்பு, வரி- வட்டிக்கு முந்தைய வருவாய், விற்றுமுதல்-கடன் விகிதம் ஆகியவற்றை வங்கிகள் கருத்தில் கொள்ள வேண்டும்.

    • ⌖ 2020 மார்ச் 1-ஆம் தேதி நிலவரப்படி, வாராக்கடனாக அறிவிக்கப்பட்டு 30 நாள்கள் கடந்திருக்காத கடன் கணக்குகளைக் கொண்டுள்ள நிறுவனங்கள் மட்டுமே இந்த கடன் மறுசீரமைப்புக்குத் தகுதியானவை.

    • ⌖ரூ.1,500 கோடிக்கும் அதிகமான கடன் மதிப்பு கொண்ட நிறுவனங்களுக்காக இந்தக் கடன் மறுசீரமைப்புத் திட்டம் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது. மதிப்பீடு மேற்கொள்ளப்படாத துறைகள் சாா்ந்த நிறுவனங்களுக்கு வங்கிகள் தாங்களாகவே குறிப்பிட்ட மதிப்பீட்டை நிா்ணயித்துக்கொள்ளலாம்.

    • ⌖கடன் மறுசீரமைப்புத் திட்டமானது நடப்பாண்டு டிசம்பா் 31-ஆம் தேதிக்குள்ளாக அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும், அவ்வாறு அறிவிக்கப்பட்ட தேதியிலிருந்து 180 நாள்களுக்குள்ளாக அது அமல்படுத்தப்பட்டிருக்க வேண்டும் எனவும் ரிசா்வ் வங்கி கூறியுள்ளது.

கூ.தக. : கரோனா சூழலில் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிறுவனங்களுக்காக கடன் மறுசீரமைப்புத் திட்டங்களை அறிவிப்பது தொடா்பாக பரிந்துரைக்க முன்னாள் மூத்த வங்கியாளா் கே.வி.காமத் (KV Kamath) தலைமையிலான ஐந்து நபர் குழுவை ரிசா்வ் வங்கி ஆகஸ்டு 2020 ல் அமைத்தது. இதில் திவாகர் குப்தா (Diwakar Gupta), TN மனோகரன் (TN Manoharan), அஸ்வின் பாரேக் (Ashvin Parekh) மற்றும் சுனில் மேத்தா ( Sunil Mehta ) ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டிருந்தனர்.

வெளிநாட்டு உறவுகள்

  • ☞ ஜமைக்கா நாட்டுக்கான இந்திய தூதராக இந்திய வெளியுறவு பணியை சேர்ந்த மசாகுய் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

  • ☞ “இந்திரா நேவி 2.0” (INDRA NAVY – 2.0) என்ற பெயரில், இந்தியா மற்றும் ரஷியா நாடுகளுக்கிடையேயான (இரு ஆண்டுகளுக்கொருமுறை (bi-annual) நடைபெறும்) கூட்டு கடற்படைப் பயிற்சி வங்காள விரிகுடாவில் 4-5 செப்டம்பர் 2020 தினங்களில் நடைபெற்றது.

Announcement !
உரையாடலில் சேர் (1)
1 கருத்து உள்ளது
  1. Profile
    gopi
    Said: sir, i am waiting for your daily current affairs update.please upload it daily.
    sir, i am waiting for your daily current affairs update.please upload it daily.
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!