நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

புத்தொழில்களை ஊக்குவிக்க ரூ.10 லட்சம் வழங்கும் தமிழக அரசு : (நன்றி:தினமலர்)

தமிழக  அரசின், 'ஸ்டார்ட் அப் டி.என்.,' நிறுவனம், புத்தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்க, 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்குகிறது. இதற்கான தகுதியான பயனாளிகள் விரைவில் தேர்வு செய்யப்பட உள்ளனர். தமிழக அரசின் சிறு, குறு, மற்றும் நடுத்தர தொழில் துறையின் கீழ், 'டான்சிம்' எனப்படும் புத்தொழில் மற்றும் புத் தாக்க இயக்கம் செயல்ப டுகிறது. இது, 'ஸ்டார்ட் அப் டி.என்.,' என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இந்நிறுவனம், தமிழகத்தில் புத்தொழில் நிறு வனங்களுக்கு ஆதரவாக, முதலீட்டு வாய்ப்புகளை உருவாக்கி தருவது, சந்தை தொடர்புகளை ஏற்படுத்து வது உட்பட, பல்வேறு உதவிகளை செய்கிறது. அதன்படி, தமிழக புத் தொழில் ஆதார நிதி திட் டத்தின் கீழ், தொடக்க நிலையில் உள்ள புத் தொழில் நிறுவனங்களுக்கு உதவும் வகையில், 10 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்ப டுகிறது. இது வேளாண்மை, கால்நடை வளர்ப்பு, கிராமப்புற தவிர, சிறு தொழிற்சாலைகள், போன்ற ஊரக வாழ்வாதார மேம்பாடு சார்ந்து இயங் கும் புத்தொழில் நிறுவ னங்களுக்கு, 15 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படுகிறது. இதன் வாயிலாக, புதிய வேலைவாய்ப்புகள் வாகும் என்பதால், கிராமங் களில் இருந்து நகரங்களுக்கு இளைஞர்கள் இடம்பெயர்வதும் தடுக்கப்படும். 

மேலும், பெண்களை முதன்மையான பங்குதாரர் களாக கொண்டு இயங்கும் புத்தொழில் நிறுவனங்களுக்கு, 15 லட்சம் ரூபாயும்; காலநிலை மாற்ற மேலாண்மை, நிலைத்த நீடித்த வளர்ச்சி போன்ற வற்றை உள்ளடக்கிய பசுமை தொழில்நுட்பம் தொடர்பான புத்தொழில் நிறுவனங்களுக்கு, 15 லட் சம் ரூபாயும் நிதியுதவியாக வழங்கப்படுகிறது.  


Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!