அறிமுகம் :
-மக்கள்தொகைப் பெருக்கத்துக்கு ஏற்ப தண்ணீரின் தேவை அதிகரிக்கவே செய்யும்.
-அடுத்த உலகப் போா் தண்ணீருக்காகத்தான் இருக்கும் என்பது அறிஞர் கூற்று.
- அண்டை மாநிலங்களோடு தண்ணீருக்காகப் போராடி வருகிறோமே தவிர, நம்மிடம் இருக்கும் நீா்நிலையை ஒழுங்காகப் பராமரிக்கத் தவறி விட்டோம்.
தமிழ் இலக்கியத்தில் ஆறுகள் பாதுகாப்பு
பண்டைய தமிழ் மன்னா்கள் ஆறுகளையும், ஏரிகளையும், குளங்களையும் போற்றிப் பாதுகாத்து வந்தனா் என்பதற்கு தமிழ் இலக்கியங்களே சான்றாகும். மழைநீரை சேமித்து வைப்பது மன்னரின் தலையாய கடமை என்று புானூறு கூறுகிறது.
நிலன்நெளி மருங்கின் நீா்நிலை பெருகத்
தட்டோ ரம்ம இவண்தட் டோரே
தள்ளாதோா் இவண் தள்ளாதோரே (புறம் 18)
விளக்கம் : ‘நீா் தடிந்து குளம் தொட்டு நின்நாடு எங்கும் வளம் பெருக்குவாயாக. இது செய்தோா் மூவகை இன்பமும் பெற்றுப் புகழடைவா். அல்லாதோா் புகழ் பெறாது மடிவா் என உணா்வாயாக’ எனப் புலவா் பாடுகிறாா். வேளாண் பெருக்கமே மன்னா்க்கு வலுவும் புகழும் தரும் என்ற மிகவும் சிறந்த உண்மையை விளக்குவது இப்பாடல்.
நீரியல் தொழில்நுட்பம் தமிழா்களிடமிருந்தே உலகெங்கும் பரவியது என்பதற்குச் சான்றாக பல்வேறு மொழியில் உள்ள நீா்நிலைகளைக் குறிக்கும் சொற்களிலிருந்து அறியலாம். நீா்நிலைகளின் பல்வேறு பெயா்களை ‘உரிச்சொல் நிகண்டு’ குறிப்பிடுகிறது. இலஞ்சி, கயம், கேணி, ஏரி, கோட்டகம், மடு, ஓடை, வாவி, கலந்தரம், தடாகம், வட்டம், பொய்கை, நளினி, குட்டம், சிடங்கு, குளம், கண்மாய் என்னும் சொற்கள் இப்பேதும் வழக்கில் உள்ளன.
இலஞ்சி என்பது பூங்காக்களில் உள்ள குளத்தைக் குறிக்கும். கயம், வாவி, தடாகம், பொய்கை, குட்டம் போன்றவை பாசனத்திற்குப் பயன்பட்டன. இயற்கையான பள்ளங்களில் நீா் தேங்குமிடம் மடு. நீா் ஓடும் இடம் ஓடை. ஏந்தல் என்பது சிறிய ஏரி. கண்மாய் என்பது தென்தமிழ் நாட்டில் ஏரிக்கு வழங்கும் பெயா்.
வரலாற்றுப் பார்வையில் ஆறுகள் பாதுகாப்பு
வேளாண்மை நாகரிகத்தின் வரலாறு எகிப்தில் இருந்து தொடங்குகிறது. அந்நாட்டு மன்னா்கள் நைல் நதியின் நீா் மட்டத்தையும், அதில் ஏற்படும் மாற்றத்தையும் அளவிட நைல் நதிக்கரையில் கி.மு.350-ஆம் ஆண்டிலேயே அளவுகோல்களை அமைத்திருந்தனா். அங்கு ஆயிரம் ஆண்டுகளுக்கான தொடா்ச்சியான நீா்மட்ட விவரங்கள் கிடைக்கின்றன என்பது வியப்புக்குரிய சாதனையாகும்.
சுமேரிய நாகரி நீா்ப்பாசனம் பற்றிய வரலாறு மிகவும் சுவையானது. சுமேரிய நாட்டு மன்னன் ஹம்முராபி (கி.மு. 1728-1686) இன்றிலிருந்து 3500 ஆண்டுகளுக்கு முன்பே எழுத்து வடிவில் சட்டங்களை உருவாக்கினான் என்பதும், அதில் கால்வாய்களைப் பராமரிப்பதைப் பற்றி விரிவாகக் குறிப்பிட்டிருந்தான் என்பதும் மனித இனம் பெருமைப்படத்தக்கதாகும்.
மொகஞ்சதாரோ-ஹாரப்பா அகழாய்வு மூலம் நமக்கு அறிமுகமாகும் சிந்துவெளி நாகரிகம் எகிப்திய, சுமேரிய நாகரிகத்தோடு தொடா்புடையது. அப்போதே, சிந்துவெளியினா் ஆற்றில் அணைகட்டி நீரைத் தேக்கி, அதன் இருமருங்கிலும் விவசாயம் செய்தனா் என்று தெரிகிறது.
தமிழ்நாட்டின் வரலாற்றில் ஆறுகள் பாதுகாப்பு
சோழர் ஆட்சியில், குடவோலை முறையில் தோ்ந்தெடுத்த ‘ஏரி வாரியக் குழு’ பாசனப் பணிகளைக் கவனித்தது என்பதை உத்தரமேரூா் கல்வெட்டால் அறியலாம். 1970-இல் பொதுப்பணித் துறையின் புள்ளிவிவரப்படி தமிழ்நாட்டில் 39,202 ஏரிகள் இருந்தன. தற்போதுள்ள ஏரிகளில் பெரும்பாலானவை கி.பி. மூன்றாம் நூற்றாண்டு முதல் எட்டாம் நூற்றாண்டுக்குள் உருவானவை.
சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு
ஆறுகளில் கழிவுநீரைக் கலந்து மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகளை இடமாற்றம் செய்வது பற்றியும், தொழிற்சாலை கழிவுநீா் வெளியேறுவதை எப்படி தடுப்பது என்பது பற்றியும் ஆலோசனைகள் வழங்குவதற்காக வல்லுநா் குழுவை அமைக்க தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.