Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

TNPSC Current Affairs 1 May 2024

 தமிழ்நாடு

  • ஊட்டி, கொடைக்கானல் செல்வோருக்கு இ - பாஸ் கட்டாயம் என  சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மே 7 ம்தேதி முதல் இந்த நடைமுறை அமல்படுத்தப்பட வேண்டும் என நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட கலெக்டர்களுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். 

 இந்தியா

  • மருத்துவ காப்பீடு எடுப்பதற்கான உச்ச வயது வரம்பு 65-ஐ இந்திய காப்பீட்டு ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையம் (Insurance Regulatory and Development Authority (IRDAI)) ரத்து செய்துள்ளது.
    • இந்த உச்ச வயது வரம்பு நீக்க நடைமுறை 1 ஏப்ரல் 2024 முதல்  நடைமுறைக்கு வந்துள்ளது என்று IRDAI தெரிவித்துள்ளது.
    • முந்தைய வழிகாட்டுதலின்படி, ஒருவர் 65 வயது வரை மட்டுமே புதிய மருத்துவ காப்பீட்டை எடுக்க முடியும். ஆனால், புதிய நடைமுறைபடி, வயது வித்தியாசமின்றி யாா் வேண்டுமானாலும் புதிய மருத்துவ காப்பீட்டை எடுத்துப் பலன் அடையலாம்.

உலகம்

  • உக்ரைனுக்கு 100 மில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ உதவிகள் வழங்கப்படும் என ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.

கூ.தக. : ரஷியாவின் தொடர் எச்சரிக்கைகளை மீறி நேட்டோ அமைப்பில் இணைவதற்கான முயற்சிகளை உக்ரைன் தொடர்ந்து முன்னெடுத்தது. இதன்காரணமாக கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி  மாதம் உக்ரைனை ரஷியா தாக்கியதைத் தொடர்ந்து போர் கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

விருதுகள்

  • ஸ்பெயினின் மர்ஷியாவை சேர்ந்த சட்டப் பேராசிரியர் தெரேசா விசெண்டேவுக்கு(61) 2024-ஆம் ஆண்டுக்கான ’பசுமை நோபல்’ விருது வழங்கப்பட்டுள்ளது.     
    • ஸ்பெயினின் தென்கிழக்கு கடற்கரை நகரமான மர்ஷியாவில் சிறிய கடல் என்றழைக்கப்படும் ’மார் மெனோர்’ என்னும் உப்புநீர் தடாகத்தை பாதுகாக்க தனிச் சட்டம் இயற்றப் போராடியதற்காக அவருக்கு உலகின் உயரிய விருதுகளில் ஒன்றாகக் கருதப்படும் ‘கிரீன் நோபல்’ (கோல்டுமேன் சுற்றுச்சூழல் பரிசு - பசுமை நோபல்) விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய தினங்கள்

  • பாரதிதாசனின் 134 வது பிறந்த தினம் - 29.04.2024 
  • வேலையில் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்திற்கான உலக தினம் (World Day for Safety and Health at Work)  - ஏப்ரல் 28 
  • சர்வதேச நடன தினம் (International Dance Day) - ஏப்ரல் 29  
    • கூ.தக. : உலக நடன தினத்தை ஆண்டுதோறும் கடைபிடிப்பது சர்வதேச நாடக நிறுவனம் (International Theatre Institute (ITI)) மூலம் நடத்தப்படுகிறது, இது உலகின் மிகப்பெரிய கலை நிகழ்ச்சிகளுக்கான அமைப்பாகும்.
    • யுனெஸ்கோ மற்றும் சர்வதேச நாடக வல்லுனர்களால் 1948 இல் நிறுவப்பட்ட சர்வதேச நாடக நிறுவனத்தின் தலைமையகம் பிரான்சின் பாரிஸில் அமைந்துள்ளது.

நியமனங்கள் 

  • இந்திய கடற்படைத் தளபதியாக (நாட்டின் 26-வது கடற்படைத் தளபதியாக) தினேஷ் குமார் திரிபாதி  30.04.2024 அன்று பொறுப்பேற்றுக்கொண்டார். 

அறிவியல் தொழில்நுட்பம் 

  • கோவிஷீல்டு தடுப்பூசியால், மிக அரிய வகையாக டி.டி.எஸ். ( TTS - Thrombosis with Thrombocytopenia Syndrome) என்ற  ரத்தம் உறைதல், ரத்தத் தட்டுக்களின் (பிளேட்லட்) அளவு குறைதல் போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக  அதனை உருவாக்கிய ஆஸ்ட்ரஜெனக்கா நிறுவனம் பிரிட்டன் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. 
    • கூ.தக. :  இந்தியாவில், கொரோனா நோய்த்தொற்று பரவியபோது,  கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசி போட்டு கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்தது.
    • கோவேக்சின் தடுப்பூசியை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து ஐதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்தது. இதன் செயல்திறன் 81 சதவீதம் என தெரிவிக்கப்பட்டது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஆஸ்டிராஜெனேகா நிறுவனம் இணைந்து கண்டுபிடித்த கோவிஷீல்டு தடுப்பூசியை புனேவில் உள்ள சீரம் நிறுவனம் தயாரித்தது. இதன் செயல்திறன் 70 சதவீதம் என அப்போது தெரிவிக்கப்பட்டது.

சுற்றுசூழல் 

  • நீலகிரி வரையாடு கணக்கெடுப்பு : கேரள வனத் துறை, இந்திய வனவிலங்கு நிறுவனம் மற்றும் சா்வதேச இயற்கை பாதுகாப்பு ஒன்றியத்துடன் (International Union for Conservation of Nature (IUCN)) இணைந்து ஒருங்கிணைந்த நீலகிரி வரையாடு கணக்கெடுப்பை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது. இந்த கணக்கெடுப்பு 1-3 மே 2024 தினங்களில் நடைபெறும். இதற்காக நீலகிரி வரையாடுகளின் வாழ்விடமானது 13 வனப் பிரிவுகளாகவும், 140 தொகுதிகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. இதில், அக்காமலை கிராஸ் ஹில்ஸ் மற்றும் முக்குருத்தி தேசியப் பூங்காக்கள் முறையே கேரளத்தின் இரவிகுளம் மற்றும் சைலண்ட் வேலி தேசியப் பூங்காக்களுடன் எல்லையைப் பகிா்ந்து கொள்கின்றன.
    • கூ.தக. : நீலகிரி வரையாடு மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கே உரிய சிறப்பினங்களில் ஒன்றாகும். இவை 4000 அடி உயரத்திற்கு மேலேயுள்ள மலைமுடிகளில் மட்டும் வாழும் பண்புடையவை. மிகவும் அழிந்துவரும் இனங்களில் ஒன்றான இவ்விலங்கு தமிழ் நாடு மற்றும் கேரள மாநிலங்களில் ஒரு சில குறிப்பிட்டப் பகுதிகளில் மட்டும் காணப்படுகிறது. 
    • வரையாடு தமிழ் நாட்டின் மாநில விலங்கு என்பதும் தமிழ்நாட்டில் சில நூறு வரையாடுகளே எஞ்சியுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கவை.
  • 26வது உலக எரிசக்தி மாநாடு (26th World Energy Congress) நெதர்லாந்தின் ரோட்டர்டாமில் 22-25 ஏப்ரல் 2024 தினங்களில், 'மக்கள் மற்றும் கிரகத்திற்கான ஆற்றலை மறுவடிவமைப்பு செய்தல்’ (Redesigning energy for people and planet) என்ற கருப்பொருளில் நடைபெற்றது.  இதனை, லண்டனைத் தலைமையிடமாகக் கொண்ட உலக எரிசக்தி கவுன்சில் (World Energy Council (WEC)) நடத்தியது. 

உலக எரிசக்தி கவுன்சில் பற்றி …

1923 இல் நிறுவப்பட்ட உலக எரிசக்தி கவுன்சில் (World Energy Council (WEC)) என்பது நிலையான எரிசக்தி தீர்வுகளை ஊக்குவிப்பதிலும், உலகளாவிய ஆற்றல் சவால்களை எதிர்கொள்வதிலும் கவனம் செலுத்தும் ஒரு சர்வதேச அமைப்பாகும். இதன் தற்போதைய பொதுச்செயலாளர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் ஏஞ்சலா வில்கின்சன் ஆவார். 

உலக எரிசக்தி கவுன்சில் இந்தியா (WEC India) என அழைக்கப்படும் இந்திய பிரிவு 1924 இல் WEC இன் உறுப்பினரானது.  இந்திய அரசின், மின் அமைச்சகத்தின் ஆதரவின் கீழ் செயல்படுகிறது.  இந்த அமைப்பின் தற்போதைய தலைவர் பங்கஜ் அகர்வால் மற்றும் அதன் தலைமையகம் புது டெல்லியில் உள்ளது.  

விளையாட்டு

  • FIDE கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற தமிழக வீரர்  கிராண்ட் மாஸ்டர் குகேஷ் (வயது 17).
    • இந்தத் தொடரை வென்றதன் மூலம் உலக செஸ் சாம்பியன்ஷிப் செஸ் போட்டியில் சீனாவில் டிங் லிரெனை எதிர்கொள்ள குகேஷ் தகுதி பெற்றுள்ளார். 
    • மேலும் இந்தத் தொடரை வென்று இளம் வயதில் கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடரை வெல்லும் நபர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். 
    • மூத்த செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்திற்குப் பின் செஸ் கேண்டிடேட்ஸ் தொடரை வெல்லும் இந்திய வீரர் குகேஷ் ஆவார்.
    • தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள்  திரு.குகேஷ் -ஐப் பாராட்டி உயரிய ஊக்கத்தொகையாக ரூபாய் 75 இலட்சத்திற்கான காசோலை மற்றும் கேடயத்தையும் வழங்கினார்.  ஏற்கனவே, தமிழ்நாடு அரசின் சார்பில் 15 இலட்சம் ரூபாய் இப்போட்டியில் பயிற்சி பெறுவதற்காக அவருக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
    • கூ.தக. :  FIDE Candidates தொடர் 2024 கனடாவில் நடைபெற்றது. இதில் சாம்பியனுக்கான இறுதி போட்டியின் கடைசி சுற்றில் இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் குகேஷ் (வயது 17) அமெரிக்காவின் நகமுராவை எதிர்கொண்டார்.  போட்டியின் முடிவில் 9 புள்ளிகள் பெற்று குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றார். நகமுரா 8.5 புள்ளிகள் மட்டுமே பெற்றிருந்தார்.

 

தெரிந்துகொள்ளுங்கள்

  • பவிஷ்யா போர்டல் (Bhavishya Portal) என்பது ஒருங்கிணைந்த ஆன்லைன் ஓய்வூதிய அனுமதி மற்றும் பணம் செலுத்துதல் கண்காணிப்பு அமைப்பாகும் (integrated online Pension Sanction & Payment Tracking system). இது, அனைத்து மத்திய அரசு துறைகளுக்கும் 1 ஜனவரி 2017 முதல் கட்டாயமாக்கப்பட்டது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot