Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

TNPSC Current Affairs 11 May 2024

தமிழ்நாடு

ராட்வெய்லர் உள்ளிட்ட 23 வகையான வெளிநாட்டு கலப்பு மற்றும் கலப்பற்ற நாய் இனங்களை தடை செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்தியா

கேரள மாநிலத்தில் அரளிப்பூவை மென்றுதின்ற இளம்பெண் உயிரிழந்ததையடுத்து அந்த மாநிலத்தில் உள்ள கோயில்களில் அரளிப் பூக்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

உலகம்

வடகொரியாவில் ‘கோயபல்ஸ்’ என்று அழைக்கப்படும், வடகொரிய அதிபர் கிம் குடும்ப பிரச்சார வியூக ஆலோசகர் கிம் கி நாம் (94) உயிரிழந்தார்.  

1966 முதல் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் குடும்பத்துக்கு மூன்று தலைமுறைகளாக பிரச்சார வியூகங்களை வகுத்துக் கொடுத்தவர் கிம் கி நாம். கிம்மின் தாத்தா கிம் Il சுங் காலம் தொடங்கி, கிம்மின் அப்பா கிம் ஜாங் இல் மற்றும் தற்போதை அதிபர் கிம் ஜாங் உன் வரை கிம் கி நாம் பிரச்சார ஆலோசனையை வழங்கியுள்ளார்.


பாலஸ்தீனத்தை உறுப்பு நாடாக அங்கீகரிக்க வேண்டி ஐநா பாதுகாப்பு கவுன்சிலை மீண்டும் பரிசீலிக்க கோரும் தீர்மானம் ஐநா பொதுச் சபையில் நிறைவேறியது.  அரபு நாடுகள் கூட்டமைப்பு  கொண்டுவந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில், 193 நாடுகள் உறுப்பினர்கள் கொண்ட ஐ.நா சபையில்,  இந்தியா உள்ளிட்ட 143 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. இந்த தீர்மானத்திற்கு அமெரிக்கா, இஸ்ரேல், ஹங்கேரி, அர்ஜெண்டினா, பப்புவா நியூ கினியா உள்ளிட்ட 9 நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து எதிராக வாக்களித்தன. மேலும், 25 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தன. அதிக பெரும்பான்மை ஆதரவின் மூலம், பாலஸ்தீனம் ஐ.நா சபையில் முழு நேர உறுப்பினராக இருக்கவிருக்கிறது. 

கூ.தக. : தற்போது, பாலஸ்தீனம் ஐக்கிய நாடுகள் அவையில் கடந்த 2012-ம் ஆண்டு முதல் உறுப்பினர் அல்லாத பார்வையாளராக மட்டும் உள்ளது.  

வெளிநாட்டு உறவுகள்

மாலத்தீவில் நிலை நிறுத்தப்பட்டிருந்த இந்திய ராணுவ படைகள் முற்றிலுமாக வெளியேறியது. இந்தியா பரிசளித்த இரண்டு ஹெலிகாப்டர்கள் மற்றும் டோர்னியர் விமானங்களை இயக்கவும், பராமரிக்கவும் இந்திய ராணுவ வீரர்கள் மாலத்தீவில் நிறுத்தப்பட்டு இருந்தனர். மாலத்தீவில் கடந்த ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் சீன ஆதரவாளராக அறியப்படும் முகமது முய்சு வெற்றி பெற்றதையடுத்து, இந்திய இராணுவ வீரர்களை வெளியேறுமாறு கோரினதையடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

முக்கிய தினங்கள்

தேசிய தொழில்நுட்ப தினம் (National Technology Day) - மே 10 

இந்தியா நடத்திய வெற்றிகரமான அணுசக்தி சோதனையை நினைவுகூரவும், நாட்டின் தொழில்நுட்ப முன்னேற்றத்தில் முக்கியப் பங்கு வகித்த விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களின் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை அங்கீகரித்து கௌரவிப்பதற்கும் தேசிய தொழில்நுட்ப தினம் கொண்டாடப்படுகிறது.


சர்வதேச செவிலியர் தினம் (International Nurses Day)  - மே 12 

நியமனங்கள் 

இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய செயல் இயக்குநராக ஆர். லட்சுமிகாந்த் ராவ் நியமிக்கப்பட்டுள்ளார்.

அறிவியல் தொழில்நுட்பம் 

சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை (International Space Station)    சென்னை உள்பட உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் 10.5.2024 அன்று  முதல்   14.5.2024 ஆம் தேதி வரை  பூமியில் இருந்தபடியே வெறும் கண்களால் பார்க்க முடியும் என்று அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் (நாசா) தெரிவித்துள்ளது.

கூ.தக. : 

  • சர்வதேச விண்வெளி நிலையம் (ISS) என்பது NASA, Roscosmos, ESA, JAXA மற்றும் CSA உட்பட பல விண்வெளி நிறுவனங்களை உள்ளடக்கிய ஒரு கூட்டுத் திட்டமாகும். இது மைக்ரோ கிராவிட்டி ஆராய்ச்சி ஆய்வகம் மற்றும் ஆய்வகமாக செயல்படுகிறது, 

  • 1998 ல் கட்டுமானம் தொடங்கப்பட்டு,  2000 ல் முதல் ஆராய்ச்சிக் குழுவினர் குடியேறினர். 

  • பூமியிலிருந்து 250 முதல் 420 கிலோமீட்டர் உயரத்தில் சுற்றுப்பாதையில் அமைந்துள்ளது.

  •  மணிக்கு 27,700 கிலோமீட்டர் வேகத்தில் பூமியைச் சுற்றி வருகிறது.

  •  பூமியைச் சுற்றி 92 நிமிடங்களில் ஒருமுறை சுற்றுகிறது.

  • 18 க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த விண்வெளி வீரர்கள் இதில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். 

  • அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், ஐரோப்பிய விண்வெளி நிறுவனம், கனடா, பிரேசில் ஆகியவை முக்கிய பங்களிப்பாளர்கள்.


3டி பிரிண்டிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ”PS4 engine” எனப்படும் திரவ ராக்கெட் எஞ்சினை  (3D-printed liquid rocket engine) வெற்றிகரமாக சோதித்து இஸ்ரோ (Indian Space Research Organisation (ISRO))  சாதனை படைத்துள்ளது. பிஎஸ்எல்வி (Polar Satellite Launch Vehicle (PSLV))  ராக்கெட்டின் மேல் நிலையில் பிஎஸ்4 இன்ஜின் (PS4 engine)   பயன்படுத்தப்படுகிறது. நைட்ரஜன் டெட்ராக்சைடு மற்றும் மோனோ மெத்தில் ஹைட்ரேசின் கலவையை எரிபொருளாகப் பயன்படுத்துவதன் மூலம் இயந்திரம் செயல்படுகிறது, இது பூமியில் சேமிக்கப்பட்டு தேவைப்படும்போது இயந்திரத்திற்குள் செலுத்தப்படுகிறது. இந்த தொழில்நுட்பத்தை இஸ்ரோவின் ஒரு பகுதியான லிக்விட் ப்ராபல்ஷன் சிஸ்டம்ஸ் சென்டர் (எல்பிஎஸ்சி) உருவாக்கியுள்ளது.

  

மெயின்ஸ் கட்டுரை   

 இடஒதுக்கீட்டில் 50% வரம்பை நீக்க வேண்டுமா? 

அரசியலமைப்பு விதிகள் 15 மற்றும் 16

அரசியலமைப்புச் சட்டம் சமூக நீதி மற்றும் சமத்துவத்தை அடிப்படை உரிமையாக உறுதிப்படுத்த முயல்கிறது. அரசியலமைப்பு விதிகள் 15 மற்றும் 16 மாநில நடவடிக்கைகளில் அனைத்து குடிமக்களுக்கும் சமத்துவத்தை உறுதிப்படுத்துகிறது. கல்வி நிறுவனங்கள் மற்றும் பொது வேலை வாய்ப்புகளும் இதில் அடங்கும். சமூகநீதியை மேம்படுத்த, இந்த அரசியலமைப்பு விதிகள் சிறப்பு விதிகளை உருவாக்க மாநிலத்தை அனுமதிக்கின்றன. Read More . . .




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot