Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

TNPSC Current Affairs 12,13 May 2024

 தமிழ்நாடு

நாகப்பட்டினம் மற்றும் காங்கேசன்துறை (இலங்கை) இடையே பயணிகள் கப்பல் சேவை தொடக்கம் : 

  • இலங்கையில் நாகப்பட்டினம் மற்றும் காங்கேசன்துறை இடையேயான பயணிகள் கப்பல் சேவை, கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்குப் பிறகு அக்டோபர் 13, 2023 இல் மீண்டும் தொடங்கப்பட்டு சில நாட்களுக்குப் பிறகு நிறுத்தப்பட்டது, மறுபடியும் மே 13 அன்று மீண்டும் தொடங்கியுள்ளது.  

  • கடந்த ஆண்டு அக்டோபர் 14 ஆம் தேதி, நாகப்பட்டினம் மற்றும் காங்கேசன்துறை இடையேயான சேவையை பிரதமர் நரேந்திர மோடி கிட்டத்தட்ட கொடியசைத்து தொடங்கி வைத்தார். KPVS Private Limited இன் கீழ் ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவால்  (Shipping Corporation of India ) இயக்கப்படும் HSC Cheriyapani, பருவமழை காரணமாக ஒரு வாரத்திற்குப் பிறகு சேவையை நிறுத்தியது. 

  • ஆறு மாத இடைவெளிக்குப் பிறகு, சேவை மீண்டும் தொடங்க உள்ளது. இந்த முறை, சென்னையைச் சேர்ந்த, IndSri Ferry Services Private Limited என்ற டிராவல் ஆபரேட்டர், 'சிவகங்கை' (‘Sivagangai’) என்ற பயணிகள் கப்பல் மூலம்  இந்த சர்வதேச பயணிகள் கப்பல் சேவையை கையாளும். 

  • “இந்தச் சேவை தினமும் வழங்கப்படும்.  sailindsri.com  என்ற இணையதளத்தின் மூலம்   டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம். 


 

உலகம்

ரஷ்யாவின் பிரதமராக மைக்கேல் விளாடிமிரோவிச் மிஷுஸ்டினை (58) மீண்டும் நியமிக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் முன்மொழிந்துள்ளார்.


 முக்கிய தினங்கள்

சர்வதேச செவிலிகள் தினம் - மே 12 

செவிலியர்களின் முன்னோடியான பிளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையாரின் பிறந்தநாளான மே 12-ந் தேதி ஆண்டு தோறும் உலக செவிலியர் நாளாகக் கொண்டாடப்படுகிறது. கிரீமியப் போரின்போது காயமடைந்த வீரர்களைப் பராமரிப்பதில் நைட்டிங்கேல் அம்மையாரின் தன்னலமற்ற அர்ப்பணிப்பும், துணிவும் இன்றைய செவிலியர் சேவைக்கு அடித்தளமிட்டது. அதை நினைவுகூரும் விதமாக இந்நாள் கொண்டாடப்படுகிறது.


அன்னையர் தினம் (Mother's Day)  - மே 12


இரண்டாம் உலகப் போரின்போது உயிர் இழந்தவர்களுக்கான நினைவு மற்றும் நல்லிணக்க நேரம்  (Time of Remembrance and Reconciliation for Those Who Lost Their Lives during the Second World War) –  மே 8-9 


நியமனங்கள் 

மேகாலய மாநிலத்தின் முதல் பெண்  காவல்துறைத் தலைவராக (DGP)  மூத்த ஐபிஎஸ் அதிகாரி இடாஷிஷா நோங்ராங் (Idashisha Nongrang) நியமிக்கப்பட்டுள்ளார். 


மருத்துவமனைகள் மற்றும் சுகாதார சேவை வழங்குநர்களுக்கான தேசிய அங்கீகார வாரியத்தின் (National Accreditation Board for Hospitals and Healthcare Providers (NABH)) தலைவராக  ரிஸ்வான் கொய்தா நியமிக்கப்பட்டுள்ளார்.


அறிவியல் தொழில்நுட்பம் 

வெஸ்ட் நைல் காய்ச்சல்   (West Nile Virus)  : கேரளாவில் வெஸ்ட் நைல் வைரஸ் (West Nile Virus) என்ற கொசுக்களால் பரவும் வைரஸ் ஒன்றால் காய்ச்சல் பரவி வருவதாக கேரள அரசு சமீபத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளது.

  • வெஸ்ட் நைல் வைரஸ் என்னும் இந்த வைரஸ் 1937ஆம் ஆண்டு முதன் முதலில் உகாண்டாவில் உள்ள வெஸ்ட் நைல் என்ற மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
  • இந்த வெஸ்ட் நைல் வைரஸ் என்பது ‘கியூலக்ஸ்’ என்ற ஒரு வகை கொசுவால் பரவும் நோய் எனவும், இந்த வைரஸ் பறவைகளிடம் இருந்து கொசுக்களுக்கும், பிறகு கொசுக்கள் மூலம் மனிதர்களுக்கும் பரவுகிறது.   
  • உலக சுகாதார நிறுவனத்தின்படி, வைரஸ் தொற்றுள்ள ஒரு பறவையின் ரத்தத்தில் இருந்து கொசுக்களுக்கு அந்த வைரஸ் பரவுகிறது. கொசுக்களின் உமிழ்நீர் சுரப்பிக்குள் நுழையும் இந்த வைரஸ், பின்னர் அதே கொசு மனிதர்களைக் கடிக்கும்போது அவர்களுக்குள்ளும் நுழைந்து பல்கிப் பெருகுகிறது.
  • அதேநேரம் இந்த வைரஸ் வேறு பாதிக்கப்பட்ட மிருகங்களின் ரத்தம் மனிதர்களுக்குள் ஏதோ ஒரு வகையில் செல்லும்போதும் மனிதர்களைப் பாதிக்கலாம். ஆனால், ஒரு மனிதரில் இருந்து மற்றொரு மனிதருக்கு நேரடியாகப் பரவாது. பெரும்பாலும் காடுகள் மற்றும் நீர்நிலைகள் அதிகமுள்ள சூழல்களில் இந்தக் கொசுக்கள் அதிகம் உருவாகி, மக்களைத் தாக்குகின்றன. 


பன்றியின் சிறுநீரகம் பொருத்தப்பட்ட உலகின் முதல் நோயாளி ரிக் ஸ்லேமேன், அறுவை சிகிச்சை முடிந்த இரண்டு மாதங்களில் இறந்துள்ளார்.

கடந்த மார்ச் 2024 மாதம், அமெரிக்கவின் மசாச்சுசெட்ஸ் பொது மருத்துவமனையில், 62 வயதான ரிக் ஸ்லேமேன் என்பவருக்கு, சிறுநீரகம் மிக மோசமாக பாதிப்படைந்ததால், உலகிலேயே முதல்முறையாக மரபணு மாற்றப்பட்ட பன்றியின் சிறுநீரகம் அறுவை சிகிச்சையின் மூலம் பொருத்தப்பட்டது. பன்றியின் சிறுநீரகத்தில் மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும் மரபணுக்களை நீக்கி, மனித உடலுக்கு இணக்கமாக செயல்படுவதற்கு மனித மரபணுக்களை சேர்த்து இந்த சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. ஒரு உயிரினத்தின் உறுப்புகள் அல்லது திசுக்களை வேறொரு உயிரினத்திற்கு மாற்று அறுவை சிகிச்சை மூலம் பொறுத்தும் வேறு இன உறுப்பு உறுப்பு மாற்று சிகிச்சை முறையில் இந்த சாதனை ஒரு மைல்கல்லாகப் பார்க்கப்பட்டது.


ஜப்பானில் 6ஜி சோதனை :  ஜப்பான் நாட்டில் 6ஜி அலைக்கற்றை உபயோகிக்கக் கூடிய கருவியை சோதித்து பார்த்துள்ளனர்.டோகோமோ, என்டிடி கார்பரேஷன், என்இசி கார்பரேஷன் மற்றும் புஜிட்சூ ஆகிய ஜப்பானின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனங்களின் கூட்டு முயற்சியால் இந்த 6ஜி சாத்தியமாகியுள்ளது. தற்போதுள்ள 5ஜியின் வேகத்தை விட 20 மடங்கு  அதிவேகமாக 6ஜி  தொழில்நுட்பத்தின் மூலம் ஒரு நொடிக்கு 100ஜிபி அளவில் தரவு பரிமாற்றம் செய்ய முடியும். 


கவாசாகி நோய் (Kawasaki disease)  :   கவாசாகி நோயால் பாதிக்கப்பட்ட இரண்டு பெண் குழந்தைகளுக்கு கோவை மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் வெற்றிகரமாக சிகிச்சை அளிக்கப்பட்டது. 

கவாசாகி நோய், ஒரு அரிய இதய நோயாகும். பெரும்பாலும், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பாதிக்கும் இந்த நோயானது அதிக காய்ச்சல் மற்றும் வீக்கமடைந்த இரத்த நாளங்களுக்கு வழிவகுக்கிறது. கரோனரி தமனிகளை குறிவைத்து குழந்தைகளில் இதய நோய்க்கு இது ஒரு குறிப்பிடத்தக்க காரணம். காய்ச்சல், சொறி, வீங்கிய கைகள் மற்றும் கால்கள் மற்றும் வீக்கமடைந்த சளி சவ்வுகள் ஆகியவை அறிகுறிகளாகும்.  

சுற்றுசூழல்

19வது காடுகளுக்கான ஐநா மன்றம்  (United Nations Forum on Forests (UNFF19)) 7.5.2024 அன்று  நியூயார்க்கில் கூடியது. நியூயார்க்கை தலைமையிடமாகக் கொண்டு 2000 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த அமைப்பானது, ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக கவுன்சிலின் (ECOSOC)   கீழ் செயல்படுகிறது. இந்த அமைப்பில் இந்தியா ஒரு நிறுவன உறுப்பினராக உள்ளது. 


விளையாட்டு

உலகின் நம்பர் 1 வீரரான மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்திய இந்தியாவின் பிரக்ஞானந்தா : போலந்தின் வாா்ஸா நகரில் சூப்பா்பெட் ரேபிட் மற்றும் பிளிட்ஸ் போட்டியில் இரண்டாவது சுற்றில் உலகின் நம்பர் 1 வீரர் காா்ல்ஸனை இந்திய வீரர் பிரக்ஞானந்தா வீழ்த்தினாா்.  இத்தோல்வியின் மூலம்  தொடருக்கான தரவரிசையில் காா்ல்ஸன் 2ம் இடத்துக்கு தள்ளப்பட்டார். சீனாவின் வெய் இ 20.5 புள்ளிகளுடன் முதலிடத்திலும், காா்ல்ஸன் 18 புள்ளிகளுடன் இரண்டாமிடத்திலும், பிரக்ஞானந்தா 14.5 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனா். இந்தியாவின் அா்ஜுன் எரிகைசி நான்காம் இடத்திலும், டி. குகேஷ் 9.5 புள்ளிகளுடன் பத்தாம் இடத்திலும் உள்ளனா்.


உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தை 29-ஆவது முறையாக ஏறி அதிகமுறை எவரெஸ்ட் சிகரத்தை ஏறியவா் என்ற தனது முந்தைய சாதனையைத் தானே முறியடித்துள்ளாா் நேபாளத்தின் புகழ்பெற்ற மலையேற்ற வீரரான கமி ரீட்டா(54).


நெதா்லாந்தில் நடைபெற்ற தடகள போட்டியில் இந்திய ஓட்டப் பந்தய வீராங்கனை ஜோதி யாராஜி தங்கப் பதக்கம் வென்றாா்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.