தமிழ்நாடு
மத்திய அரசு பணிக்கு இட மாற்றம் செய்யப்பட்டுள்ள தமிழ்நாடு காவல்துறையை சேர்ந்த 2 பெண் டி.ஐ.ஜி.கள் : தமிழக காவல்துறையில் பணியாற்றி வரும் ரம்யா பாரதி மத்திய விமான பாதுகாப்பு பிரிவிற்கும் பொன்னி மத்திய தொழிற் பாதுகாப்பு படைக்கும் இட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறைக்கும், பெற்றோருக்கும் இடையேயான தகவல் பரிமாற்றத்துக்காக ஒரு புதிய வாட்சப் தளத்தை (WhatsApp channel) பள்ளிக்கல்வித்துறை செயல்படுத்த உள்ளது. வாட்ஸ்-அப் செயலி வாயிலாக இந்த தளத்தை செயல்படுத்துவதற்கு பள்ளிக்கல்வித்துறை மெட்டா நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.
இந்தியா
யுனெஸ்கோவின் 2024-ஆம் ஆண்டுக்கான உலக ஆசியா-பசுபிக் பிராந்திய நினைவு பட்டியலில் (UNESCO's Memory of the World Asia-Pacific Regional Register) ராமசரிதமானஸ் (Ramcharitmanas), பஞ்சதந்திர கதைகள் (Panchatantra) மற்றும் ‘சஹ்ருதயலோக-லோசனா’(Sahṛdayāloka-Locana) கதைகளின் கையெழுத்துப் பிரதி மற்றும் பஞ்சதந்திர கதைகளின் கையெழுத்துப் பிரதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. ‘சஹ்ருதயலோக-லோசனா’ வை ஆச்சார்ய ஆனந்த்வர்தன் என்பவரும், பஞ்சதந்திர கதைகளை விஷ்ணு சர்மாவும், ராமசரிதமானஸை கோஸ்வாமி துளசிதாசும் எழுதியுள்ளார்கள்.
துடிப்பான கிராமத் திட்டம் (Vibrant Village Program (VVP)) : பிப்ரவரி 15, 2023 அன்று அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட துடிப்பான கிராமத் திட்டம் (Vibrant Village Program (VVP)) இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான எல்லையில் உள்கட்டமைப்பு மற்றும் குடியேற்ற ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. அருணாச்சலப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், சிக்கிம், உத்தரகண்ட் மற்றும் லடாக் ஆகிய 19 மாவட்டங்களில் உள்ள 46 எல்லைத் தொகுதிகளில் பரவியுள்ள 2,967 கிராமங்களில் உள்ள மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதே இந்தத் திட்டத்தின் குறிக்கோளாகும். . இந்த திட்டத்தின் முக்கிய குறிக்கோள், வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது மற்றும் மக்கள்தொகை கொண்ட முன்னணியில் இருப்பதன் மூலம் எல்லைப் பாதுகாப்பை மேம்படுத்துவதன் மூலம் மக்கள் எல்லை நகரங்களை விட்டு வெளியேறுவதைத் தடுப்பதாகும்.
இடை-சேவைகள் அமைப்புகளின் (கட்டளை, கட்டுப்பாடு மற்றும் ஒழுக்கம்) சட்டம், 2023 (Inter-Services Organisations (Command, Control and Discipline) Act, 2023), மே 10, 2024 முதல் பாதுகாப்பு அமைச்சகத்தால் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்திய இராணுவம் (Indian Army (IA)), இந்திய விமானப்படை (Indian Air Force (IAF)), இந்திய விமானப்படை (Indian Navy (IN)) ஆகியவற்றின் திறன்களை ஒருங்கிணைக்கும் நோக்கத்துடன் கொண்டுவரப்பட்டுள்ள இந்த சட்டம் போர்கள் மற்றும் இராணுவ நடவடிக்கைகளின் போது திறமையான வளப் பயன்பாட்டை உறுதி செய்வதற்காக இடை-சேவை அமைப்புகளின் (Inter-Services Organisations (ISOs)) தலைவர்களுக்கு ஒழுங்கு மற்றும் நிர்வாக அதிகாரங்களை வழங்குகிறது. ஆகஸ்ட் 15, 2023 அன்று குடியரசுத் தலைவரால் அங்கீகரிக்கப்பட்ட இந்த சட்டமானது, இடை-சேவை அமைப்புகளின் தலைமைத் தளபதிகள் (Commanders-in-Chief (CIC)) மற்றும் அதிகாரிகள் (Officers-in-Command (OIC)) சேவைப் பணியாளர்கள் மீது ஒழுங்கு மற்றும் நிர்வாகக் கட்டுப்பாட்டைப் பயன்படுத்த அதிகாரம் அளிக்கிறது. .
உலகம்
14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை ஆஸ்திரேலியாவின் தெற்கு ஆஸ்திரேலியா மாகாணத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது.
வெளிநாட்டு உறவுகள்
மாலத்தீவுக்கு வழங்கப்படும் வட்டியில்லா கடனான 5 கோடி டாலா் நிதி உதவியை அந்நாட்டு அரசின் கோரிக்கையையெற்று பாரத ஸ்டேட் வங்கி மேலும் ஓராண்டுக்கு இந்தியா நீட்டித்துள்ளது.
இந்தியா - பிரான்ஸ் கூட்டு ராணுவப் பயிற்சி ”சக்தி” (SHAKTI) இன் 7-வது பதிப்பு மேகாலயாவின் உம்ரோயில் உள்ள முழுமையாக மேம்படுத்தப்பட்ட மற்றும் நவீன வெளிநாட்டு பயிற்சி முனையில் மே 13-26 தேதிகளில் நடைபெறுகிறது. பல்வேறு துறைகளில் பல்துறை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் இரு தரப்பிலும் கூட்டு ராணுவத் திறனை மேம்படுத்துவதே சக்தி பயிற்சியின் நோக்கமாகும்.
ஈரானின் சபாகர் துறைமுகத்தை 10 ஆண்டுகள் குத்தகைக்கு இந்தியா பெற்றிருக்கிறது. இதுதொடர்பாக இரு நாடுகள் இடையே ஒப்பந்தம் 13.05.2024 அன்று கையெழுத்தாகி உள் ளது.
இந்த ஒப்பந்தத்தின் இராஜதந்திர முக்கியத்துவம்
சீனாவின் 'ஒரே பாதை, ஒரேமண்டலம்' திட்டத்தின் கீழ் பாகிஸ்தானின் குவாதர் நகரில் உள்ள துறைமுகத்தை சீன அரசு நிர்வகித்து வருகிறது. இதன்மூலம் வளைகுடா நாடுகள், மத்திய ஆசிய நாடுகள், ஐரோப்பிய நாடுகளுடனான கடல் வழி சரக்கு போக்குவரத்தை சீனா அதிகரித்து வருகிறது.
சீனாவுக்கு போட்டியாக குவாதர் துறைமுகத்தில் இருந்து 72 கி.மீ. தொலைவில் உள்ள ஈரானின் சபாகர் துறைமுகத்தை இந்தியா குத்தகைக்கு பெற்றிருக்கிறது.
இதன் மூலம், ஈரானின் சபாகர் துறைமுகம் வழியாக மத்திய ஆசிய நாடுகள், ரஷ்யா, ஐரோப்பிய நாடுகளுக்கு சரக்குகள் அனுப்பப்பட்டு, அந்த நாடுகளில் இருந்துஇயற்கை எரிவாயு, கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது. எனவே, 30 சதவீதம் அளவுக்கு போக்குவரத்து செலவு குறைகிறது.
கூ.தக. ஈரானின் சபாகர் துறைமுகம் தொடர்பாக கடந்த 2003-ம் ஆண்டு அப்போதைய இந்திய பிரதமர் வாஜ்பாயும், அன்றைய ஈரான் அதிபர் கடாமியும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இரு நாடுகளிடையே கடந்த 2016-ம் ஆண்டில் சபாகர் துறைமுக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது. கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் 24-ம் தேதி முதல் சபாகரின் சாகித் முகமது பெஹஷ்டி துறைமுகத்தை குத்தகை அடிப்படையில் இந்தியா நிர்வகித்து வருகிறது. இந்த குத்தகை ஓராண்டுக்கு ஒருமுறை நீட்டிக்கப்பட்டு வந்தது. தற்போது நீண்ட கால அடிப்படையில் ஈரானின் சபாகரில் உள்ளசாகித் முகமது பெஹஷ்டி துறைமுகத்தை 10 ஆண்டுகள் குத்தகைக்கு இந்தியா பெற்றிருக்கிறது.
நேபாள நாட்டின் புதிய 100 ரூபாய் நோட்டு வரைபடத்தில் சர்ச்சைக்குரிய லிபுலேக், லிம்பியாதுரா மற்றும் காலாபானி ஆகிய இந்திய பகுதிகள் அடங்கிய வரைபடத்தை இணைத்து அச்சடிக்கப்பட்டுள்ளன.
பொருளாதாரம்
2024 ஆம் நிதியாண்டில் (2023-24), 118.4 பில்லியன் டாலர் இருவழி வர்த்தகத்துடன், இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக பங்காளியாக சீனா உருவெடுத்துள்ளது. அதேசமயம், 118.3 பில்லியன் அமெரிக்க டாலர்களுடன் அமெரிக்கா 2023-24ல் இந்தியாவின் 2வது பெரிய வர்த்தகப் பங்காளியாக இருந்துள்ளது. இந்த தகவலை Global Trade Research Initiative(GTRI) எனும் அமைப்பு வெளியிட்டுள்ளது.
விருதுகள்
புகழ்பெற்ற பிரிட்டிஷ்-இந்திய எழுத்தாளரான ரஸ்கின் பாண்டிற்கு (Ruskin Bond) மதிப்புமிக்க சாகித்ய அகாடமி பெல்லோஷிப் (Sahitya Akademi Fellowship) வழங்கப்பட்டுள்ளது. “The Blue Umbrella,” “Rusty, the Boy from the Hills,”“The Room on the Roof,” ஆகிவை ரஸ்கின் பாண்ட் எழுதிய முக்கிய நூல்கள் ஆகும்.
முக்கிய தினங்கள்
உலக வலசை போகும் (புலம்பெயரும்) பறவைகள் தினம் (World Migratory Bird Day 2024) - மே 11
கூ.தக. : புலம்பெயர்ந்த பறவைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அவற்றையும் அவற்றின் வாழ்விடங்களையும் பாதுகாக்க சர்வதேச ஒத்துழைப்பின் அவசியத்தை ஏற்படுத்துவதற்காகவும், மே மற்றும் அக்டோபர் மாதங்களில் 2வது சனிக்கிழமைகளில் உலகம் முழுவதும் ஆண்டுக்கு இருமுறை உலக வலசை போகும் (புலம்பெயரும்) பறவைகள் தினம் அனுசரிக்கப்படுகிறது.
அறிவியல் தொழில்நுட்பம்
‘AM PS4 Engine’ என்று பெயரிடப்பட்டுள்ள, 3டி பிரிண்டிங் (3D printing) எனப்படும் சேர்க்கை உற்பத்தி தொழில்நுட்பத்தைப் (Additive Manufacturing (AM) technology) பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட திரவ ராக்கெட் இயந்திரத்தை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தமிழ்நாட்டின் மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ ப்ராபல்ஷன் வளாகத்தில் (ISRO Propulsion Complex, Mahendragiri) வெற்றிகரமாக சோதித்தது.
NGC 4151 விண்மீனில் இரும்பு எச்சங்கள் (Iron Fingerprints) இருப்பதாக கண்டுபிடிப்பு : அமெரிக்காவின் NASA மற்றும் ஜப்ப்பானின் JAXA ஆகியவற்றின் கூட்டு எக்ஸ்-ரே விண்வெளி தொலைநோக்கி திட்டமான XRISM XRISM (X-Ray Imaging and Spectroscopy Mission) 43 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள NGC 4151 என்ற விண்மீனில் இரும்பு எச்சங்கள் இருப்பதாக கண்டுபிடித்துள்ளது.
NGC 4151 பற்றி: NGC 4151 என்பது ஒரு சுழல் விண்மீன் ஆகும், இது கேன்ஸ் வெனாட்டிசி (Canes Venatici) என்ற வடக்கு விண்மீன் தொகுப்பில் 43 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. அதன் மையத்தில் உள்ள பிரம்மாண்டமான கருந்துளை சூரியனின் நிறையை விட 20 மில்லியன் மடங்கு அதிகமாக உள்ளது. இது ஒரு செயலில் உள்ள விண்மீன் (active galaxy) ஆகும்.
விளையாட்டு
ஒடிஸாவில் நடைபெற்ற தேசிய ஃபெடரேஷன் கோப்பை தடகள சாம்பியன்ஷிப்பில் மகாராஷ்டிர வீராங்கனை அபா கதுவா, குண்டு எறிதலில் 18.41 மீட்டர் தொலைவுக்கு எறிந்து புதிய தேசிய சாதனை படைத்தாா்.முன்னதாக பஞ்சாபின் மன்பிரீத் கௌா், அபா கதுவா இருவருமே 18.06 மீட்டருக்கு குண்டு எறிந்ததே சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.