நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

Current Affairs 8th December 2018 | நடப்பு நிகழ்வுகள் 8 டிசம்பர் 2018

TNPSC Current Affairs 8th December 2018
☞   Previous Days' Current Affairs Notes
☞  Today / Previous Days' Current Affairs Quiz

இந்தியா

  • மத்திய உள்துறை அமைச்சகத்தின், “சாட்சிகள் பாதுகாப்பு திட்டம் 2018” (Witness Protection Scheme 2018) வரைவிற்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது.   சாட்சிகளின் அடையாளத்தின் இரகசியத்தை காத்திடவும், சாட்சிகளை வீடியோ வழியாக விசாரிப்பதற்கான வசதிகள் உருவாக்கிடவும், சாட்சிகளுக்கு  தீவிர  வழக்குகளின் போது பாதுகாப்பினை வழங்கிடவும்  இந்த திட்டம்  வழிவகை செய்கிறது. சாட்சி பாதுகாப்பு நிதி (Witness Protection Fund) உருவாக்கப்படவும் இந்த திட்டம் உறுதிசெய்கிறது.
  • கள்ளக்கடத்தலுக்கெதிரான தேசிய ஒருங்கிணைப்பு மையத்தை ( Anti-Smuggling National Coordination Centre (SCord)) உருவாக்குவதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மத்திய வருவாய் புலனாய்வு இயக்ககத்தின் கீழ் (Directorate of Revenue Intelligence (DRI)) கீழ் செயல்படும் இந்த அமைப்பானது, கள்ளக்கடத்துதலுக்கெதிரான தேசிய கொள்கை உருவாக்க உதவியாக இருக்கும். எல்லை பாதுகாப்புப் படை, அஸ்ஸாம் ரைபிள்ஸ், இந்தோ திபெத் எல்லை படை மற்றும் கடலோரக் காவல் படை ஆகியவை இந்த அமைப்பின் உறுப்பினர்களாக இருக்கும்.
  • "ஏஐ 4 அனைத்துலக ஹேக்கத்தான் (AI 4 All Global Hackathon) என்ற பெயரில், செயற்கை நுண்ணறிவுத் தொடர்பான உலகளாவிய ஹேக்கத்தானை நிதி ஆயோக் தொடங்கியது. தேசிய செயற்கை நுண்ணறிவு அணுகுமுறையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைவருக்கும் செயற்கை நுண்ணறிவு என்ற கருத்தை விரிவாக்கும் நோக்கத்துடன் நிலைத்த, புதுமையான தொழில்நுட்ப அடிப்படையிலான தீர்வுகள் மூலம் மேம்பாட்டுக்கான சவால்களை எதிர்கொள்ளும் வழிவகைகளை காண நிதி ஆயோக் இந்த ஹேக்கத்தானுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த ஹேக்கத்தானை நடத்துவதற்கு “பெர்லின்” (Perlin) என்ற சிங்கப்பூர் நிறுவனத்துடன் நிதி அயோக் ஒப்பந்தம் செய்துள்ளது.
  • சர்வதேச அளவில், பொருளாதாரத்தில் வேகமாக வளரும் நகரங்களின் பட்டியலில், முதல் இருபது இடங்களில் 17 இடங்களை இந்திய நகரங்கள் பிடித்துள்ளன. முதல் 10 இடங்களில் தமிழகத்தைச் சேர்ந்த திருப்பூர்(6), திருச்சி(8) மற்றும் சென்னை(9) ஆகிய மூன்று நகரங்கள் உள்ளன.
    • எதிர்கால ஜிடிபி (உள்நாட்டு மொத்த உற்பத்தி) அடிப்படையில் 2019 முதல் 2035 வரை பொருளாதாரத்தில் வேகமாக வளரவுள்ள நகரங்களின் பட்டியலில் குஜராத்தின் சூரத் நகரம் முதல் இடத்திலும், ஆக்ரா 2வது இடத்திலும் உள்ளன. 3வது இடத்தில் பெங்களூரு, 4வது இடத்தில் ஹைதராபாத், 5வது இடத்தில் நாக்பூர், 6வது இடத்தில் திருப்பூர், 7 வது இடத்தில் ராஜ்கோட், 8 வது இடத்தில் திருச்சி, 9 வது இடத்தில் சென்னை, 10 வது இடத்தில் விஜயவாடா உள்ளது.
  • தூய்மையான கடல் - 2018” (Clean Sea-2018) என்ற பெயரில் இந்திய கடலோரக் காவல்படையின் பிராந்திய அளவிலான கடலில் எண்ணை மாசுபாட்டை எதிர்கொள்வதற்கான தயார்நிலை ஒத்திகை  அந்தமான் & நிக்கோபாரிலுள்ள போர்ட் பிளேரில் 6-12-2018 அன்று நடைபெறறது.

உலகம்

  • சீனாவின் “பட்டை மற்றும் பாதை முன்னெடுப்பில் ( Belt and Road Initiative (BRI)) இணைந்துள்ள முதல் மத்திய அமெரிக்க நாடு எனும் பெயரை “பனாமா நாடு பெற்றுள்ளது.
சீனாவின் பட்டை ஒன்று பாதை ஒன்று  (One Belt One Road (OBOR) ) பற்றி 
  • ”பட்டை ஒன்று பாதை ஒன்று” அல்லது பட்டு சாலை பொருளாதார பட்டை / 21 ஆம் நூற்றாண்டின் கடல்வழிப் பட்டு பாதை (Silk Road Economic Belt and the 21st-century Maritime Silk Road) எனப்படும் திட்டம் சீனா முன்னெடுத்துள்ள ஒரு உலகளவிலான பொருளாதார ஒத்துழைப்பு செயல்திட்டமாகும்.
  • ஐரோப்பிய - ஆசிய நாடுகளுக்கிடையே இணைப்புகளையும், ஒத்துழைப்பையும் வலுப்படுத்துவதைக் குவிமையமாகக் கொண்ட இந்த உத்தியில் நிலவழி பட்டுச் சாலைப் பொருளாதாரப் பட்டை, கடல்வழி பட்டுப் பெரும்பாதை ஆகிய இரண்டு முக்கியப் பகுதிகள் உள்ளன.
  • இந்த திட்டத்தை சீன அதிபர் ஜி ஜின்பிங் செப்டம்பர் 2013 ல் முதல்முறையாக அறிவித்தார்.
  • ஐ.நா. சபையில் பாலஸ்தீன இயக்கத்துக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானம் தோல்வி :
    • பாலஸ்தீனத்தில் ஹமாஸ் இயக்கம் இஸ்ரேலை மீட்டு, பாலஸ்தீனத்தின் மேற்கு கரை, காசா பகுதிகளுடன் இணைத்து இஸ்லாமிய குடியரசாக மாற்றும் நோக்கத்துடன்  போராடி வருகிறது. இந்த இயக்க போராளிகள் சமீப காலமாக பாலஸ்தீனத்தில் இருந்து இஸ்ரேல் மீது ராக்கெட் வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்தநிலையில், இஸ்ரேல் மீது ஹமாஸ் இயக்க போராளிகள் நடத்திய ராக்கெட் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் தீர்மானம் ஒன்றை நியூயார்க் நகரில் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் அமெரிக்கா கொண்டு வந்தது.
    • இந்த தீர்மானம் நிறைவேற மூன்றில் இரு பங்கு உறுப்பினர்கள் ஆதரவாக ஓட்டு போட வேண்டும். ஆனால் ஓட்டெடுப்பில் தீர்மானத்துக்கு ஆதரவாக 87 உறுப்பினர்கள் ஓட்டு போட்டனர்.  எதிராக 57 பேர் ஓட்டு போட்டனர். இந்தியா உட்பட 32 நாடுகள் ஓட்டெடுப்பை புறக்கணித்தனர். எனவே மூன்றில் இரு பங்கு பெரும்பான்மை கிடைக்காததால் இந்த தீர்மானம் நிறைவேறாமல் தோல்வி கண்டது.

மாநாடுகள் / கூடுகைகள்

  • முதலாவது, “சர்வதேச கரடிகள் மாநாடு (International Conference on Bears) 3-6 டிசம்பர் 2018 தினங்களில் உத்தரப்பிரதேச மாநிலத்திலுள்ள ஆக்ராவில் நடைபெற்றது. இதனை புது தில்லியைத் தலைமையிடமாகக்கொண்ட ‘Wildlife SOS’ என்ற அமைப்பு மற்றும் அமெரிக்கா, கனடா நாடுகளைச் சேர்ந்த கரடிகள் பாதுகாப்பு அமைப்புகளுடன் இணைந்து நடத்தியுள்ளது.
  • தொழில் நிறுவனம்-கல்வி நிறுவனங்களின் ஒருங்கிணைந்த முதல் மாநாட்டை சென்னை ஐஐடி வருகிற 10 டிசம்பர் 2018 அன்று மும்பையில் நடத்த உள்ளது. புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் ஆராய்ச்சிகளுக்கான நிதி ஆதாரங்களில் தொழில்நிறுவனங்களின் பங்களிப்பை அதிகப்படுத்தும் நோக்கத்தில் இந்த முயற்சியை சென்னை ஐஐடி மேற்கொண்டுள்ளது.
    • கூ.தக. : தொழில்நிறுவனங்களின் சமூக பங்களிப்பு (corporate social responsibility (CSR)) திட்டத்தின் கீழ், சமூக மேம்பாட்டுத் திட்டங்களுக்கு நிதி அளிக்கவேண்டும் என்பதை கட்டாயமாக்கிய முதல் நாடு இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காக, 2014 ஆம் ஆண்டில், கம்பனி சட்டம் 2013 (Company Act, 2013)-ல் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.  1 ஏபரல் 2014 முதல் அமலுக்கு வந்த தொழில்நிறுவனங்களின் சமூக பங்களிப்பு விதிமுறைகளின் படி, குறைந்தது, ரூ.500 கோடிக்கு மேல் மொத்த மதிப்புகொண்ட,  ரூ.1000 கோடிகள் வணிகள் செய்யும், குறைந்தது ரூ.5 கோடி இலாபம் ஈட்டும் அனைத்து  இந்தியாவில் தொழில் நடத்தும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களும் தங்கள் இலாபத்தில் 2% த்தை  சமூக பங்களிப்பு திட்டங்களில் செலவிட வேண்டும்.

நியமனங்கள்

  • இந்திய அரசின், புதிய தலைமை பொருளாதார ஆலோசகராக கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர் 3 ஆண்டு காலம் பதவி வகிக்கவுள்ளார். கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன், சிகாகோவில் முனைவர் பட்டம் பெற்றவர். செபி கமிட்டு உறுப்பினராகவும் உள்ளார். பந்தன் வங்கி, தேசிய வங்கி மேலாண்மை நிறுவனம் மற்று ஆர்.பி.ஐ. அகாடமி ஆகியவற்றிலும் முக்கிய பொறுப்புகளில் இருக்கிறார்.

முக்கிய தினங்கள்

  • சர்வதேச உள்நாட்டு விமானப் போக்குவரத்து தினம் (International Civil Aviation Day) - டிசம்பர் 7 | மையக்கருத்து (2018) - எந்த ஒரு நாடும் புறக்கணிக்கப்படாததை உறுதி செய்ய செயல்படுவோம் (Working Together to Ensure No Country is Left Behind)

விருதுகள்

  • மகாகவி பாரதியார் விருது 2018” : தினமணி பத்திரிக்கை வழங்கும்  முதலாவது, மகாகவி பாரதியார் விருது 2018  சீனி. விஸ்வநாதன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது.  இவர், பாரதியாரின் படைப்புகளைப் பல ஆண்டுகள் ஆய்வு செய்து கால வரிசைப்படுத்தி 12 தொகுப்புகளாக வெளியிட்டிருக்கிறார் சீனி. விஸ்வநாதன்.  தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் வழங்கும் இந்த விருதுடன் பாராட்டுப் பத்திரமும் ரூ. ஒரு லட்சத்துக்கான பொற்கிழியும் வழங்கப்படவிருக்கிறது.
  • கிலிங்கா உலக மண் பரிசு 2018” (Glinka World Soil Prize 2018) அமெரிக்க வாழ் இந்தியர் ரத்தன் லாலுக்கு (Rattan Lal) வழங்கப்பட்டுள்ளது. 
  • முதலாவது “உலக மண் தின விருது (World Soil Day Award) வங்காளதேசத்தைச் சேர்ந்த “பிராக்டிகல் ஆக்சன்” (Practical Action) என்னும் அமைப்பிற்கு வழங்கப்பட்டுள்ளது. 

விளையாட்டு

  • சீனாவில் நடைபெற்ற உலக யோகா சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்தின், திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி கே. தர்ஷினி, உலக அளவில் முதலிடம் பெற்று  தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.
Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!